என் மலர்
நீங்கள் தேடியது "tag 163289"
'தாகத்' திரைப்படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கங்கனா ரனாவத் அதிரடி முடிவெடுத்துள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள 'தாகத்' திரைப்படம் கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கங்கனா ரனாவத் ஆக்ஷன் நாயகியாக களமிறங்கி இருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் 'தாகத்' திரைப்படம், எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் அதன் ஒட்டுமொத்த வசூல், தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 90 கோடி மதிப்பில் தயாரான இந்த திரைப்படம், வெறும் 3 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கங்கனா
'தாகத்' திரைப்படத்தின் தோல்வியை அடுத்து கங்கனா ரனாவத் மீண்டும் இயக்குனராகியுள்ளார். இந்த திரைப்படம் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் அவரது எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் தொகுத்து திரைப்படமாக உருவாகவுள்ளது. மேலும் இந்த படத்திற்கு “எமர்ஜென்சி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்குமுன் கங்கனா ரனாவத் இயக்கி நடித்த படம் “மணிகர்னிகா” மிகப்பெரிய வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலமான இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், நடிகை கங்கனாவும் இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். #Kangana
தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டினார்.
இது இந்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நிலையில், நேற்று நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனுஸ்ரீ தத்தாவை தொடர்ந்து, இயக்குநர் ஒருவர் மீது நடிகை கங்கனா ரணாவத் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த குயின் படத்தில் நடித்தபொழுது அதன் இயக்குநரான விகாஸ் பாஹல் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என கங்கனா தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு பாம்பே வெல்வெட் என்ற திரைப்படத்தின் விளம்பர சுற்றுலாவுக்காக சென்றபொழுது தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என இயக்குநர் விகாஸ் மீது பெண் ஒருவர் குற்றச்சாட்டு எழுப்பினார்.
எனினும் இந்த விவகாரம் 2 வருடங்களுக்கு முன் முக்கியத்துவம் பெறாமல் தவறி விட்டது. ஆனால், நானா படேகர் விவகாரம் எழுந்துள்ள நிலையில், அந்த பெண் மீண்டும் விகாஸ் விவகாரத்தினை நேற்று எழுப்பினார்.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு ஆதரவாக நடிகை கங்கனா ரணாவத் பேசியுள்ளார். விகாஸ் தன்னிடமும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்பொழுது, அந்த பெண்ணை முழுவதும் நான் நம்புகிறேன். கடந்த 2014ம் ஆண்டு விகாசுக்கு திருமணம் நடந்திருந்தபொழுதும், குயின் படப்பிடிப்பு நடந்தபொழுது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நபருடன் பாலியல் உறவில் ஈடுபடுவார்.
ஒவ்வொரு இரவும் விருந்து நடக்கும். நான் படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுக்க செல்வேன். ஆனால் என்னை தூங்க விடாமல் அவர் கேவலப்படுத்தினார்.
இந்த படப்பிடிப்பில் ஒவ்வொரு முறை விகாசை நான் சந்திக்கும்பொழுது, வழக்கம் போலான வரவேற்பில் இருவரும் கட்டி கொள்வோம். அவர் எனது கழுத்தில் அவரது முகத்தினை புதைத்து கொள்வார். என்னை இறுக கட்டி கொள்வார். பின்னர் எனது முடியை முகர்ந்திடுவார்.

அவரிடம் இருந்து என்னை விடுவித்து கொள்ள அதிக வலிமையுடன் நான் போராட வேண்டியிருந்தது. அதன்பின் விகாஸ் என்னிடம், நீ எப்படி வாசமுடன் இருக்கிறாய் என்பதனை நான் நேசிக்கிறேன் என கூறுவார். அவரிடம் ஏதோ தவறு உள்ளது என என்னால் கூற முடியும் என்று கங்கனா தெரிவித்துள்ளார்.
விகாஸ் பாஹல், பாந்தம் பிலிம்சின் 4 உரிமையாளர்களில் ஒருவர். விகாஸ் மீது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கூறிய நிலையில், பாந்தம் பிலிம்ஸ் கலைக்கப்படுகிறது என்றும் 4 பேரும் தனி தனியாக செயல்பட உள்ளோம் என்றும் நேற்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விகாசின் இயக்கத்தில் சூப்பர் 30 படமும், கங்கனாவின் மணிகர்னிகா தி குயின் ஆப் ஜான்சி படமும் அடுத்த வருடம் ஜனவரி 25ந்தேதி ஒரே நாளில் திரையிடப்பட உள்ளது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், வீடு தரகரை ஏமாற்றியதாக வந்த புகாருக்கு விளக்கம் அளித்துள்ளார். #KanganaRanaut
பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் மும்பை பாந்த்ரா பாலிஹில் பகுதியில் 3075 சதுர அடி பங்களா வீட்டை ரூ.20.07 கோடி கொடுத்து விலைக்கு வாங்கி உள்ளார். இந்த வீட்டை வாங்குவதற்கு பிரகாஷ் என்ற தரகர் ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டு உதவி செய்துள்ளார்.
ஆனால் பேசியபடி கங்கனா ரணாவத் தரகர் கமிஷன் கொடுக்கவில்லை என்று பாந்த்ரா போலீசில் தரகர் பிரகாஷ் புகார் செய்தார். இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கங்கனா ரணாவத்துக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த விவகாரம் குறித்து கங்கனா ரணாவத் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

“பாலி ஹில் பகுதியில் கடந்த வருடம் இந்த பங்களா விட்டை வாங்கினேன். அப்போது புரோக்கர் கமிஷன் ஒரு சதவீதம் என்று பேசி அதற்கான தொகை ரூ.22 லட்சம் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் இப்போது இரண்டு சதவீதம் புரோக்கர் கமிஷனாக மேலும் ரூ.22 லட்சம் கேட்கின்றனர். இதற்காக என்னை தொந்தரவு செய்கிறார்கள். இதுகுறித்து போலீசாரிடம் தெளிவுபடுத்தி உள்ளோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.
காதலர்களாக இருந்து தற்போது எதிரிகளாக மாறி பல கருத்துக்களை கூறி வரும் கங்கனாவும், ஹிருத்திக்கும் மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். #Hirthik #Kangana
இந்தி சினிமாவில் முன்னாள் காதலர்களும் இந்நாள் எதிரிகளுமான கங்கனா ரணாவத்- ஹிருத்திக் மீண்டும் ஜோடியாக நடிக்கவுள்ளனர். ஒருவரைப் பற்றி ஒருவர் தொடர்ந்து மீடியாக்களுக்குத் எதிர்மறை செய்திகளை கொடுத்துக்கொண்டிருந்த இருவரையும் இணைத்தது ஹிருத்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன்.
தன் பிறந்தநாளுக்கு சர்ப்ரைசாக இருவரையும் வரவழைத்து சந்திக்க வைத்து இருக்கிறார். இதனால் மனைவி சூசனை விவாகரத்து செய்துவிட்டுத் தனியாக வாழும் ஹிருத்திக்கும் கங்கனாவும் மீண்டும் காதலில் விழுந்துள்ளனர் என கிசுகிசு வர ஆரம்பித்திருக்கிறதாம்.

ஆனால், `எங்களுக்குள் இருப்பது உண்மையான நட்பு மட்டுமே’ என இருவரும் சேர்ந்து பேட்டி கொடுத்திருக்கிறார்களாம்.






