search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bjp leader amit shah"

    சபரிமலை பக்தர்கள் மீது போலீசாரை வைத்து அடக்குமுறை நடவடிக்கைகள் எடுப்பதை கைவிட வேண்டும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். #SabarimalaTemple #BJP #AmitShah #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று கேரள மாநிலத்தின் கண்ணூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இன்று கேரளாவில் மத நம்பிக்கைகள் மற்றும் மாநில அரசாங்கத்தின் கொடுமை ஆகியவற்றிற்கு இடையே ஒரு போராட்டம் நடக்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பிற அமைப்புகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நீதிமன்ற தீர்ப்பை காட்டி வன்முறையை உருவாக்க முயல வேண்டாம். ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது. சபரிமலை பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் பாஜக என்றும் துணை நிற்கும்.



    இந்தியாவில் பல கோயில்களில் பலவிதமான விதிகளும், வழிபாடுகளும் உள்ளன என்பதை, கோர்ட் உத்தரவின்பேரில் சபரிமலை கோயிலுக்கு சென்று வன்முறையை தூண்ட நினைத்தவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    சபரிமலையில் எப்படி பெண்களுக்கு அனுமதி இல்லையோ அதேபோல் இந்தியாவில் பல கோயில்களில் ஆண்களுக்கும் அனுமதி இல்லை.  எனவே ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது என தெரிவித்துள்ளார். #SabarimalaTemple #BJP #AmitShah #PinarayiVijayan
    காங்கிரஸ் கட்சி தேர்தலுக்காக மட்டுமே அம்பேத்கரை நினைவில் வைத்துள்ளது என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah #Ambedkar
    ஜெய்ப்பூர்:

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பிகானீரில் நேற்று நடைபெற்ற எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பொதுக் கூட்டத்தில் தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியாதாவது:

    குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக செயல்படும் கட்சி பா.ஜ.க. அல்ல. இந்த மாநிலத்தில் ஆளும் வசுந்தரா ராஜே சிந்தியா அரசு தாழ்த்தப்பட்டவரர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறது.

    ஆனால், எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வரும் போதுதான் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பற்றியும், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பற்றியும் நினைவுக்கு வரும். ஆட்சியில் அமர்ந்ததும் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள் என குற்றம் சாட்டினார். #AmitShah #Ambedkar
    டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா பேசுகையில், மக்களவை தேர்தலில் டெல்லியின் ஏழு இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். #AmitShah
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பூர்வாஞ்சல் மகாகும்ப் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வரும் மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். 



    சுதந்திரத்துக்குப் பின்னர் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி பூர்வாஞ்சல் மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது
    .
    இதேபோல், டெல்லியில் வசிக்கும் மக்கள் சந்தோஷமாக உள்ளார்களா என்பதை முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிந்து வைத்துள்ளாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மெகா கூட்டணி வைக்கும் எதிர்க்கட்சிகளுக்கு நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது மட்டுமே இலக்காக கொண்டுள்ளது. ஆனால், மோடியின் கொள்கைகள் நாட்டில் இருந்து வறுமை, பசிப்பிணி மற்றும் பாதுகாப்பின்மையை நீக்கியுள்ளது என தெரிவித்துள்ளார். #AmitShah
    பிரதமர் மோடியின் ஆட்சியை பற்றி கேள்வி எழுப்புவதற்கு ராகுல் காந்திக்கு எந்த உரிமையும் கிடையாது என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah #RahulGandhi
    ராய்ப்பூர்:

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார். 

    சத்தீஸ்கர் மாநிலத்தின்  குருபத் கிராமத்தில் உள்ள பிரயாககிரி மைதானத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த 60 ஆண்டு காலமாக காங்கிரசார் இந்தியாவை ஆட்சி செய்து வந்துள்ளனர். அப்பொழுது கிராமங்களுக்கு ஏன் மின்சார வசதி கிடைக்கவில்லை? விவசாயிகளுக்கு பயனளிக்க கூடிய கொள்முதல் விலை ஏன் கிடைக்கவில்லை?

