search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகில இந்திய கூடைப்பந்து போட்டி-இந்திய கப்பல்படை, கேரள மின்வாரிய அணிகள் வெற்றி
    X

    அகில இந்திய கூடைப்பந்து போட்டி-இந்திய கப்பல்படை, கேரள மின்வாரிய அணிகள் வெற்றி

    • இதில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
    • கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஜுன் 1-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவில் 56-–ம் ஆண்டுக்கான ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 20–-ம் ஆண்டுக்கான பெண்கள் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை கூடைப்பந்து போட்டிகள், நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    4-வது நாளான இன்று நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவுக்கான முதல் போட்டி இன்று காலை தொடங்கியது. அப்போது இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து, தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி விளையாடியது.

    இதில் இந்திய கப்பல் படை அணி 73–- 35 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. அடுத்தபடியாக கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 96 –- 51 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஜுன் 1-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.

    Next Story
    ×