search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "bet"

  • 500-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி பெட்டிங்கை தொடங்கியுள்ளன.
  • பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் இந்திய அணியே உலக கோப்பையை வெல்லும் என பந்தயம் கட்டியுள்ளன.

  புதுடெல்லி:

  13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த மாதம் 5-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்தது.

  உலக கோப்பை போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெ்ட ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று பிற்பகல் நடக்கிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

  உலக கோப்பையை வெல்லப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

  உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடைபெறுகிறது. எந்த அணி உலக கோப்பையை வெல்லும்? என்பது தொடர்பாகவும், யார் சிறப்பாக பேட்டிங் செய்வார்கள், பந்து வீசுவார்கள், எவ்வளவு ஸ்கோர் குவிக்கப்படும் என்பது தொடர்பாக பெட் டிங் கட்டப்பட்டு வருகிறது.

  சுமார் 500-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி பெட்டிங்கை தொடங்கியுள்ளன.

  ரூ.70 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வகையில் இந்த தொகை பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டம் கடந்த மாதம் 14-ந் தேதி அகமதாபாத்தில் நடந்தது. இந்தப் போட்டியின் போது ரூ.40 ஆயிரம் கோடிக்கு பந்தயம் நடைபெற்றது. அதை மிஞ்சும் வகையில் இறுதிப் போட்டியில் ரூ.70 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடக்கிறது.

  பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் இந்திய அணியே உலக கோப்பையை வெல்லும் என பந்தயம் கட்டியுள்ளன. மேலும் இவர்கள் உலக கோப்பை இறுதி ஆட்டம் குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியாக இருக்கும் என்றே கருதுகின்றனா். 300 முதல் 400 ரன் வரை வரும் என்று சிறிய அளவிலான சூதாட்டதரகர்கள் பெட்டிங் கட்டி உள்ளனர்.

  பேட்டிங்கில் ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் மீது பெரும்பாலானோர் பந்தயம் கட்டி உள்ளனர். பந்து வீச்சை பொறுத்த வரையில் முகமது ஷமி மீது அதிகளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. பும்ரா, முகமது சிராஜ் மீதும் பந்தயம் கட்டப்பட்டுள்ளது.

  • அறந்தாங்கி அருகே கட்டுமாவடியில் அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் 9 பேர் மீது வழக்குபதிவு
  • ஆண்டின் முதல் 6 மாதம் வரை பந்தயங்கள் நடத்திக்கொள்ளவும், அதன் பிறகு அனுமதி வழங்கக்கூடாது

  அறந்தாங்கி

  புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேக்ளா பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. அதில் காவல் துறையினர் மருத்துவம், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் போன்ற துறைகளை சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுத்தப் படுகின்றனர். அரசுக்கு செவு ஏற்படுத்துவதோடு அரசு அலுவலர்கள், பொது மக்கள் பணிகள் பாதிக்கப்ப டுகிறது.

  எனவே இதனை கட்டுப்படுத்தும் விதமாக பொங்கல் பண்டிகையிலிருந்து ஆண்டின் முதல் 6 மாதம் வரை பந்தயங்கள் நடத்திக்கொள்ளவும், அதன் பிறகு அனுமதி வழங்கக்கூடாது எனவும் அரசின் சார்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. இந்நிலையில் கட்டுமாவடி ஸ்ரீ வள்ளிதேவயான சமேத கல்யாண சுப்பிரமணிய சாமி ஆலய ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தையம் நடத்திக் கொள்வதாக அப்பகுதி கிராம இளைஞர்கள் சார்பில் மணமேல்குடி காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதற்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்த்துறையினரின் தடையை மீறி கமிட்டி சார்பில் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணமேல்குடி காவல்த்துறையினர், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒன்று கூடி பந்தயம் நடத்திய கமிட்டியாளர்கள் முருகேசன்,ராஜாராம், கார்த்தி, ஹரிஹரசுதன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளனர். 

  ×