search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJD"

    • ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையில் நவீன் பட்நாயக் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
    • பிஜு ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அரிந்தம் ராய் கூறியுள்ளார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி நவீன் பட்நாயக் பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகுவதாகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் விலகுவதாகவும் அரிந்தம் ராய் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அரிந்தம் ராய் அக்கட்சியின் நிறூவனரான நவீன் பட்நாயக்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் திடீரென அக்கட்சியில் இருந்து விலகியிருப்பது ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 2011-ம் ஆண்டு, ஒடிசா முதல்-மந்திரி அலுவலக பொறுப்பில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார்.
    • வி.கே.பாண்டியனுக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் நெருக்கம் இன்னும் அதிகரித்தது

    புவனேஸ்வர்:

    தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன். இவர், 2000-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு, ஒடிசா முதல்-மந்திரி அலுவலக பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு, நவீன் பட்நாயக் 5-வது தடவையாக ஆட்சிக்கு வந்த பிறகு, வி.கே.பாண்டியனுக்கு '5டி செயலாளர்' என்ற கூடுதல் பொறுப்பும் அளிக்கப்பட்டது.

    இதன்மூலம், வி.கே.பாண்டியனுக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் நெருக்கம் இன்னும் அதிகரித்தது. அதையொட்டி, வி.கே.பாண்டியனை அரசுப்பணியில் இருந்து விடுவித்து, அரசியலில் ஈடுபடுத்த முதல்-மந்திரி நவீன் பட்நாயக் திட்டமிட்டார்.

    இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரியின் தனிச்செயலாளர் பொறுப்பில் இருந்து அண்மையில் விருப்ப ஓய்வு பெற்ற வி.கே.பாண்டியனுக்கு, கேபினட் அமைச்சருக்கு இணையான அரசு பொறுப்பு வழங்கப்பட்டது.

    இதையடுத்து ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் இன்று இணைந்தார்.

    • பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மை இல்லை
    • சட்டம் வருவதை புதுடெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக எதிர்த்தது

    டெல்லியில் உள்ள அதிகாரிகளின் பதவிக்காலம், சம்பளம், மற்றும் இடமாற்றம் அல்லது பதவி உயர்வு தொடர்பான விஷயங்களில் விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் உள்ளது என நிலைநாட்ட ஒரு சட்டம் கொண்டு வர மத்திய அரசாங்கம் முயற்சிக்கிறது.

    அதன்படி டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

    இச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அதிகாரிகள் மீதான எந்த நடவடிக்கை அல்லது விசாரணை குறித்தும் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசின் வசம் இருக்கும்.

    ஆனால், இத்தகைய ஒரு சட்டம் வருவதை புதுடெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக எதிர்த்தது. இச்சட்டம் கொண்டு வர வழி செய்யும் வகையில் இதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் தோற்கடிக்க பல கட்சிகளின் ஆதரவை அக்கட்சி நாடி வந்தது.

    எதிர்பாராத விதமாக இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி (AAP) இன்று பெரும் பின்னடைவை சந்தித்தது.

    அவசர சட்டத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் இந்த மசோதாவிற்கு ஆதரவளித்துள்ளது. இக்கட்சி மத்திய அரசுக்கு ஆதரவளிப்பதால், மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் மிகச் சுலபமாக நிறைவேறும்.

    மாநிலங்களவையின் முழு பலம் 245. ஆனால் 7 இடங்கள் காலியாக உள்ளன. தற்போதுள்ள 238 உறுப்பினர்களும் அன்றைய தினம் வாக்களித்தால், சபையில் பாதி பெரும்பான்மை பெற 120 ஓட்டு தேவைப்படும்.

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மை இல்லை.

    இந்நிலையில், அங்கு 9 உறுப்பினர்களை கொண்ட ஒடிசாவின் ஆளும் கட்சியின் இந்த ஆதரவின் மூலம் இந்த மசோதா நிறைவேறி விடும்.

