என் மலர்

  நீங்கள் தேடியது "kangana"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தாகத் திரைப்படத்தைத் தொடர்ந்து கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் எமர்ஜென்சி.
  • எமர்ஜென்சி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

  தாகத் திரைப்படத்தைத் தொடர்ந்து கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார்.

  இப்படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர்  வெளியாகியுள்ளது. ப்ரோமோ வடிவிலான வீடியோ மூலம் டீசரை  படக்குழு வெளியிட்டுள்ளது.


  எமர்ஜென்சி ஃபர்ஸ்ட் லுக்

  இதில், இந்திரா காந்தியைப் போன்ற தோற்றத்துடன் கண்ணாடி அணிந்து கொண்டு காட்டன் சேலையில் காணப்படுகிறார் கங்கனா ரணாவத். வசனங்கள் பேசும் பொழுது உதட்டை உள்ளிழுப்பது என இந்திரா காந்தியின் உடல் மொழியை பிரதிபலிக்க முயன்றுள்ளார்.

  'எமர்ஜென்சி' படத்தின் டீசர்  மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிப்பதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். #Jayalalithaa #JayalalithaaBiopic #Kangana
  முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு தமிழ் சினிமா இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர். பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக உருவாக்கி வருகிறார்.

  விஜய் இயக்கும் படமான ‘தலைவி’ படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிப்பதாக கூறப்பட்டது. இந்தநிலையில் அவரது தேதிகள் உரிய நேரத்தில் கிடைக்காததால் தற்போது, ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

  இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இவர் ஜான்சி ராணியாக நடித்து இயக்கிய ‘மணிகர்ணிகா’ படம் பெரிய வெற்றிபெற்றது. திறமைக்கும், சர்ச்சைக்கும் குறைவே இல்லாத கங்கனா நடித்தால் தலைவி படம் இந்திய அளவில் பேசப்படும் ஒன்றாய் அமையும்.

  ஏ.எல்.விஜய் இயக்கும் முதல் பயோபிக் ‘தலைவி’. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கிறார். மேலும், பாகுபலி படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு இணை கதாசிரியராக இணைய, படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

  கவுதம் மேனன் இயக்கும் தொடரில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், சசிகலாவாக விஜி சந்திரசேகரும் நடிக்கின்றனர். பிரியதர்ஷினி படத்தில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கின்றார். லிங்குசாமி படத்தில் நயன்தாரா நடிக்கலாம் என பேசப்பட்டு வருகிறது. ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிப்பதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


  எங்களால் ஜெயலலிதாவாக கங்கனாவை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நித்யா மேனன் ஜெயலலிதா வேடத்துக்கு சரியாக பொருந்தினார், தென் இந்தியாவில் எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது ஒரு இந்தி நடிகையை, கவர்ச்சியாக நடித்து சர்ச்சைகளை உண்டாக்கும் நடிகையை ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வைப்பதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். #Jayalalithaa #JayalalithaaBiopic #Kangana
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபலமான இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், நடிகை கங்கனாவும் இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். #Kangana
  தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டினார்.

  இது இந்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். 

  இந்த நிலையில், நேற்று நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தனுஸ்ரீ தத்தாவை தொடர்ந்து, இயக்குநர் ஒருவர் மீது நடிகை கங்கனா ரணாவத் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார்.  கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த குயின் படத்தில் நடித்தபொழுது அதன் இயக்குநரான விகாஸ் பாஹல் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என கங்கனா தெரிவித்துள்ளார்.

  கடந்த 2015ம் ஆண்டு பாம்பே வெல்வெட் என்ற திரைப்படத்தின் விளம்பர சுற்றுலாவுக்காக சென்றபொழுது தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என இயக்குநர் விகாஸ் மீது பெண் ஒருவர் குற்றச்சாட்டு எழுப்பினார்.

  எனினும் இந்த விவகாரம் 2 வருடங்களுக்கு முன் முக்கியத்துவம் பெறாமல் தவறி விட்டது. ஆனால், நானா படேகர் விவகாரம் எழுந்துள்ள நிலையில், அந்த பெண் மீண்டும் விகாஸ் விவகாரத்தினை நேற்று எழுப்பினார்.

  இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு ஆதரவாக நடிகை கங்கனா ரணாவத் பேசியுள்ளார். விகாஸ் தன்னிடமும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  இதுபற்றி அவர் கூறும்பொழுது, அந்த பெண்ணை முழுவதும் நான் நம்புகிறேன். கடந்த 2014ம் ஆண்டு விகாசுக்கு திருமணம் நடந்திருந்தபொழுதும், குயின் படப்பிடிப்பு நடந்தபொழுது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நபருடன் பாலியல் உறவில் ஈடுபடுவார்.

  ஒவ்வொரு இரவும் விருந்து நடக்கும். நான் படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுக்க செல்வேன். ஆனால் என்னை தூங்க விடாமல் அவர் கேவலப்படுத்தினார்.

  இந்த படப்பிடிப்பில் ஒவ்வொரு முறை விகாசை நான் சந்திக்கும்பொழுது, வழக்கம் போலான வரவேற்பில் இருவரும் கட்டி கொள்வோம். அவர் எனது கழுத்தில் அவரது முகத்தினை புதைத்து கொள்வார். என்னை இறுக கட்டி கொள்வார். பின்னர் எனது முடியை முகர்ந்திடுவார்.  அவரிடம் இருந்து என்னை விடுவித்து கொள்ள அதிக வலிமையுடன் நான் போராட வேண்டியிருந்தது. அதன்பின் விகாஸ் என்னிடம், நீ எப்படி வாசமுடன் இருக்கிறாய் என்பதனை நான் நேசிக்கிறேன் என கூறுவார். அவரிடம் ஏதோ தவறு உள்ளது என என்னால் கூற முடியும் என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

  விகாஸ் பாஹல், பாந்தம் பிலிம்சின் 4 உரிமையாளர்களில் ஒருவர். விகாஸ் மீது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கூறிய நிலையில், பாந்தம் பிலிம்ஸ் கலைக்கப்படுகிறது என்றும் 4 பேரும் தனி தனியாக செயல்பட உள்ளோம் என்றும் நேற்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  விகாசின் இயக்கத்தில் சூப்பர் 30 படமும், கங்கனாவின் மணிகர்னிகா தி குயின் ஆப் ஜான்சி படமும் அடுத்த வருடம் ஜனவரி 25ந்தேதி ஒரே நாளில் திரையிடப்பட உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், வீடு தரகரை ஏமாற்றியதாக வந்த புகாருக்கு விளக்கம் அளித்துள்ளார். #KanganaRanaut
  பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் மும்பை பாந்த்ரா பாலிஹில் பகுதியில் 3075 சதுர அடி பங்களா வீட்டை ரூ.20.07 கோடி கொடுத்து விலைக்கு வாங்கி உள்ளார். இந்த வீட்டை வாங்குவதற்கு பிரகாஷ் என்ற தரகர் ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டு உதவி செய்துள்ளார்.

  ஆனால் பேசியபடி கங்கனா ரணாவத் தரகர் கமிஷன் கொடுக்கவில்லை என்று பாந்த்ரா போலீசில் தரகர் பிரகாஷ் புகார் செய்தார். இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கங்கனா ரணாவத்துக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த விவகாரம் குறித்து கங்கனா ரணாவத் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-  “பாலி ஹில் பகுதியில் கடந்த வருடம் இந்த பங்களா விட்டை வாங்கினேன். அப்போது புரோக்கர் கமிஷன் ஒரு சதவீதம் என்று பேசி அதற்கான தொகை ரூ.22 லட்சம் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் இப்போது இரண்டு சதவீதம் புரோக்கர் கமிஷனாக மேலும் ரூ.22 லட்சம் கேட்கின்றனர். இதற்காக என்னை தொந்தரவு செய்கிறார்கள். இதுகுறித்து போலீசாரிடம் தெளிவுபடுத்தி உள்ளோம்.”

