search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் புறப்பட்ட முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி கோவைக்கு 21-ந் தேதி வருகை
    X

    கன்னியாகுமரியில் புறப்பட்ட முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி கோவைக்கு 21-ந் தேதி வருகை

    • பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு
    • சூலூர் பஸ் நிலையத்துக்கு காலை 8 மணிக்கும், கொடிசியா வளாகத்துக்கு காலை 11 மணிக்கும், பொள்ளாச்சி பஸ் நிலையத்துக்கு மாலை 4 மணிக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு

    கோவை,

    எழுத்தாளர் கலைஞர் குழுமூலம் தயார் செய்யப்பட்ட முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தி கோவைக்கு நாளை மறுநாள் வருகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்பாடி கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பை தர வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்துவதற்காக 12 குழுக்கள் அமைக்கப்பட்டன.

    அதில் எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் படைப்புலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்த கருணா நிதி தமிழகத்திற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிணாமங்களைப் போற்றும் வகையிலும், இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவரின் பன்முக தன்மையை எடுத்துச் சொல்லும் வகை யிலும் அவரது புகழ்பாடும் முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தி தயாரிக்கப்பட்டு ள்ளது. இந்த ஊர்தி கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகேயுள்ள முக்கோண பூங்காவில் இருந்து கடந்த 4-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. டிசம்பர் 5-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல உள்ள இந்த ஊர்தி, கோவைக்கு நவம்பர் 21-ந் தேதி வருகிறது.

    சூலூர் பஸ் நிலையத்துக்கு காலை 8 மணிக்கும், கொடிசியா வளாகத்துக்கு காலை 11 மணிக்கும், பொள்ளாச்சி பஸ் நிலையத்துக்கு மாலை 4 மணிக்கும் இந்த அலங்கார ஊர்தி கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×