பட்ஜெட்டில் வங்கதேசத்திற்கு ரூ. 60 கோடி ஒதுக்கீடு ஏன்?- பிஜு ஜனதா தள எம்.பி. கேள்வி

இந்த பட்ஜெட்டில் நீங்கள் வங்கதேசத்திற்கு 60 கோடி ரூபாய் கொடுத்துள்ளீர்கள். ஏன்?.வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பட்ஜெட்டில் வங்கதேசத்திற்கு ரூ. 60 கோடி ஒதுக்கீடு ஏன்?- பிஜு ஜனதா தள எம்.பி. கேள்வி
Published on

பட்ஜெட் மீதான விவாத்தின்போது பேசிய ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி. சுலதா தியோ, ஒடிசாவை மத்திய அரசு புறக்கணித்த நிலையில் வங்கதேசத்திற்கு 60 கோடி ரூபாய் ஒதுக்கியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சுலதா தியோ பேசியதாவது:-

ஒடிசாவுக்காக இந்த பட்ஜெட்டில் ஏதுமில்லை. அதற்குப் பதிலாக 18 மாதங்களில் கடன் 90 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. ஒடிசா அரசு 12 லட்சம் கோடி ரூபாய் கேட்டிருந்தது. அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்த பட்ஜெட்டில் நீங்கள் வங்கதேசத்திற்கு 60 கோடி ரூபாய் கொடுத்துள்ளீர்கள். ஏன்?. வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஏன் கொடுத்தீர்கள்?. ஏன் இந்த அனுதாபம்? உங்களோடு அவர்களுக்கு அனுதாபம் இல்லை. இது நம்முடைய வரிப்பணம். இதைவிட பெரிய அவமானம் ஏதும் இருக்க முடியாது.

இவ்வாறு சுலதா தியோ பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com