கனா படத்தில் நடித்த சஜனா சஜீவன் இந்திய மகளிர் டி20 அணியில் இடம்பிடித்தார்

மகளிர் கிரிக்கெட் தொடர்பான கதையம்சம் கொண்டிருந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இம்மாத இறுதியில் துவங்குகிறது.
கனா படத்தில் நடித்த சஜனா சஜீவன் இந்திய மகளிர் டி20 அணியில் இடம்பிடித்தார்
Published on

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் மகளிர் கிரிக்கெட் தொடர்பான கதையம்சம் கொண்டிருந்தது.

மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலரும் நடித்து இருந்தனர். அந்த வகையில், கனா படத்தில் நடித்த கிரிக்கெட் வீராங்கனை சஜனா சஜீவன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

வங்காளதேசம் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சஞ்சனா சஜீவன் இந்திய அணிக்காக களமிறங்க உள்ளார். வங்காளதேசம் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்க இருக்கிறது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com