என் மலர்
செய்திகள்

நிதிஷ்குமார் வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட அமித்ஷா
பீகாரில் சுற்றுப்பயணம் செய்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, முதல் மந்திரி நிதிஷ்குமார் வீட்டில் இரவு உணவை முடித்து கவர்னரை சென்று சந்தித்தனர். #BJP #AmitShah #NitishKumar
பாட்னா:
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் பாஜக கூட்டணி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணியில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இணைந்துள்ளது.
இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, பாஜக தலைவர் அமித் ஷா இன்று பீகார் சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும், பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அமித்ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், பீகாரில் எங்கள் கூட்டணி ஆட்சி தொடரும் என தெரிவித்தார்.
இந்நிலையில், பீகாரில் சுற்றுப்பயணம் செய்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, முதல் மந்திரி நிதிஷ்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் நிதிஷ்குமார். அதன்பின்னர், இருவரும் இரவு உணவை முடித்தனர். அதைத் தொடர்ந்து இருவரும் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சென்று சந்தித்தனர்.
தே.ஜ. கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் இணைந்த பிறகு அமித்ஷா பாட்னா வருவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #AmitShah #NitishKumar
Next Story