    இந்தியாவை ஆட்சி செய்த 60 ஆண்டுகளின் கணக்குகளை காட்டவேண்டும் என மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கின்றனர். நீங்கள் பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சி குறித்து கணக்கு கேட்கிறீர்கள். உங்களுக்கு மோடி ஆட்சி பற்றி கேள்வி கேட்க எந்த உரிமையும் கிடையாது என தெரிவித்தார்.

    இந்த ஆண்டு இறுதியில், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. #AmitShah #RahulGandhi
    திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்பட பல்வேறு மாநில முதல் மந்திரிகள் பங்கேற்க உள்ளனர் என திமுக அறிவித்துள்ளது. #DMK #Karunanidhi #AmitShah
    சென்னை:

    திமுக சார்பில் வரும் 30ம் தேதி கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநில முதல் மந்திரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக திமுக அறிவித்திருந்தது.

    இந்நிலையில், கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்க உள்ளார் என திமுக தெரிவித்துள்ளது.



    இதுதொடர்பாக, திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 30-ம் தேதி கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார். மேலும், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர் என அறிவித்துள்ளது. #DMK #Karunanidhi #AmitShah
    நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று சட்ட ஆணையத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடிதம் எழுதி உள்ளார். #OneNationOnePoll #AmitShah #LawCommision
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி சட்ட ஆணையம் ஆய்வு செய்துவருகிறது. இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பு அனைத்து கட்சிகளின் கருத்தையும் கேட்க முடிவு செய்தது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.

    மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, பா.ஜனதா நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் விஜய் சஹஸ்ரபுத்தே, பூபேந்தர் யாதவ், அனில் பலுனி உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் சட்ட ஆணைய தலைவர் பி.எஸ்.சவுகானை சந்தித்து நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.

    இந்த கருத்தை வலியுறுத்தி பாஜக நாளை முதல் 30-ம் தேதி வரை சமூக நீதி இயக்கம் நடத்த உள்ளது.

    இந்நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா சட்ட ஆணையத்துக்கு 8 பக்க கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது எங்கள் கருத்து மட்டுமல்ல, இது நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கொள்கை முடிவு. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு குறையும். அதேபோல ஆண்டு முழுவதும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைபெற்று வருவதும் தவிர்க்கப்படும்.

    இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது என்பது ஆதாரமற்ற வாதம். மாறாக இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும். இதுபற்றிய எதிர்க்கட்சிகளின் கருத்து அரசியலுக்காக கூறப்படுவதாகவே தெரிகிறது என கூறியுள்ளார்.

    முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் சமீபத்தில் சட்ட ஆணையத்தை சந்தித்து, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #OneNationOnePoll #AmitShah #LawCommision
    கொல்கத்தாவில் வரும் 11-ம் தேதி பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளவுள்ள பேரணிக்கு அனுமதி அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #AmitShah
    கொல்கத்தா:

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்கும் வகையில் பாஜக திட்டமிட்டு தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகிறது. #BJP #AmitShah

    அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாஜக சார்பில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் வரும் 11-ம் தேதி பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளவுள்ள பேரணிக்கு அனுமதி அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே, மேற்கு வங்காள அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக தலைவர் அமித் ஷா இன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #BJP #AmitShah
    மேற்கு வங்காள அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah
    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்கும் வகையில் பாஜக திட்டமிட்டு தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாஜக சார்பில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    இதற்கிடையே,  நேற்று முன்தினம் அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பான அறிக்கை வெளியானது. இது குறித்து மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், இந்த அறிக்கையால் உள்நாட்டு போர் வெடிக்கும் எனக்கூறி அதிர்ச்சி அளித்தார். இதுதொடர்பாக பாஜக தலைவர்களை கடுமையாக சாடினார். 

