search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டியில் சேலம் வாலிபர் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை
    X

    சாதனை படைத்த வீரர் பாலாஜி ராஜேந்திரனை மாவட்ட விளையாட்டு அதிகாரி சிவரஞ்சன் பாராட்டிய காட்சி.

    மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டியில் சேலம் வாலிபர் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை

    • மாற்றுத்திறனாளி களுக்கான 21-வது தேசிய தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் கடந்த வாரம் நடந்தது.
    • 10.18 மீட்டர் தூரம் குண்டு வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    சேலம்:

    மாற்றுத்திறனாளி களுக்கான 21-வது தேசிய தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் கடந்த வாரம் நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து 80-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.

    தமிழக அணியில் இடம்பெற்று இருந்த சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுதிறனாளி பாலாஜி ராஜேந்திரன் என்பவர் குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டார்.

    இதில் அவர் 10.18 மீட்டர் தூரம் குண்டு வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனையடுத்து சேலம் வந்த அவருக்கு, சேலம் மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து இன்று அவர் சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பயிற்சியாளர்கள் சதீஷ்குமார், உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×