  இவ்வாறு அவர் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதலர்களாக இருந்து தற்போது எதிரிகளாக மாறி பல கருத்துக்களை கூறி வரும் கங்கனாவும், ஹிருத்திக்கும் மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். #Hirthik #Kangana
  இந்தி சினிமாவில் முன்னாள் காதலர்களும் இந்நாள் எதிரிகளுமான கங்கனா ரணாவத்- ஹிருத்திக் மீண்டும் ஜோடியாக நடிக்கவுள்ளனர். ஒருவரைப் பற்றி ஒருவர் தொடர்ந்து மீடியாக்களுக்குத் எதிர்மறை செய்திகளை கொடுத்துக்கொண்டிருந்த இருவரையும் இணைத்தது ஹிருத்திக்கின் தந்தை ராகேஷ் ரோ‌ஷன். 

  தன் பிறந்தநாளுக்கு சர்ப்ரைசாக இருவரையும் வரவழைத்து சந்திக்க வைத்து இருக்கிறார். இதனால் மனைவி சூசனை விவாகரத்து செய்துவிட்டுத் தனியாக வாழும் ஹிருத்திக்கும் கங்கனாவும் மீண்டும் காதலில் விழுந்துள்ளனர் என கிசுகிசு வர ஆரம்பித்திருக்கிறதாம்.  ஆனால், `எங்களுக்குள் இருப்பது உண்மையான நட்பு மட்டுமே’ என இருவரும் சேர்ந்து பேட்டி கொடுத்திருக்கிறார்களாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், ரஜினியுடன் மோத இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Rajini #Rajinikanth #Kangana
  பிரபல இந்தி பட நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் நடித்தவர். அதன் பிறகு இந்திப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். குயின் படம் மூலம் தேசிய விருது வாங்கி இந்திய அளவில் புகழ்பெற்றவர். அவர் அடுத்து நடிக்கும் படம் மணிகர்ணிகா.

  சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய ராணியான ஜான்சிராணியின் வாழ்க்கை வரலாற்று படமான இதை கிரிஷ் இயக்குகிறார். இதற்காக கங்கனா வாள் சண்டை, குதிரையேற்றம் உள்ளிட்ட பலவித போர் பயிற்சிகளை எடுத்து இருக்கிறார். இந்த படம் முதலில் ஏப்ரலில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு முடியாததால் ஆகஸ்டு மாதத்திற்கு தள்ளிப்போனது.  ஆனால் ஆகஸ்டிலும் வெளியாவது சிரமம் என்று நவம்பர் 29-ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இவர்கள் அறிவித்திருக்கும் தேதியில் தான் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் 2.0 வெளியாக இருக்கிறது. இந்த மோதலை தவிர்க்க 3வது முறையாக மணிகர்ணிகா படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பார்களா என்பது தான் பாலிவுட்டில் கேள்வியாக எழுந்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது அடுத்த படத்திற்காக கபடி வீராங்கனையாக மாற இருக்கிறார். #KanganaRanaut #Kangana
  தமிழில் தனுஷ் தயாரிப்பில் அமலா பால் நடித்த அம்மா கணக்கு திரைப்படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர் திவாரி. இவர் அடுத்து பெண்கள் கபடியை மையமாக வைத்து படம் இயக்குகிறார். இதில் கங்கனா ஹீரோயினாக நடிக்கிறார். 

  இந்தப் படத்தில் நடிப்பதற்காக கபடி நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள இருக்கிறார் கங்கனா. கபடி விளையாடி பயிற்சி பெறவும் இருக்கிறார். ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர் வரை இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கின்றது. 

  இந்தியில் விளையாட்டை மையமாக வைத்து அதிகமான படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுவருகின்றன. அந்த வரிசையில் கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.   கங்கனா நடிப்பில் அடுத்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் திரைப்படம் இயக்குனர் கிரிஷ் இயக்கியுள்ள மணிகார்னிகா: தி குயின் ஆப் ஜான்சி. இப்படம் ராணி லட்சுமிபாயின் வரலாறை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படமாகும்.
  ×