என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EB Bill"

    • மின் கட்டணத்தை செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரித்ததால் கவலையடைந்துள்ளார்.
    • கடந்த சில மாதங்களாகவே எங்கள் பகுதி மக்களுக்கு கூடுதல் மின் கட்டணம் வருகிறது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் விவசாயமே முதன்மையான தொழிலாக இருந்து வருகிறது. இங்குள்ள வீடுகளுக்கு சிங்கிள் பேஸ் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே இப்பகுதியில் உள்ள வீடுகளில் குறைந்த அளவு மின்சாரமே பயன்படுத்தி வந்தாலும் ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் கே.சி.பட்டியைச் சேர்ந்த இளையராஜா என்ற விவசாயி 8976 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்காக ரூ.1 லட்சத்து 1333 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என மின் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த இளையராஜா தான் அந்த அளவுக்கு மின்சாரத்தை பயன்படுத்தவில்லை என்றும் கூடுதல் மின் கட்டணம் எவ்வாறு வந்தது என மின் வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் அது பற்றி தங்களுக்கு தெரியாது. மின் கட்டணத்தை செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரித்ததால் கவலையடைந்துள்ளார்.

    இது குறித்து கே.சி.பட்டி கிராம மக்கள் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களாகவே எங்கள் பகுதி மக்களுக்கு கூடுதல் மின் கட்டணம் வருகிறது. நகர்புறங்களில் உள்ளதைப் போல வாசிங் மெஷின், கிரைண்டர் போன்றவை கூட பெரும்பாலான வீடுகளில் இல்லை. மின் விசிறி, டி.வி. போன்றவை மட்டுமே உள்ளது.

    அது போன்ற வீடுகளுக்கும் ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் வருகிறது. இது குறித்து மின் வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது இளையராஜா என்பவருக்கு ரூ.1 லட்சம் வந்துள்ளதைப் போல பலருக்கும் ரூ.7 ஆயிரம், ரூ.8 ஆயிரம் என மின் கட்டணம் செலுத்துமாறு நோட்டீஸ் வந்துள்ளது.

    இதனை கட்டாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவிப்பதால் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அ.ம.மு.க. சார்பில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை ஒருங்கிணைந்த மாவட்ட அ.ம.மு.க. சார்பில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து வண்ணார்ப்பேட்டை செல்ல பாண்டியன் சிலை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் குமரேசன் முன்னிலை வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மின்சார கட்டண உயர்வை கண்டித்தும், அதனை ரத்து செய்ய கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் ஆவின் அண்ணாச்சாமி, வக்கீல்பிரிவு இணை செயலாளர் பழனியப்பன், மாவட்ட நிர்வாகிகள் அவைத்தலைவர் பாஸ்கர் சகாயம், மாவட்ட பொருளாளர்கள் பாளை ரமேஷ், ஆசீர், பொதுக்குழு உறுப்பினர்கள் மணி மூர்த்தீஸ்வரம் ஆறுமுகம், பொன்னுசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர்கள் துரைராஜ், வேலாண்டி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பேச்சிமுத்து பாண்டியன், இளைஞர் அணி செயலாளர் மகேஷ் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தொழில்நுட்ப பழுது காரணமாக தொடர்ந்து மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
    • நாங்கள் ஒரு நாள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்றால் எங்களுக்கு அபராதம் விதிக்கிறீர்கள். இதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினர்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்தும் எந்திரத்தில் கோளாறு காரணமாக மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் இன்று தவித்தனர்.

    நெல்லை வண்ணார் பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்காக பொதுமக்கள் இன்று காலையில் இருந்து வந்தனர். காலை 8.30 மணிக்கு தொடங்கிய மின் கட்டணம் செலுத்தும் பணி தொடங்கிய அரை மணி நேரத்தில் தொழில்நுட்ப பழுது காரணமாக தொடர்ந்து மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

    ஏற்கனவே தொடர் விடுமுறையால் 4 நாட்கள் அலுவலகம் செயல்படவில்லை.இந்த நிலையில் இன்று கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தனர்.

    ஏற்கனவே இன்று மின் கட்டணம் செலுத்துவதற்கு கடைசி நாள் என்பதால் சிலர் கட்டணம் செலுத்த வந்த போதும் கூட கட்டணம் செலுத்த முடியாமல் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

    அப்போது அவர்கள் மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டபோது நாங்கள் ஒரு நாள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்றால் எங்களுக்கு அபராதம் விதிக்கிறீர்கள். இதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினர். அதற்கு அங்குள்ள ஊழியர்கள் பதில் சொல்ல முடியாமல் தவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஆன்லைன் மூலமும் மின்கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். காலை 9 மணி முதல் பிற்பகல் 12.15 வரை கோளாறு சரி செய்ய முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 

    ×