search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Technical failure"

    • கடந்த 2 வாரமாக அந்த மையம் மூலமாக பெறப்படும் சேவைகள் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நிராகரிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • சரியான ஆவணங்கள் கொடுத்தும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிராகரிக்கப்படுகிறது என தகவல் தெரிவிக்கின்றனர்.

    சிவகிரி:

    சிவகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்கள் ஆதார் தொடர்பான பிரச்னைகளுக்கு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தை பயன்படுத்தி வந்தனர்.

    கடந்த 2 வாரமாக அந்த மையம் மூலமாக பெறப்படும் சேவைகள் பெரும்பாலானவை தொழில் நுட்ப கோளாறு காரணமாக நிராகரிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தங்களுடைய சொந்த வேலைகளை செய்யமுடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    சிவகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஆதார் அட்டையில் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி திருத்தம், புகைப்பட மாற்றம், போன் எண் இணைக்க, கருவிழி, ரேகை பதிவு என பல்வேறு காரணங்களுக்காக கொடுக்கப்படும் அனைத்து பதிவுகளும் தொழில்நுட்ப கோளாறு (தரவு/செயல்முறை) என நிராகரிக்கப்படுகிறது.

    ஆதார் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய முடியாமலும், புதிய ஆதார் அட்டை எடுக்க விவரம் தெரியாத ஏழை, எளிய, வயதான பொதுமக்கள் ஆதார் திருத்தம் செய்வதற்கு மிகவும் அவதிப்படுகின்றனர்.

    சரியான ஆவணங்கள் கொடுத்தும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிராகரிக்கப்படுகிறது என தகவல் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து விபரம் தெரியாத பொதுமக்கள் ஆதார் சேவை மையத்தில் எப்போது தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் என கேள்வி எழுப்பியுள்ளனர். இது சம்பந்தமாக துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி அனைத்து மக்களுக்கும் எவ்வித தங்குதடையின்றி சேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிவகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் தொடர்ந்து ஆதார் சேவை மையம் செயல்பட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர் ஜவஹர்லால் நேரு மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொழில்நுட்ப பழுது காரணமாக தொடர்ந்து மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
    • நாங்கள் ஒரு நாள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்றால் எங்களுக்கு அபராதம் விதிக்கிறீர்கள். இதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினர்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்தும் எந்திரத்தில் கோளாறு காரணமாக மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் இன்று தவித்தனர்.

    நெல்லை வண்ணார் பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்காக பொதுமக்கள் இன்று காலையில் இருந்து வந்தனர். காலை 8.30 மணிக்கு தொடங்கிய மின் கட்டணம் செலுத்தும் பணி தொடங்கிய அரை மணி நேரத்தில் தொழில்நுட்ப பழுது காரணமாக தொடர்ந்து மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

    ஏற்கனவே தொடர் விடுமுறையால் 4 நாட்கள் அலுவலகம் செயல்படவில்லை.இந்த நிலையில் இன்று கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தனர்.

    ஏற்கனவே இன்று மின் கட்டணம் செலுத்துவதற்கு கடைசி நாள் என்பதால் சிலர் கட்டணம் செலுத்த வந்த போதும் கூட கட்டணம் செலுத்த முடியாமல் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

    அப்போது அவர்கள் மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டபோது நாங்கள் ஒரு நாள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்றால் எங்களுக்கு அபராதம் விதிக்கிறீர்கள். இதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினர். அதற்கு அங்குள்ள ஊழியர்கள் பதில் சொல்ல முடியாமல் தவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஆன்லைன் மூலமும் மின்கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். காலை 9 மணி முதல் பிற்பகல் 12.15 வரை கோளாறு சரி செய்ய முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 

    ×