என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் கே.என்.நேரு"

    • அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்ததாக தகவல் வெளியானது
    • அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அண்மையில், அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்ததாக கூறப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கே.என்.நேரு, "நான் பணம் கொடுக்க கூடாதா? நான் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு ரூ.44 லட்சம் காணிக்கை வழங்கியது குறித்து விமர்சனம் செய்யட்டும்... எல்லோரும் என்னை நல்லவன் என்று சொல்வார்களா?" என்று கோவமாக பதில் அளித்தார்.

    இந்நிலையில், இன்று அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து மீண்டும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "திருப்பதி கோவிலுக்கு நான் நன்கொடை கொடுக்கவில்லை. என்னிடம் அவ்வளவு பணமில்லை. என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என் பெயரில் நன்கொடை கொடுத்துள்ளார். எனக்கு இது முன்னரே தெரிந்திருந்தால் வேண்டாம் என்று கூறியிருப்பேன்" என்று தெரிவித்தார்.

    • பழனிசாமி விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல. பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம்
    • பழனிசாமியின் அழைப்பைக் கம்யூனிஸ்ட்டுகளும் விடுதலைச் சிறுத்தைகளும் நிராகரித்திருக்கின்றன.

    திமுக கூட்டணிக் கட்சிகளைப் பற்றிப் பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா? என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பயணம் போய்க் கொண்டிருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினம் தினம் கேலிக் கூத்துகளை அரங்கேற்றி நெட்டிசன்களுக்கு ட்ரோல் மெட்டிரியல் ஆகிக் கொண்டிருக்கிறார்.

    'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பைத் தயவு செய்து மாற்றிவிடுங்கள் பழனிசாமி அவர்களே! 'சம்பந்தியை மீட்டோம்; சம்பாதித்த பணத்தைக் காப்போம்!', 'மக்களை மறப்போம்; தமிழ்நாட்டை விற்போம்!', 'மகனைக் காப்போம்; சம்பந்தியை மீட்போம்' எனத் தலைப்பை மாற்றிக் கொண்டு பழனிசாமி பாஜக அடிமை பயணத்தைத் தொடங்கலாம்.

    பாஜக கூட்டணியை விட்டு விலகுவது போல 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி, கூட்டணிக் கட்சிகளை அதிமுகவில் சேர்க்க முயன்றார் பழனிசாமி. ஆனால், அது கைகூடவில்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக திமுக கூட்டணிக் கட்சிகளை அழைத்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்சிகூட அதிமுக அணியில் சேரவில்லை. '2026 தேர்தலில் பலமான கூட்டணியை அமைப்பேன்; வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது; தொண்டர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்; பாஜக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி' என்றெல்லாம் தொடர்ந்து பழனிசாமி உருட்டிக் கொண்டே இருந்தார். 'நீ உருட்டுபா… உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும்' என பழனிசாமியை உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்கியதுதான் மிச்சம். கூட்டணியை உருவாக்கக் கூடிய பழனிசாமியின் ஆளுமைதான் சரிந்து தொங்கியது!

    ஆனால், அதிமுகவின் கூட்டணி கணக்கை டெல்லியில் இருக்கும் பழனிசாமியின் முதலாளிகள் போட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசியில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து, கூட்டணியை அறிவித்து விட்டுப் போனார். ஆனால், கூட்டணிக்குத் தலைமை தாங்குவதாகத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி நாட்டாமை படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கும் காட்சியில் ஒருவர் மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் போல அமித்ஷா பக்கத்தில் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்.

    அதிமுக கூட்டணி அமைந்தாலும் அதனை 'அதிமுக கூட்டணி' என்று அதிமுகவினரைத் தவிர மற்றவர்கள் யாருமே சொல்வதில்லை. அதிமுக, பாஜக, தமாகா தவிர அந்தக் கூட்டணியில் வேறு யாருமே இல்லாததால், 'மக்களை மறப்போம்; தமிழ்நாட்டை விற்போம்!' பயணத்தில் கூட்டணிக்கு மீண்டும் ஆள் பிடிக்க இறங்கிவிட்டார் பழனிசாமி. 'பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப் போகிறது' என்று ஆருடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ரத்னக் கம்பளத்தைத் தூக்கிக் கொண்டு திரிகிறார்.

