என் மலர்
இந்தியா

ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆட்சியில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும்: ஜனாதிபதி திரவுபதி முர்மு
- ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆட்சியில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும்.
- கொள்கை முடக்கத்தை தடுக்கும். நிதி சுமையை குறைக்கும்.
இந்தியாவின் 76-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா குறித்து பேசினார். ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அவர் கூறுகையில் "ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆட்சியில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும். கொள்கை முடக்கத்தை தடுக்கும். நிதி சுமையை குறைக்கும்" என்றார்.
மேலும், 2024-ம் ஆண்டில் இளம் வயதில் உலக சாம்பியனாகி வரலாறு படைத்தார் என செஸ் வீரர் குகேஷ்க்கு பாராட்டு தெரிவித்தார்.
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான சாதியக்கூறுகைய ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அறிக்கை தயார் செய்து ஜனாதிபதியிடம் வழங்கியது. இந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஜனநாயகத்திற்கு எதிரான. கூட்டாட்சிக்கு எதிரானது என காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது.
அதேவேளையில் ராம் நாத் கோவிந்த் "ஒரே நேரத்தில் தேர்தல் என்ற கருத்தை அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் உணர்ந்திருந்தனர், எனவே அது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூற முடியாது. 1967 வரை, முதல் நான்கு பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெற்றது. அப்படியிருக்கும்போது அரசியலைப்புக்கு விரோதமானது எனக் கூற முடியும்" என்றார்.






