என் மலர்
நீங்கள் தேடியது "cross border trade"
- கொரோனா காரணமாக இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம் நிறுத்தப்பட்டிருந்தது.
- இமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக வர்த்தகம் தொடங்க சீனா ஒப்புதல்
இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளது
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம், இமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
வர்த்தகத்தோடு, கைலாஷ் மான்சரோவர் யாத்திரையையும் மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் சீனா சாதகமாக பதிலளித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
- சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தினார்.
- 12 உடன்படிக்கைகளை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளது
இந்தியா வந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக BRICS மாநாட்டின் தலைமைக்கு ஒருவருக்கொருவர் ஆதரவளித்தல் உள்ளிட்ட 12 உடன்படிக்கைகளை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
மேலும், உத்தரகாண்ட், ஹிமாச்சல், சிக்கிம் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் திறக்க இந்தியாவும் சீனாவும் உடன்படிக்கை செய்துள்ளன.
இந்தியா- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடையேயான எல்லைத்தாண்டிய வர்த்தகம், தற்போது பாரமுல்லா மாவட்டம் உரியிலுள்ள சலமாபாத், பூஞ்ச் மாவட்டத்திலுள்ள சக்கான் டா-பாக் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த வர்த்தகமானது, வாரத்துக்கு 4 நாள்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில், எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு இந்தியா தற்போது தடை விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
எல்லை தாண்டிய வர்த்தகத்தை பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் சில சக்திகள் தவறாகப் பயன்படுத்துகின்றன என்றும், இந்த வர்த்தகத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆயுதங்கள், போதைப் பொருள்கள், கள்ள கரன்சி நோட்டுகள் மற்றும் பிற பொருள்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படுகின்றன என்றும் விசாரணை அமைப்புகள் அறிக்கை அளித்தன. இதைப் பரிசீலித்து சலமாபாத், சக்கான் டா- பாக் ஆகிய இடங்களில் நடைபெறும் எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தற்காலிகத் தடை விதிப்பதென்று அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீரை அரசியல் நலனுக்காக பாஜக பலிகடா ஆக்குவதாக மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார். வாஜ்பாய் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு அமைதி முயற்சியையும் தற்போதைய மத்திய அரசு நிராகரிக்கிறது என தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். #CrossBorderTrade #Kashmir