    கோவை பயணத்தில், "கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா? இல்லையா? என்று முகவரி இல்லாமல் இருக்கிறது" என்று பேசியவர், சிதம்பரம் பயணத்தில், கூட்டணியில் சேர விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்கிறார். 'எங்கள் கூட்டணியில் சேர்ந்தால் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்' என்கிறார். 'கோவையில் பேசியவரும் சிதம்பரத்தில் பேசியவரும் ஒரே ஆளா?' என்று வாக்காளர் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    பழனிசாமி விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல. பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம் என்பதை திமுகவின் தோழமை கட்சிகளும் மக்களும் அறிவார்கள். அதனால்தான் பழனிசாமியின் அழைப்பைக் கம்யூனிஸ்ட்டுகளும் விடுதலைச் சிறுத்தைகளும் நிராகரித்திருக்கின்றன.

    பாஜகவோடு அதிமுக கூட்டணி வைப்பதற்குச் சில நாட்கள் முன்பு கூட, 'திமுக கூட்டணியில் இருக்கிற கட்சிகள் எந்தக் காலத்திலும் வளராது' என விரக்தியாக பழனிசாமி சாபம் இட்டார். அப்படிப் பேசிய நாக்குதான், பிறகு கூட்டணிக்காகக் கெஞ்சின. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளை 'தத்துவப் பச்சோந்திகள்' என மிகக் கீழ்த்தரமாக விமர்சித்தார் ஜெயலலிதா. அவருடைய வழியில் பழனிசாமி, 'கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுகவிடம் பணம் வாங்கியபோதே அவர்களது கதை முடிந்துவிட்டது'' என மோசமாகப் பேசுகிறார்.

    இப்படி திமுக கூட்டணிக் கட்சிகளை விமர்சிக்கும் பழனிசாமி, என்றைக்காவது பாஜகவை விமர்சித்திருக்கிறாரா? கூட்டணி ஆட்சி என்று மூச்சுக்கு முப்பது தடவை சொல்லிக் கொண்டிருக்கும் அமித்ஷாவிற்கு பதிலடி தர முடியாத கோழை பழனிசாமி திமுக கூட்டணிக் கட்சிகளைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா?

    ''அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டினால்தான் தமிழ்நாட்டு மக்களின் பிரச்னை தீரும். அதனால் நாங்கள் அவர் வீட்டின் கதவைத் தட்டினோம்" என்று வெட்கமே இல்லாமல் சொல்கிறார் பழனிசாமி. அமித்ஷா வீட்டிற்குப் போவதாக இருந்தால் சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே! எதற்காக மக்கள் பிரச்னையை பேச கார்களில் மாறி மாறிப் போக வேண்டு? 'டெல்லி அதிமுக அலுவலகத்தைப் பார்க்க வந்தேன்' என ஏன் பொய் சொல்ல வேண்டும்?

    தோல்வி மேல் தோல்வியடைந்து வரும் பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் படுதோல்வி அடைவார் என்பது உறுதியானதால்தான் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி கூட்டணிக் கட்சிகளுக்கு ஆள் பிடிக்க பஸ்சில் பயணிக்கிறார். 2021 தேர்தலில் பழனிசாமியின் பச்சைப் பொய்களை நம்பாமல், புறந்தள்ளிய மக்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தலைப் போல 2026 தேர்தலிலும் பித்தலாட்ட பாஜக - அதிமுக கூட்டணியைப் புறக்கணித்து நம்பிக்கை நாயகனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மீண்டும் அரியணையில் ஏற்றுவார்கள். மக்களின் பேராதரவோடு திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும்" என்று தெரிவித்துள்ளார். 

    • பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தவுடன், அ.தி.மு.க. தொண்டர்கள் மனம் சோர்ந்து விட்டனர்.
    • நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டப் பேரவை தொகுதி தி.மு.க. பாக நிலை முகவர்கள், டிஜிட்டல் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார்.

    அமைச்சர் சசிவ சங்கர்,ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்று வருவதை திண்ணை பிரச்சாரம் செய்வது, தோழமை கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது, கட்சிக்கு எதிரான பொய், அவதூறுகளை முறியடிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து களமாடுவது, புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்ப்பது, 2 மாதங்களுககு முன்பு வரை நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல் சவால் நிறைந்ததாக இருக்கும் என நினைத்தோம்.

    தற்போது நமது கூட்டணியில் எந்தவித சஞ்சலமும், சலசலப்பும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். ஆனால் எதிரணியினர் அப்படி அல்ல. பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தவுடன், அ.தி.மு.க. தொண்டர்கள் மனம் சோர்ந்துவிட்டனர். ஆட்சி அமைந்தால், அந்த அமைச்சரவையில் பா.ஜ.க.வும் பங்கு பெறும் என்று கூறி வருகின்றனர்.

    ஆகையால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லாத நிலை உள்ளது. பா.ம.க.-வினருக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக நமக்கு ஒரு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது அரியலூர், பெரம்பலூரில் நமக்கு கூடுதல் பலம்.

