என் மலர்
நீங்கள் தேடியது "one nation one poll"
- தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து நாளை தனித்தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. சட்டசபைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார்.
கவர்னரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சட்டசபை வளாகத்தில் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் நாளை ஒரே நாடு ஒரு தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.
இந்தத் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நாளை முன்மொழிகிறார்.
- ஒரே நாடு தேர்தல் தொடர்பான மசோதா மக்களவையில் இன்று தாக்கல்.
- பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இதற்கு மத்திய மந்திரி சபை ஒப்பதல் வழங்கியது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம். அதற்கான மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கும். ஜனாதிபதி ஆட்சிக்கு வழிவகுக்கும். மாநிலங்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து எதிர்ப்பு தெரிவித்தன.
இருந்தபோதிலும் மக்களவை ஒப்புதலுடன் இந்த மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா எந்த விதத்திலும் மாநில அரசின் உரிமைகளில் குறுக்கிடாது என மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று மதியம் பேசும்போது இது தொடர்பாக அர்ஜுன் ராம் மெக்வால் கூறியதாவது:-
தேர்தல் மறுசீரமைப்புக்காக சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த மசோதா தேர்தல் செயல்முறையை எளிதாக்கும் செயல்முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா வழியாக அரசியலமைப்புக்கு எந்த சேதமும் ஏற்படாது. அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பில் எந்த தலையீடும் இருக்காது. மாநில அதிகாரங்களில் நாங்கள் குறுக்கிடவில்லை.
இவ்வாறு மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
- மக்களவையில் மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்.
- மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதவை நிறைவேற்ற வேண்டுமென்றால் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் ஆதரவு தேவை. ஆனால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாத நிலையில் மசோதாவை தாக்கல் செய்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
எதிர்ப்பை மீறி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதற்கான வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றது. இதனால் மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கூட்டுக்குழு விரைவில் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் பிரதிநிதிகளாக எம்.பி.க்கள் இடம் பெறுவார்கள்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தி, மணிஷ் திவாரி, சுக்தியோ பகத், ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோரை பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிட்டு பிரியங்கா காந்தி முதன்முறையாக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். முதன்முறையாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் முக்கிய மசோதா குறித்து முடிவு எடுக்கும் குழுவில் காங்கிரஸ் சார்பில் இடம் பிடிக்க உள்ளார்.
- தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் அமலாக்கத்தை இடையூறாக பார்ப்பது சரியல்ல.
- தேர்தல் பிரசாரத்தின்போது அனைத்து தரப்பினருக்கும் சமமாக போட்டியிடும் வாய்ப்பை உருவாக்குவதற்கான முக்கிய கருவி.
நாடு முழுவதும் பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு காரணங்களை சொல்லி வருகிறது. அவை வருமாறு:-
அடிக்கடி தேர்தல் நடத்துவதால் செலவு அதிகரிக்கிறது. நேரம் வீணாகிறது. அடிக்கடி நடக்கும் தேர்தல்களுக்கு தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதால் வளர்ச்சி திட்டங்கள் முடங்குகின்றன. சேவைகளின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. அதிகாரிகள் நீண்ட காலத்துக்கு தேர்தல் பணிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். மொத்தத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு மத்திய அரசு கூறி வருகிறது.
ஆனால், தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் தொடர்பான மத்திய அரசின் கருத்துடன் தேர்தல் கமிஷன் முரண்படுகிறது. நடத்தை விதிமுறைகள் தொடர்பான சட்ட ஆணையத்தின் கேள்விக்கு தேர்தல் கமிஷன் அளித்த பதில் வருமாறு:-
தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் அமலாக்கத்தை இடையூறாக பார்ப்பது சரியல்ல. அது, தேர்தல் பிரசாரத்தின்போது அனைத்து தரப்பினருக்கும் சமமாக போட்டியிடும் வாய்ப்பை உருவாக்குவதற்கான முக்கிய கருவி ஆகும்.
அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடத்த அவை அவசியம். தேர்தல் தேதி அறிவிப்பு முதல், தேர்தல் பணிகள் முடிவடையும் வரை குறைவான காலத்துக்குத்தான் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் தேர்தல் கமிஷனின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆட்சியில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும்.
- கொள்கை முடக்கத்தை தடுக்கும். நிதி சுமையை குறைக்கும்.
இந்தியாவின் 76-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா குறித்து பேசினார். ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அவர் கூறுகையில் "ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆட்சியில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும். கொள்கை முடக்கத்தை தடுக்கும். நிதி சுமையை குறைக்கும்" என்றார்.
மேலும், 2024-ம் ஆண்டில் இளம் வயதில் உலக சாம்பியனாகி வரலாறு படைத்தார் என செஸ் வீரர் குகேஷ்க்கு பாராட்டு தெரிவித்தார்.
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான சாதியக்கூறுகைய ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அறிக்கை தயார் செய்து ஜனாதிபதியிடம் வழங்கியது. இந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஜனநாயகத்திற்கு எதிரான. கூட்டாட்சிக்கு எதிரானது என காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது.
அதேவேளையில் ராம் நாத் கோவிந்த் "ஒரே நேரத்தில் தேர்தல் என்ற கருத்தை அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் உணர்ந்திருந்தனர், எனவே அது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூற முடியாது. 1967 வரை, முதல் நான்கு பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெற்றது. அப்படியிருக்கும்போது அரசியலைப்புக்கு விரோதமானது எனக் கூற முடியும்" என்றார்.






