என் மலர்

  நீங்கள் தேடியது "do not oppress devotees"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சபரிமலை பக்தர்கள் மீது போலீசாரை வைத்து அடக்குமுறை நடவடிக்கைகள் எடுப்பதை கைவிட வேண்டும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். #SabarimalaTemple #BJP #AmitShah #PinarayiVijayan
  திருவனந்தபுரம்:

  பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று கேரள மாநிலத்தின் கண்ணூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

  இன்று கேரளாவில் மத நம்பிக்கைகள் மற்றும் மாநில அரசாங்கத்தின் கொடுமை ஆகியவற்றிற்கு இடையே ஒரு போராட்டம் நடக்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பிற அமைப்புகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

  நீதிமன்ற தீர்ப்பை காட்டி வன்முறையை உருவாக்க முயல வேண்டாம். ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது. சபரிமலை பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் பாஜக என்றும் துணை நிற்கும்.  இந்தியாவில் பல கோயில்களில் பலவிதமான விதிகளும், வழிபாடுகளும் உள்ளன என்பதை, கோர்ட் உத்தரவின்பேரில் சபரிமலை கோயிலுக்கு சென்று வன்முறையை தூண்ட நினைத்தவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

  சபரிமலையில் எப்படி பெண்களுக்கு அனுமதி இல்லையோ அதேபோல் இந்தியாவில் பல கோயில்களில் ஆண்களுக்கும் அனுமதி இல்லை.  எனவே ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது என தெரிவித்துள்ளார். #SabarimalaTemple #BJP #AmitShah #PinarayiVijayan
  ×