திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

தினமும் ஆயுட்ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா மற்றும் பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது.
சிறப்பு யாகம் நடந்தது.
சிறப்பு யாகம் நடந்தது.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் உடனாகிய அபிராமி கோவில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது. இந்த கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். தினமும் ஆயுட்ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா மற்றும் பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும்.

ஏகதின லட்சார்ச்சனை 108 கலசங்களுடன் அபிஷேகம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு கோவிலில் 108 கலசங்கள் வைத்து ஏகாதின லட்சார்ச்சனை அபிராமி அம்மனுக்கு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசீக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. அபிராமிக்கு அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது. முன்னதாக தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்றது.

உலக நன்மை வேண்டியும், மக்கள் கொடுர நோய்களிலிருந்து விடுதலை பெறவேண்டி மகேஷ் குருக்கள், சுந்தரமூர்த்தி குருக்கள் உள்ளிட்டோர் சிறப்பு யாகம் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com