    பா.ஜ.க.-வினர் தாங்கள் தேர்தலில் வெல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் தி.மு.க. வெல்லக்கூடாது என நினைக்கின்றனர். அதனால்தான் நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகின்றனர். நாளையே முதல்வராவது போல் நான் உங்களோடு வரவில்லை, அவர்களோடு செல்லவில்லை என கூறிக் கொண்டுள்ளார்.

    அதற்கெல்லாம் நாம் கவலைப்பட தேவையில்லை. இளைஞரணியினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே அனைவரும் சிறப்பாக செயல்பட்டு தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவது நமது கடமை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கிலோ கணக்கில் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தகவல்.
    • சட்ட விரோத பணப்பரி மாற்றம் நடந்து இருப்பதாக சந்தேகம்.

    சென்னை:

    தமிழக அமைச்சரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. திருச்சி தில்லை நகரில் இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. சென்னையில் அரசு பங்களாவில் அவர் குடும்பத்தினருடன் தங்கி உள்ளார்.

    அமைச்சர் கே.என்.நேருவுக்கு அருண் நேரு என்ற மகன் உள்ளார். பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருக்கும் அருண்நேரு ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார்.


    அமைச்சர் கே.என்.நேருவுக்கு ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகிய 2 சகோதரர்கள் உள்ளனர். ரவிச்சந்திரன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 3-வது குறுக்கு தெருவில் வசித்து வருகிறார்.

    இவர் டி.வி.எச். (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் டி.வி.எச். எனர்ஜி ரிசோர்சஸ் என்ற மின் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

    கடந்த 2018-ம் ஆண்டு இந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது கணக்கில் வராத பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. கிலோ கணக்கில் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

    அந்த சோதனையின் போது கே.என்.நேரு சகோதரர்களின் நிறுவன வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் சட்ட விரோத பணப்பரி மாற்றம் நடந்து இருப்பதாக அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து இது தொடர்பான தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரி களுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் ஆவ ணங்களுடன் கொடுத்து இருந்தனர்.

    அந்த ஆவணங்களை ஆய்வு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு தகவல்களை பெற முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் இன்று (திங்கட்கிழமை) காலை சென்னை, திருச்சி, கோவையில் உள்ள அமைச் சர் கே.என்.நேருவின் வீடு மற்றும் அவரது சகோத ரர்கள் மகன் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அம லாக்கத்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை யில் ஈடுபட்டனர்.

    சென்னையில் 7 இடங்க ளில் சோதனை நடத்தப் பட்டது. அடையாறு, தேனாம்பேட்டை, சி.ஐ.டி. காலனி, எம்.ஆர்.சி.நகர், ஆழ்வார்பேட்டை ஆகிய இடங்களில் கே.என்.நேரு வின் சகோதரர் ரவிச்சந்திர னுக்கு சொந்தமான இடங்க ளில் சோதனை நடத்தப் பட்டது.

    ரவிச்சந்திரன் டி.வி.எச். என்ற பெயரில் கட்டுமான நிறுவனங்கள் நடத்தி வருகி றார். ராஜா அண்ணாமலை புரத்தில் டி.வி.எச். எனர்ஜி ரிேசார்சஸ் என்ற மின் உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார். ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணாபுரி முதல் தெரு வில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.

    காற்றாலை மற்றும் சோலார் மூலம் மின் உற்பத்தி செய்வது தொடர் பா அலுவலகங்க ளாக அவை உள்ளன. கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்த மின் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகளவில் இன்று சோதனை நடத்தி னார்கள்.

    அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு எம்.பி.க்கு சொந்தமாக ஆழ்வார்பேட்டையில் ஜி.எஸ்.என்.ஆர். ரைஸ் இண்டஸ்டீரிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் உள்ளது. அங்கும் அமலாக் கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    அதுபோல அடையார் காந்தி நகர் 4-வது குறுக்கு தெருவில் உள்ள வைத்திய நாதன் அடுக்குமாடி குடியி ருப்பில் ஒரு வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனைகளில் என்னென்ன ஆவணங்கள் கிடைத்தன என்ற விவ ரங்கள் இன்று பிற்பகலில் தெரிய வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருக்கு சொந்தமான, திருச்சி தில்லை நகர் 5-வது குறுக்குத் தெருவில் உள்ள வீட்டில் கோவையில் இருந்து வந்துள்ள அமலாக் கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள னர்.

