search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Volleyball team"

    • ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் வருமான வரி-எஸ்.டி.ஏ.டி. அணிகள் மோதின.
    • பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே 23-25, 25-19, 25-18 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பை வென்றது.

    சென்னை:

    நெல்லை நண்பர்கள் கைப்பந்து கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி.ஜான் மற்றும் ஏ.கே. சித்திரை பாண்டியன் நினைவு மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்றுமாலை தொடங்கியது.

    தொடக்க விழாவுக்கு தமழ்நாடு தடகள சங்க தலைவரும், போட்டி அமைப்புக்குழு தலைவ ருமான டபிள்யூ.ஐ.தேவாரம் தலைமை தாங்கினார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் ஆபாஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், கே.ஏ.ஜி.டெக்னாலஜிஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஜி.ரவிச்சந்திரன், ஒட்டல் லீ பேலஸ் இயக்குனர் ஏ.என். கார்த்திக், போட்டி அமைப்புக்குழு நிர்வாகிகள் பி.ஜெகதீசன், சி.ஸ்ரீகேசவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் வருமான வரி-எஸ்.டி.ஏ.டி. அணிகள் மோதின. இதில் வருமானவரி 25-17, 25-23 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. அணி 19-25, 26-24, 25-23 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்.மை போராடி வென்றது. இன்னொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி 17-25, 20-25 என்ற கணக்கில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. ஐ.ஓ.பி. அணி 2-0 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை வீழ்த்தியது.

    பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே 23-25, 25-19, 25-18 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். 2-0 என்ற கணக்கில் எஸ்.டி.ஏ.டி. அணியை வீழ்த்தியது.

    இன்று நடைபெறும் ஆண்கள் பிரிவு ஆட்டங்க ளில் ஜி.எஸ்.டி-டி.ஜி.வைஷ்ணவா, தமிழ்நாடு போலீஸ்-வருமானவரி, இந்தியன்வங்கி-எஸ்.ஆர்.எம்., ஐ.ஒ.பி.-எஸ்.டி.ஏ.டி. அணிகள் மோதுகின்றன.

    பெண்கள் பிரிவில் ஐ.சி.எப்.-எஸ்.ஆர்.எம்., தமிழ்நாடு போலீஸ்-டாக்டர் சிவந்தி கிளப் அணிகள் மோதுகின்றன.

    ×