search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goodness"

    • முஸ்லீம்களை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கித்தர வேண்டும் என அமைச்சருக்கு மஸ்ஜிதே இப்ராகிம் பள்ளி வாசல் நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அமைச்சர் தனி கவனம் செலுத்தி குறிப்பிட்ட இடத்தை இஸ்லாமிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    மதுரை

    மதுரை ஆனையூர் மஸ்ஜிதே இப்ராகிம் பள்ளி வாசல் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    மதுரை சிலையனேரி ஆனையூர் மற்றும் ரெயிலார் நகர், தினமணி நகர், கோவில் பாப்பாகுடி, விளாங்குடி பகுதிகளில் 1,300-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவர்களது உடல் நல்லடக்கம் செய்ய 10 கி.மீ. தூரத்தில் உள்ள மகபூப் பாளையம் மைய வாடிக்கு உடலை கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    அங்குள்ள 10 செண்ட் நிலத்தில் பல வருடங்களாக 25 பள்ளிவாசலை சேர்ந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அங்கு மண்ணின் தன்மை இழந்துவிட்டதால் உடல்கள் மக்குவதற்கு வெகு நாட்களாகிறது. எனவே அங்கு அடக்கம் செய்ய முடியவில்லை. எனவே ஆனையூர் மல்லிகை நகர் பொது மயானம் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 17 செண்ட் நிலத்தை முஸ்லிம்களை நல்லடக்கம் செய்ய ஒதுக்க வேண்டும்.

    இதுதொடர்பாக வணிக வரித்துறை அமைச்சர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், கிழக்கு மண்டல உதவி ஆணையர் , மண்டல தலைவர் ஆகியோர் நேரில் வந்து இடத்தை பார்வை யிட்டு சென்றனர். ஆனால் அதன்பின் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. எனவே அமைச்சர் தனி கவனம் செலுத்தி குறிப்பிட்ட இடத்தை இஸ்லாமிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தினமும் ஆயுட்ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா மற்றும் பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது.
    • அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் உடனாகிய அபிராமி கோவில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது. இந்த கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். தினமும் ஆயுட்ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா மற்றும் பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும்.

    ஏகதின லட்சார்ச்சனை 108 கலசங்களுடன் அபிஷேகம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு கோவிலில் 108 கலசங்கள் வைத்து ஏகாதின லட்சார்ச்சனை அபிராமி அம்மனுக்கு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசீக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. அபிராமிக்கு அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது. முன்னதாக தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்றது.

    உலக நன்மை வேண்டியும், மக்கள் கொடுர நோய்களிலிருந்து விடுதலை பெறவேண்டி மகேஷ் குருக்கள், சுந்தரமூர்த்தி குருக்கள் உள்ளிட்டோர் சிறப்பு யாகம் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×