    இந்நிலையில், மேற்கு வங்காள அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக தலைவர் அமித் ஷா இன்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் வரும் 11-ம் தேதி பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ள பேரணியில் பங்கேற்க செல்லவுள்ளேன். மாநில அரசு அனுமதி தராவிட்டாலும் நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என ஆவேசமாக தெரிவித்துள்ளார். #AmitShah
    பீகாரில் சுற்றுப்பயணம் செய்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, முதல் மந்திரி நிதிஷ்குமார் வீட்டில் இரவு உணவை முடித்து கவர்னரை சென்று சந்தித்தனர். #BJP #AmitShah #NitishKumar
    பாட்னா:

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் பாஜக கூட்டணி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணியில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இணைந்துள்ளது.

    இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
      
    அதன் ஒரு பகுதியாக, பாஜக தலைவர் அமித் ஷா இன்று பீகார் சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும், பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அமித்ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், பீகாரில் எங்கள் கூட்டணி ஆட்சி தொடரும் என தெரிவித்தார். 

    இந்நிலையில், பீகாரில் சுற்றுப்பயணம் செய்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, முதல் மந்திரி நிதிஷ்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் நிதிஷ்குமார். அதன்பின்னர், இருவரும் இரவு உணவை முடித்தனர். அதைத் தொடர்ந்து இருவரும் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சென்று சந்தித்தனர்.

    தே.ஜ. கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் இணைந்த பிறகு அமித்ஷா பாட்னா வருவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #AmitShah #NitishKumar
    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, வரவுள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து இன்று ஆலோசனை நடத்துகிறார். #BJP #AmitShah #NitishKumar
    பாட்னா:

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் பாஜக கூட்டணி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணியில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இணைந்துள்ளது.

    இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
     
    அதன் ஒரு பகுதியாக, பாஜக தலைவர் அமித் ஷா இன்று பீகார் செல்கிறார். அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும், பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    இன்று காலை 10 மணிக்கு விமான நிலையம் வரும் அமித் ஷா, அங்கிருந்து அரசு விருந்தினர் இல்லத்துக்குச் செல்கிறார். அங்கு நிதிஷ்குமாருடன் சிற்றுண்டி அருந்துகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமித் ஷா, இரவு நிதிஷ்குமார் வீட்டில் இரவு உணவு அருந்துகிறார்.

    இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நித்யானந்தா ராய் கூறுகையில், அமித் ஷா கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது. இந்தப் பயணத்தின்போது பாஜகவின் ஊடக அணியினர் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரை சந்தித்துப் பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் இணைந்த பிறகு அமித் ஷா பாட்னா வருவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #AmitShah #NitishKumar
    மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் சாணக்கியரின் கொள்கைகளை ஒத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். #AmitShah #RambhauMhalgi #Chanakya #PMModi
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் ராம்பாவ் மல்ஜியின் 75-வது பிறந்த நாள்விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் ஆர்யா சாணக்கியரின் கொள்கைகளை ஒத்திருக்கிறது என பாராட்டி பேசினார்.

    மேலும், ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கடைசி குடிமகனையும் சென்றடையும் வகையில் இருக்க வேண்டும். பிரதமர் மோடியின் கொள்கையும் அதுபோலவே உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த விழாவில் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் பங்கேற்ற பா.ஜ.க. மூத்த தலைவர் கே.எல்.அத்வானி, 1996-ல் நம்முடைய அரசியலமைப்பும் தேசிய மதச்சார்பின்மை என்ற தலைப்பு குறித்து பேசினார். மேலும், வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ராம்மாதவ், இந்த்ரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #AmitShah #RambhauMhalgi #Chanakya #PMModi
    பா.ஜனதா தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சியை வலுப்படுத்தி வருகிறோம். கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாடு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு மாற்றம் தேவை என்பதை முன்வைத்து பாரதீய ஜனதா கட்சி தயாராகி வருகிறது.



    சேலம் பசுமை பாதை திட்டம் ஒரு நல்ல திட்டம். காடுகளை அழிக்காமல் சேலம் பசுமை பாதை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்பதை போராட்டக்காரர்கள் உணரவேண்டும். இப்போதே அதனை எதிர்த்து பிரசாரம் தொடங்கியிருப்பது ஆரோக்கியமானது அல்ல. மக்களுக்கான நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழக அரசு ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×