என் மலர்

  நீங்கள் தேடியது "lose"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் 3-வது சுற்றில் தோல்வியை தழுவினார்.
  லண்டன்:

  ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல்நிலை வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) எளிதில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகியோரும் தங்களது 3-வது சுற்றில் வெற்றி கண்டனர்.  பெண்கள் ஒற்றையர் பிரிவில் சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனை வென்றவரும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான சிமோனா ஹாலெப்(ருமேனியா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். அவரை தரவரிசையில் 48-வது இடத்தில் உள்ள சு-வெய் ஹிசை (சீனதைபே) 3-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் 2 மணி 20 நிமிடங்கள் போராடி வீழ்த்தினார். 32 வயதான சு-வெய், விம்பிள்டனில் முதல் முறையாக 4-வது சுற்றை எட்டினார். போட்டித் தரநிலையில் முதல் 10 இடங்களை பெற்ற வீராங்கனைகளில் தற்போது 9 பேர் தோற்று வெளியேறி விட்டது குறிப்பிடத்தக்கது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நமது நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் 2017-18 நிதி ஆண்டில் ரூ.79 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
  புதுடெல்லி:

  நாடு முழுவதும் 9 வங்கி ஊழியர்களின் சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தை நேற்று தொடங்கின. இன்றும் அந்த வேலை நிறுத்தம் தொடர்கிறது.

  இந்த சூழலில் நமது நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் 2017-18 நிதி ஆண்டில் ரூ.79 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

  மேலும் ஒரு மணி நேரத்துக்கு இவை ரூ.9 கோடி நஷ்டத்தை சந்திக்கின்றன என்றும் அவை கூறுகின்றன.

  2017-18 நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் அளவு ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் கோடி ஆகும்.

  இதன்மூலம் பொதுத்துறை வங்கிகளின் நஷ்டத்தின் அளவும், வராக்கடன் அளவும் வங்கி வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டி உள்ளன.

  பொதுத்துறை வங்கிகளின் இத்தகைய பரிதாப நிலை காரணமாகத்தான் மத்திய அரசு கடந்த ஆண்டு வங்கிகளின் மறுமுதலீட்டு நிதியாக ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் கோடி வழங்கப்படும் என அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெலினா ஆஸ்டாபென்கோ 5-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் கேத்ரினா கோஸ்லோவாவிடம் வீழ்ந்தார்.
  பாரீஸ்:

  ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 4-ம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா) 6-1, 6-4, 7-6 (7-1) என்ற நேர் செட்டில் முகமது சவாத்தை (எகிப்து) தோற்கடித்தார்.

  பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 5-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் கேத்ரினா கோஸ்லோவாவிடம் (உக்ரைன்) வீழ்ந்தார். பிரெஞ்ச் ஓபனில் நடப்பு சாம்பியன் முதல் சுற்றுடன் வெளியேறுவது கடந்த 13 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதே போல் தரவரிசையில் 85-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனை வாங் குயாங் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் மங்கை வீனஸ் வில்லியம்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தார். 
  ×