என் மலர்

  நீங்கள் தேடியது "arrives"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இளையான்குடி அருகே வரும்முன் காப்போம் திட்டத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
  • சிறப்பு மருத்துவர்கள் உட்பட20 மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் , செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

  மானாமதுரை

  சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் சாவித்திரி முருகன் தலைமை வகித்தார்.

  ஒன்றியத் தலைவர் முனியாண்டி, ஒன்றியக் குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தனர், மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி குத்துவிளக்கேற்றி மருந்துப்பெட்டகம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி பேசினார்.

  இதில் சிவகங்கை மாவட்ட துணை இயக்குநர் ராம்கணேஷ், இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர்- முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் கருணாகரன், மலைமேகு, தமிழரசன், கண்ணன், சுதர்சன், சரவணன், மற்றும் சிறப்பு மருத்துவர்கள் உட்பட20 மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் , செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

  முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் ஆரோன், தாமோதரன் ஆகியோர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ஜனதா தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
  சென்னை:

  சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

  தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சியை வலுப்படுத்தி வருகிறோம். கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாடு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு மாற்றம் தேவை என்பதை முன்வைத்து பாரதீய ஜனதா கட்சி தயாராகி வருகிறது.  சேலம் பசுமை பாதை திட்டம் ஒரு நல்ல திட்டம். காடுகளை அழிக்காமல் சேலம் பசுமை பாதை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்பதை போராட்டக்காரர்கள் உணரவேண்டும். இப்போதே அதனை எதிர்த்து பிரசாரம் தொடங்கியிருப்பது ஆரோக்கியமானது அல்ல. மக்களுக்கான நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

  தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழக அரசு ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இமாசலப்பிரதேசம் தலைநகர் சிம்லாவுக்கு 6 நாள் பயணமாக வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோரை மாநில கவர்னர், முதல் மந்திரி உள்பட பலர் வரவேற்றனர். #RamnathKovind #Shimla
  சிம்லா:

  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா ஆகியோர் இன்று இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் சிம்லாவுக்கு வந்தனர்.

  சராப்ரா பகுதியில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்கிய அவர்களை மாநில கவர்னர் ஆசார்யா தேவ்ரத் மற்றும் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர், மாநில மந்திரி மொகிந்தர் சிங் தாக்குர் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். #RamnathKovind #Shimla
  ×