இந்தியாவில் அதிகளவில் தொழில்நுட்பக் கோளாறுகளை சந்திக்கும் 50% விமானங்கள்.. ஏர் இந்தியா முதலிடம்

சுமார் 50% விமானங்கள் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான தொழில்நுட்பப் கோளாறுகளை எதிர்கொள்வது தெரியவந்துள்ளது.அவற்றை இயக்குவதை நிறுத்த வேண்டும் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் அதிகளவில் தொழில்நுட்பக் கோளாறுகளை சந்திக்கும் 50% விமானங்கள்.. ஏர் இந்தியா முதலிடம்
Published on

அண்மைக் காலமாக விமான விபத்துகள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் அதிகரித்து வருகின்றன.

மத்திய அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த புதிய தரவுகளின்படி, இந்தியாவில் இயக்கப்படும் விமானங்களில் பாதிக்கும் மேற்பட்டவை தொடர்ச்சியான தொழில்நுட்பக் கோளாறுகளை கண்டறியப்பட்டுள்ளது.

2024 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு தணிக்கையில், ஆய்வு செய்யப்பட்ட விமானங்களில் சுமார் 50% விமானங்கள் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொள்வது தெரியவந்துள்ளது.  

இந்த பட்டியலில் ஏர் இந்தியா நிறுவன விமானங்கள் முதலிடத்தில் உள்ளது. இக்குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் அதிக கோளாறுகள் பதிவாகி உள்ளது.

ஏர் இந்தியாவைத் தொடர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களின் விமானங்கள் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

எஞ்சின் கோளாறு, கேபின் அழுத்தம் குறைதல் மற்றும் அவசரகால உபகரணங்கள் சரியாக வேலை செய்யாதது போன்ற கோளாறுகள் ஒரு முறை சரிசெய்யப்பட்டபோதும் ஒரு சில நாட்கள் மீண்டும் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. 

எனவே, குறைபாடுகள் உள்ள விமானங்களை முழுமையாக சரிசெய்ய வேண்டும் அல்லது அவற்றை இயக்குவதை நிறுத்த வேண்டும் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

விமான ஊழியர்களின் பற்றாக்குறை மற்றும் போதிய பராமரிப்பு இல்லாததே இந்தப் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com