என் மலர்
நீங்கள் தேடியது "49th edition"
- எதிர்பார்ப்புக்கு தள்ளுபடி விலை, அனைத்து பதிப்பகங்களின் புத்தகங்கள் கிடைக்கும் இடம் என பல காரணங்கள் இருக்கலாம்
- கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
தமிழ்நாடு மட்டுமின்றி நம் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த புத்தகப் பிரியர்களும் ஆண்டுதோறும் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது சென்னை புத்தக கண்காட்சியைத்தான். அதற்கு தள்ளுபடி விலை, அனைத்து பதிப்பகங்களின் புத்தகங்கள் கிடைக்கும் இடம் என பல காரணங்கள் இருக்கலாம். இந்நிலையில் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள புத்தகக்கண்காட்சி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
48வது புத்தக கண்காட்சி நடப்பாண்டு நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது 49வது புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. எப்போதும்போலவே இந்தாண்டும் ஜனவரி மாதம்தான் புத்தக கண்காட்சி நடத்தப்படவுள்ளது. அதன்படி 49ஆவது சென்னை புத்தகக் காட்சி வரவிருக்கும் ஜனவரி 7 முதல் 19 வரை என 13 நாட்கள் நடைபெறவிருக்கிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தின் (பபாசி) சார்பில் நடத்தப்படும் இந்தப் புத்தகக் காட்சி, வழக்கம்போல இந்த ஆண்டும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெறவுள்ளது. கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.






