என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்சிக்கு புறப்பட்டது த.வெ.க. விஜயின் பிரச்சார வாகனம்..!
- தமிழகம் முழுவதும் நாளை முதல் தமது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
- விஜய் நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார்.
2026- தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) முதல் தமது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் நாளை காலை 10.30 மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து தொடங்குகிறது.
இதற்காக விஜய் நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார். பின்னர் விமான நிலையத்திலிருந்து பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ள திறந்தவெளி பிரசார வாகனத்தில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் அலுவலகம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா வழியாக மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை செல்கிறார். அங்கு திறந்த வேனில் நின்றபடி அரை மணிநேரம் உரையாற்றுகிறார்.
முன்னதாக பிரசார வாகனம் சென்னையில் இருந்து திருச்சிக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இருந்து பிரச்சார வாகனம் திருச்சிக்குப் புறப்பட்டது.
உங்கள் விஜய் நான் வரேன் என்ற வாசகத்துடன் பனையூரில் இருந்து பிரச்சார வாகனம் புறப்பட்டது.
அதன்படி, திருச்சியில் பிரச்சார வாகனத்தில் இருந்தபடி பொதுமக்களை தவெக தலைவர் விஜய் சந்திக்கிறார்.






