என் மலர்
நீங்கள் தேடியது "COW DIED"
- மாடுகள் குளத்தில் இறங்கும்போது சகதியில் சிக்கி கொள்வதால் வெளியே வர முடியாமல் அவை இறந்து போவது வாடிக்கையாகிவிட்டது
- தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மாடுகளை உயிருடன் மீட்டனர்.
உடன்குடி:
உடன்குடி அனல்மின் நிலைய பின்புறம் உப்பு நீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இது எல்லப்பநாயக்கன் குளத்தின் உபரிநீர் தேங்கும் தாழ்வான நீர்ப்பிடிப்பு பகுதி என்பதால் அதன் தரையை உயர்த்த சுற்றுவட்டார பகுதிகளில் மணல் அள்ளி நிரப்பினர். தற்போது ஆபத்தான பகுதியாகிவிட்டது
காடுகளில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் தண்ணீர் குடிக்க குளத்தில் இறங்கும்போது கால்கள் சகதியில் சிக்கி கொள்வதால் வெளியே வர முடியாமல் அவை இறந்து போவது வாடிக்கையாகிவிட்டது. மேலும் இதுஆட்கள் அதிகம் நடமாடாத காட்டுப்பகுதி என்பதால் அதிகம் வெளியே தெரிவதில்லை.
இந்த நிலையில்ஒரு பள்ளத்தில் மாடுகள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பக்கத்து தோட்டக்காரர் சிவலூர்ஜெயராஜ் உடனடியாக திருச்செந்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து மாடுகளை உயிருடன் மீட்டனர். இதில் ஒரு மாடு பலியாகி விட்டது.
- களக்காடு பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் மழை பெய்தது.
- இறந்த மாட்டின் மதிப்பு ரூ 70 ஆயிரம் ஆகும்.
களக்காடு:
திருக்குறுங்குடி அருகே உள்ள செங்குளகுறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (வயது 45). தொழிலாளி. இவர் மாடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று மாலை இவர் தனது வீடு அருகே உள்ள வேப்ப மரத்தில் மாடுகளை கட்டி போட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. மாடுகள் கட்டி போடப்பட்டிருந்த வேப்பமரத்தில் மின்னல் தாக்கியது.
இதில் வேப்பமரம் சேதமடைந்தது. மேலும் மரத்தில் கட்டி போடப்பட்டிருந்த ஒரு பசு மாடும், கோழியும் பலியானது. இறந்த மாட்டின் மதிப்பு ரூ 70 ஆயிரம் ஆகும். மின்னல் தாக்கிய போது, சுந்தரபாண்டி தனது குடும்பத்தினர்களுடன் வெளியே நின்று கொண்டிருந்தார்.
மின்னல் தாக்கிய போது பயங்கர சத்தத்துடன் அதிர்வும் ஏற்பட்டதால் அவர்கள் வீட்டுக்குள் ஓடி விட்டனர். பலியான பசு மாட்டிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சுந்தரபாண்டி வலியுறுத்தியுள்ளார்.
- மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலியானது.
- வயலில் மேய்ந்து கொண்டிருந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தை அடுத்துள்ள விஜயகோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு சொந்தமான பசுமாடு அங்குள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது உயர் மின்னழுத்த கம்பத்தில் இருந்த கம்பிகள் காற்றினால் ஏற்பட்ட உராய்வின் காரணமாக அறுந்து பசு மாட்டின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பசுமாடு பலியானது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் நாராயணசாமி, வருவாய் ஆய்வாளர் ரங்கநாதன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.