என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையேயான கபடி, கைப்பந்து போட்டிகள்
- போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 12 பள்ளிகள் கபடி போட்டியிலும், 12 பள்ளிகள் கைப்பந்து போட்டியிலும் பங்கேற்றன.
- சிறந்த ஆட்டக்காரருக்கான விருதுக்கு தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் தமிழ்செல்வன் தேர்வு செய்யப்பட்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் வெற்றி கேடயத்துக்கான கபடிப்போட்டியும், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனா் வெற்றி கேடயத்துக்கான கைப்பந்து போட்டியும் நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 12 பள்ளிகள் கபடி போட்டியிலும், 12 பள்ளிகள் கைப்பந்து போட்டியிலும் பங்கேற்றன.
போட்டிகளை ஆதித்தனார் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். கல்லூரி உள்தரஉறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் மாணவரும், இந்திய அணியின் கைப்பந்து வீரருமான மங்கள ஜெயபால் கலந்து கொண்டார். தொடர்ந்து கபடி போட்டிகள் செயற்கை தரையிலும், கைப்பந்து போட்டிகள் மாலையில் மின்னொளியிலும் நடைபெற்றன.
கபடி போட்டியில் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளியும், 2-வது பரிசை திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ேமல்நிலைப்பள்ளியும், 3-வது பரிசை ஆசீர்வாதபுரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளியும், நாலுமாவடி காமராசர் மேல்நிலைப்பள்ளியும் பகிர்ந்து கொண்டன. சிறந்த ஆட்டக்காரருக்கான விருதுக்கு தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் தமிழ்செல்வன் தேர்வு செய்யப்பட்டார். கைப்பந்து போட்டியில், சாயர்புரம் போப் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி 2-வது பரிசையும் வென்றன. மணப்பாடு செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி 3-வது பரிசையும், தூத்துக்குடி செயிண்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி 4-வது பரிசையும் பெற்றன. சிறந்த ஆட்டக்காரர் விருதுக்கு சாயர்புரம் போப் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டார்.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். கல்லூரி ெசயலாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு, கபடி போட்டியில் வெற்றிபெற்ற பள்ளிகளுக்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வெற்றிக்கேடயத்தையும், கைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற பள்ளிகளுக்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் வெற்றிக் கேடயத்தையும் வழங்கி பாராட்டினார். போட்டிகளின் அமைப்பாளர் மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். விழாவில் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர்கள், வேலாயுதம், மாலைசூடும் பெருமாள், பாலகிருஷ்ணன், ேசகர், நூலகர் முத்துக்கிருஷ்ணன், அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை முதல்வர் ஆலோசனைப்படி உள்தரஉறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்