களக்காடு அருகே மின்னல் தாக்கி பசுமாடு பலி

களக்காடு பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் மழை பெய்தது. இறந்த மாட்டின் மதிப்பு ரூ 70 ஆயிரம் ஆகும்.
மின்னல் தாக்கியதில் இறந்த மாடு.
மின்னல் தாக்கியதில் இறந்த மாடு.
Published on

களக்காடு:

திருக்குறுங்குடி அருகே உள்ள செங்குளகுறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (வயது 45). தொழிலாளி. இவர் மாடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று மாலை இவர் தனது வீடு அருகே உள்ள வேப்ப மரத்தில் மாடுகளை கட்டி போட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. மாடுகள் கட்டி போடப்பட்டிருந்த வேப்பமரத்தில் மின்னல் தாக்கியது.

இதில் வேப்பமரம் சேதமடைந்தது. மேலும் மரத்தில் கட்டி போடப்பட்டிருந்த ஒரு பசு மாடும், கோழியும் பலியானது. இறந்த மாட்டின் மதிப்பு ரூ 70 ஆயிரம் ஆகும். மின்னல் தாக்கிய போது, சுந்தரபாண்டி தனது குடும்பத்தினர்களுடன் வெளியே நின்று கொண்டிருந்தார்.

மின்னல் தாக்கிய போது பயங்கர சத்தத்துடன் அதிர்வும் ஏற்பட்டதால் அவர்கள் வீட்டுக்குள் ஓடி விட்டனர். பலியான பசு மாட்டிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சுந்தரபாண்டி வலியுறுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com