search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரன்பட்டினத்தில்  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் சாமி தரிசனம்
    X

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.

    குலசேகரன்பட்டினத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் சாமி தரிசனம்

    • முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
    • கோவில் செயல் அலுவலர் ,ஆலய ஊழியர்கள் அமைச்சரை வரவேற்றனர்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நாளை மறுநாள் (5-ந் தேதி) நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் மகிஷாசூர சம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையொட்டி திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், மனைவி ஜெயகாந்தியுடன் நேற்று இரவு குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு வந்தார்.அங்கு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆலய ஊழியர்கள் அமைச்சரை வரவேற்றனர்.

    அமைச்சருடன் உடன்குடி யூனியன் சேர்மனும் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசிங், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவர் மால்ராஜேஷ், குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கணேசன், உடன்குடி நகர முன்னாள் செயலாளர் ஜான் பாஸ்கர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவி ராஜா உட்பட தி.மு.க.வினர் பலர் உடன் வந்தனர்.

    Next Story
    ×