search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரை அவமதித்துள்ளார் பிரதமர் மோடி: கார்கே குற்றச்சாட்டு
    X

    பீகாரை அவமதித்துள்ளார் பிரதமர் மோடி: கார்கே குற்றச்சாட்டு

    • மோடி அரசு பணக்காரர்களை ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுடன் நிற்கிறது.
    • இந்த தேர்தல் பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல் என்றார் கார்கே.

    பாட்னா:

    பீகாரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    மோடி அரசு பணக்காரர்களை ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுடன் நிற்கிறது.

    நாங்கள் பாகிஸ்தானுடன் போரிட்டு வங்காளதேசத்துக்கு சுதந்திரம் பெற்று தந்தோம். சீனா இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகளையும், சாலைகளையும் கட்டி வருகிறது. ஆனால் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார்.

    இந்த தேர்தல் பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல். ராகுலுக்கும், மோடிக்குமான தேர்தல் அல்ல.

    பிரதமர் மோடி முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பீகாரை அவமதித்து விட்டார். ஏனெனில் முஜ்ரா நடனம் பீகாரில் ஆடப்படுகிறது. இதனால் அவர் பீகாரையும், அதன் வாக்காளர்களையும் அவமதிப்பு செய்து விட்டார் என தெரிவித்தார்.

    Next Story
    ×