search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mujra"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வட மாநிலங்களில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
    • பாடலிபுத்ரா தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வேட்பாளரை ஆதரித்து ஒவைசி பிரசாரம் செய்தார்.

    பாட்னா:

    தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி உத்தர பிரதேசம், பீகார் உள்பட சில வட மாநிலங்களில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

    இந்நிலையில், பீகார் மாநிலம் பாடலிபுத்ரா பாராளுமன்ற தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வேட்பாளரை ஆதரித்து அதன் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி பிரசாரம் செய்தார்.

    அப்போது அசாதுதீன் ஒவைசி பேசுகையில், இதெல்லாம் ஒரு பிரதமர் பேசும் பேச்சுக்களா? எங்களுக்கு அதுபோல் பேசத் தெரியாதா? 2,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நமது நிலத்தை ஆக்கிரமித்தபோது மோடி அவர்களே சீனாவுடன் டிஸ்கோ டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தீர்களா? என்று கேட்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

    முன்னதாக பாடலிபுத்ராவில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தபோது, ஓட்டு ஜிகாத்துக்காக, முஸ்லிம்களை குளிர்விக்க, எதிர்க்கட்சிகள் 'முஜ்ரா' எனப்படும் பெண்களை ஆடவிட்டு மகிழ்வித்து வருகின்றன என குற்றம்சாட்டினார்.

    • மோடி அரசு பணக்காரர்களை ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுடன் நிற்கிறது.
    • இந்த தேர்தல் பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல் என்றார் கார்கே.

    பாட்னா:

    பீகாரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    மோடி அரசு பணக்காரர்களை ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுடன் நிற்கிறது.

    நாங்கள் பாகிஸ்தானுடன் போரிட்டு வங்காளதேசத்துக்கு சுதந்திரம் பெற்று தந்தோம். சீனா இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகளையும், சாலைகளையும் கட்டி வருகிறது. ஆனால் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார்.

    இந்த தேர்தல் பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல். ராகுலுக்கும், மோடிக்குமான தேர்தல் அல்ல.

    பிரதமர் மோடி முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பீகாரை அவமதித்து விட்டார். ஏனெனில் முஜ்ரா நடனம் பீகாரில் ஆடப்படுகிறது. இதனால் அவர் பீகாரையும், அதன் வாக்காளர்களையும் அவமதிப்பு செய்து விட்டார் என தெரிவித்தார்.

    • முஸ்லீம் வாக்கு வங்கிக்காக இந்தியா கூட்டணி முஜ்ரா நடனம் ஆடுவதாக பீகாரில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
    • வெயிலில் அலைந்து உரைகளை ஆற்றுவது அவரது மூளையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    முஸ்லீம் வாக்கு வங்கிக்காக இந்தியா கூட்டணி முஜ்ரா நடனம் ஆடுவதாக பீகாரில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

    பீகாரில் பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற பேரணிகளில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "எஸ்.சி, எஸ்.டி ஓபிசி மக்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றை முஸ்லிம்களுக்குத் வழங்கும் இந்தியா கூட்டணியில் திட்டங்களை நான் முறியடிப்பேன். அவர்கள் அடிமைகளாக இருந்துகொண்டு தங்கள் வாக்கு வங்கியை தக்கவைக்க 'முஜ்ரா' நடனம் ஆடுகின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பிரதமரின் கருத்துக்கு கட்டணம் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில், "இன்று, பிரதமரின் வாயிலிருந்து 'முஜ்ரா' என்ற வார்த்தையை நான் கேட்டேன். மோடிஜி, இது என்ன மனநிலை? நீங்கள் ஏன் ஏதாவது மருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது? அமித் ஷாவும், ஜேபி நட்டாவும் அவருக்கு உடனடியாக மோடிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். வெயிலில் அலைந்து உரைகளை ஆற்றுவது அவரது மூளையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

     

     

    திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலேவும் மோடியின் கருத்துக்கு கண்டம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், அந்த மனிதர் (மோடி) இப்போது 'முஜ்ரா' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு வந்துள்ளார். 10 வருட விளம்பரத்தால் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தில் மறைந்திருந்த மோடி தனது உண்மையான சுயரூபத்தை காட்டத் தொடங்கியுள்ளார். அவர் பயன்படுத்தியது மலிவான மொழி குறிப்பிட்டுள்ளார்.

    ஆர்ஜேடி கட்சி எம்.பி மனோஜ் ஜா கூறுகையில், நேற்று வரை அவருடன் (மோடி) கருத்து வேறுபாடு இருந்தபோதிலும் நாங்கள் இப்போது அவரைப் பற்றி கவலைப்படுகிறோம். 'மட்டன், 'மங்களசூத்ரா', 'முஜ்ரா', இதுதான் ஒரு பிரதமர் பேசக்கூடிய மொழியா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

     

    சிவசேனா காட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, பிரதமரின் உரையின் வீடியோ கிளிப்பைப் பகிரும்போது, "மோடி ஜி விரைவில் குணமடையுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக இஸ்லாமிய பாரம்பரிய நடனமாக இருந்த முஜ்ரா காலப்போக்கில் மாறி, தற்போது கலியாட்டங்களுக்காக மாறுபட்ட வகையில் நடந்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    ×