search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ymca ground"

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லாட்ஜுகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
    • விமான நிலையம் மற்றும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் ஆகியவை மத்திய போலீஸ் படையின் முழு கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் சென்னை வருகிறார். இதையொட்டி மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது.

    சந்தேகத்துக்கு இடமாக யாராவது சுற்றித்திரிகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லாட்ஜுகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது லாட்ஜ்களில் தங்கி உள்ள வர்கள் எதற்காக தங்கி இருக்கிறார்கள்? அவர்கள் கொடுத்துள்ள முகவரி உண்மையானது தானா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    பிரதமர் மோடி இன்று பிற்பகலில் சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்திற்கு செல்கிறார். இதைத் தொடர்ந்து அவர் காரில் பயணிக்கும் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழி நெடுக போலீசார் நேற்று இரவில் இருந்தே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள உயரமான கட்டிடங்களில் இன்றும் கண்காணித்து வருகிறார்கள். சென்னை விமான நிலையம் மற்றும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் ஆகியவை மத்திய போலீஸ் படையின் முழு கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இதே போன்று கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடலோரங்களிலும் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் வருகையொட்டி நேற்று பிற்பகலில் விமான நிலையத்தில் இருந்து நந்தனம் வரையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதே போன்று சென்னையில் இருந்து கல்பாக்கம் வரையில் 3 ராணுவ ஹெலிகாப்டர்களும் ஒத்திகையில் ஈடுபட்டு கண்காணித்தன.

    இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி இன்று சென்னை பொதுக் கூட்டத்தை முடித்துவிட்டு தெலுங்கானாவுக்கு புறப்பட்டு செல்லும் வரையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பெயரில் அனைத்து உயர் போலீஸ் அதிகாரிகளும் சென்னை மாநகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. #KarunanidhiCondolenceMeeting
    சென்னை:

    திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி வயோதிகம் காரணமாக சென்னையில் காலமானார்.
     
    அவரது மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நினைவேந்தல் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திருச்சி, மதுரை, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் நினைவேந்தல் கூட்டங்கள் நடந்தன.

    இதையடுத்து, தெற்கில் உதிக்கும் சூரியன் என்ற தலைப்பில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் நினைவஞ்சலி கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

    இந்த நினைவேந்தல் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜக சார்பில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, தேசிய செயலாளர் முரளிதரராவ், காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம்நபி ஆசாத் எம்.பி., தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், ஆந்திரா மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்பட பலர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #KarunanidhiCondolenceMeeting
    திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்பட பல்வேறு மாநில முதல் மந்திரிகள் பங்கேற்க உள்ளனர் என திமுக அறிவித்துள்ளது. #DMK #Karunanidhi #AmitShah
    சென்னை:

    திமுக சார்பில் வரும் 30ம் தேதி கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநில முதல் மந்திரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக திமுக அறிவித்திருந்தது.

    இந்நிலையில், கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்க உள்ளார் என திமுக தெரிவித்துள்ளது.



    இதுதொடர்பாக, திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 30-ம் தேதி கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார். மேலும், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர் என அறிவித்துள்ளது. #DMK #Karunanidhi #AmitShah
    ×