    மாநிலங்களவையில் 9 உறுப்பினர்களையும், மக்களவையில் 22 உறுப்பினர்களையும் கொண்ட ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, முக்கியமான இந்த மசோதாவில் அரசுக்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

    பா.ஜ.க. மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு 103 உறுப்பினர்கள் உள்ளனர்.

    தவிர 5 நியமன உறுப்பினர்கள் மற்றும் 1 சுயேட்சை உறுப்பினரின் ஆதரவிலும் ஆளும் பா.ஜ.க. நம்பிக்கை வைத்திருக்கிறது.

    பிஜூ ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவுடன், பா.ஜ.க. தலைமையிலான அரசுக்கு 127 உறுப்பினர்கள் உள்ளனர்.

    மாநிலங்களவையில் தலா ஒரு உறுப்பினரை கொண்ட சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவையும் மசோதாவை ஆதரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    எதிர்க்கட்சி குழுவில் உள்ள 26 கட்சிகளில், குறைந்தபட்சம் 18 கட்சிகள் மாநிலங்களவையில் முன்னிலையில் உள்ளன. அவை மொத்தமாக 101 உறுப்பினர்களை கொண்டுள்ளன.

    26 கட்சிகளை மட்டுமே கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியான I.N.D.I.A.வைச் சேர்ந்த 109 உறுப்பினர்கள் மற்றும் கபில் சிபல் போன்ற சில சுயேட்சை உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தவிர, பாரத் ராஷ்டிர சமிதி (முன்னாள் தெலுங்கானா ராஷ்டிர சமிதி) தனது 7 மாநிலங்களவை உறுப்பினர்களிடமும் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

    இதுபோன்ற சூழ்நிலை நிலவுவதால் பா.ஜ.க.விற்கு மசோதா நிறைவேற்றுதல் சுலபமாக அமையும் என அரசியல் வல்லுனர்கள் கணிக்கின்றனர்.

    பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் பிஜூ ஜனதா தளம் எதிர்க்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஒடிசா சட்டமன்ற தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் நவீன்பட் நாயக் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதாதளம் ஆட்சி நடந்து வருகிறது.

    147 இடங்களை கொண்ட ஒடிசா சட்டசபைக்கு நான்கு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்தது. பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகியவை தனித்தே போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் 139 தொகுதிகளில் போட்டியிட்டது.

    பகுஜன் சமாஜ் வாடி (107 இடங்கள்), ஆம் ஆத்மி (15) ஆகியவையும் களத்தில் நின்றன. ஒடிசாவில் அசைக்க முடியாத சக்தியாக நவீன்பட் நாயக் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பார் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

    கருத்துகணிப்புகள் தெரிவித்தபடி ஓட்டு எண்ணிக்கையில் நவீன்பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சி முன்னிலை பெற்றது. பல தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்களே தொடர்ந்து முன்னிலையில் இருந்தனர். இதனால் பிஜுஜனதாதளம் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    89 தொகுதிகளில் முன்னணி நிலவரம் வெளியான போது பிஜு ஜனதாதளம் 63 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பா.ஜனதா 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. ஒடிசாவில் மெஜாரிட்டிக்கு 74 இடங்கள் தேவை.

    பிஜு ஜனதா தளம் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் ஆட்சியை தக்க வைக்கிறது.

    நவீன் பட்நாயக் தொடர்ந்து 5-வது முறையாக முதல்-மந்திரி ஆக உள்ளார். அவர் 2000, 2004, 2009, 2014-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று இருந்தார். மீண்டும் ஒருமுறை தனது பலத்தை நிரூபித்து ஒடிசா மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்.

    கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் 117 தொகுதிகளை வென்று இருந்தது.
    ஒடிசா முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.



    முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் நேற்று ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து தேர்தல் பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர். நவீன் பட்நாயக்கிடம் இருந்த கைப்பைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். #LokSabhaElections2019 #NaveenPatnaik
    பிஜு ஜனதா தளம் கட்சியில் மும்பை முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் அரூப் பட்நாயக் புவனேஷ்வர் எம்.பி. தொகுதியில் போட்டியிடுகிறார்.
    ஒடிசா:

    ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அங்கு 21 தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலுக்கு 147 தொகுதிக்கான சட்டசபை தேர்தலும் நடக்கிறது.

    ஒடிசாவில் 4 கட்டங்களாக ஏப்ரல் 11, 18, 23 மற்றும் 29-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. ஆளும் பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது.

    இந்த நிலையில் 9 பாராளுமன்ற தொகுதி மற்றும் 36 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பிஜு ஜனதா தளம் கட்சி அறிவித்து உள்ளது. மும்பை முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் அரூப் பட்நாயக் புவனேஷ்வர் எம்.பி. தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கனவே எம்.பி.க்களாக உள்ள 7 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    எம்.பி. வேட்பாளர் பட்டியலில் 3 பெண்கள் இடம் பெற்று உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி நவீன்பட்நாயக் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
    ஒடிசாவில் 21 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் நிச்சயம் வெற்றி பெறும் என ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கூறியுள்ளார். #NaveenPatnaik #BJD
    புவனேஸ்வர்:

    ஒடிசாவில், 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலையையும் வீழ்த்தி பிஜூ ஜனதா தளம் கட்சி மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் 20 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த முறையும் அந்த கட்சி தனித்து களம் இறங்குகிறது. தேர்தல் பிரசாரத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ஒடிசா மாநில முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் பேசுகையில், ஒடிசாவில் உள்ள 21 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் நிச்சயம் வெற்றி பெற்று, மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்றார்.

    மேலும், ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக வாக்குறுதி அளித்த பா.ஜனதா, அதிகாரத்துக்கு வந்ததும் அதை புறக்கணித்து விட்டதாக நவீன் பட்நாயக் குற்றம் சாட்டினார். 
    ஒடிசாவில் அனைத்து பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்படும் என்று கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #NaveenPatnaik #LokSabha
    புவனேசுவரம்:

    ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பிஜூ ஜனதாதளம் கட்சி 118 தொகுதிகளில் வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்-மந்திரியாக உள்ளார். அதேபோல 21 பாராளுமன்ற தொகுதிகளில் 20 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது.

    நடைபெற உள்ள தேர்தலிலும் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    மாநிலத்தில் மொத்தம் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளிலும், 21 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் வேட்பாளர்களை நிறுத்தும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் எங்கள் கட்சி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு நவீன் பட்நாயக் கூறினார். #NaveenPatnaik #LokSabha 
    நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடந்து வருகின்றது. மாலை 6 மணியளவில் இதன் மீதான வாக்கெடுப்பு நடக்க உள்ளது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்து விட்டன.

    இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.

    தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தீர்மானம் மீதான விவாதம் முடிந்ததும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அப்படி, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும் பட்சத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஒட்டெடுப்பு நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
    மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை சிவசேனா மற்றும் பிஜு ஜனதா தளம் புறக்கணித்துள்ளதால், மெஜாரிட்டி எண் குறைந்துள்ளது. இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது. இதற்கிடையே, தீர்மானம் மீதான விவாதத்தை சிவசேனா மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சி புறக்கணித்துள்ளது.

    இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.

    தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 
    பிஜு தனதா தளம் கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் பைஜயந்த் பாண்டா தனது பதவியை ராஜினாமா செய்வதாக மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    புபனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் கேந்த்ரபாரா மக்களவை தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பைஜயந்த் பாண்டா. பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பாண்டா சமீபத்தில் கட்சிக்கு விரோதமாக கருத்து கூறியதால், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளானார். இதன் பின்னர், கட்சியை விட்டு பாண்டா விலகினார்.

    அவர் பாஜகவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக மக்களவை சபாநாயகருக்கு பாண்டா இன்று கடிதம் எழுதியுள்ளார். எனினும், அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வது குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. 
    ×