    மேலும் அவரது சகோத ரர் மறைந்த கே.என்.ராம ஜெயத்துக்கு சொந்தமான திருச்சி தில்லை நகர் 10வது குறுக்கு தெருவில் உள்ள வீட்டில், மதுரையில் இருந்து வந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த 2 இடங்களிலும் அமலாக்கத்துறையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணை ராணுவ படையினர் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் கே. என். நேரு வீட்டு முன்பு கட்சியினர் திரண்டனர். இதனால் தில்லைநகர் 5-வது கிராஸ் மற்றும் 10-வது கிராஸ் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    கே.என். நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீடு கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளது.

    இந்த குடியிருப்புக்கு 3 கார்களில் இன்று காலை 7 மணிக்கு அமலாக்கத்துறை யினர் வந்தனர். அவர்கள் மணிவண்ணன் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை யில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நீடித்தது. சோத னையை முன்னிட்டு அந்த பகுதியில் போலீஸ் பாது காப்பு போடப்பட்டிருந்தது. அமலாக்கத்துறை யினர் சென்னையில் இருந்து வந்த தாக தெரிவித்து உள்ளனர்.

    டி.வி.எச். கட்டுமான நிறுவனம் கோவை திருச்சி சாலை, அவிநாசி சாலை உள்பட பல்வேறு இடங்க ளில் அடுக்குமாடி குடியி ருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இதனை கே.என். நேருவின் சகோதரர் மணிவண்ணன் கவனித்து வருகிறார். இந்தநிலையில் தான் அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

    • கே.என்.நேரு பலமுறை நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார்.
    • ரூ.900 கோடியில் நவீன வசதிகளுடன் பிரமாண்டமான ஒருங்கிணைந்த பேருந்து முனையம்.

    திருச்சி:

    திருச்சி பஞ்சப்பூரில் ரூ.900 கோடியில் 40 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமாக ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து முனையத்தோடு, கனரக சரக்கு வாகன முனையம், ஆம்னி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி அடிக்கல் நாட்டி னார். இதை தொடர்ந்து பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. அமைச்சர் கே.என்.நேரு பலமுறை நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளது.

    இதை தொடர்ந்து இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை அடுத்த மாதம் (மே) 9-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந்தேதி மாலை திருச்சி வருகிறார். மாலையில் அவர் திருச்சியில் தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

    9-ந்தேதி காலை 9.30 மணிக்கு புதிய பேருந்து முனைய திறப்பு விழா நடக்கிறது. விழாவில் புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

    தொடர்ந்து அங்கு நடைபெறும் அரசு விழாவில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 55 ஆயிரம் பேருக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    மேல் தளத்தில் நகர பஸ்கள், கீழ் தளத்தில் விரைவு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஒரு மணி, 2 மணி நேரம் நிற்கக் கூடிய பஸ்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பஸ்களுக்கும் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.


    இது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

    பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பேருந்து நிறுத்தும் தளம், பயணிகளுக்கான காத்திருப்பு அறை, கழிவறை வசதிகள் மேலும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பேருந்து முனையத்தின் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் கூடுதலாக கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் எல்.ஈ.டி திரை அமைக்கும் பணிகள், கூரைப் பகுதியில் எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தல் நடந்து வருகிறது.


    மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் பிரத்யேக தடங்கள் புல்வெளி பரப்புகள் அமைத்தல் மற்றும் ஒளிரும் போக்குவரத்து எச்சரிக்கை பலகைகள் அமைக்கும் பணிகள் மற்றும் ஆம்னி தனியார் பேருந்து நிலையம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    தமிழ்நாட்டின் மத்திய பகுதியாக திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமைய உள்ளதால் தேவைப்படும் இடங்களில் கூடுதலாக கழிப்பிட வசதிகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கன்னியாகுமரிக்கு நாளை வருகை
    • நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டிடத்தையும் பார்வையிடுகிறார்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி அவசரக் கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் முத்துராமன், செல்வக்குமார், அகஸ்டினா கோகிலவாணி கவு ன்சிலர்கள் மீனாதேவ், ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், நவீன் குமார், சேகர்,அனிலா சுகுமாறன், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாக ர்கோவில் மாநகராட்சி வார்டுக்கு உட்ப ட்ட பகுதியில் பகுதி சபா கூட்டம் நடத்தி பொது மக்களிடமிருந்து குறைகள் கேட்க ப்படுகிறது.

    அதன் அடிப்படையில் நாளை 52 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடக்கிறது. இந்த பகுதி சபா கூட்டமானது 3 மாதத்திற்கு ஒருமுறை வார்டு பகுதிகளில் நடத்தப்படும். மேலும் நாளைமறுநாள் 2-ந் தேதி மாநகர சபை கூட்டம் நடத்தப்படுகிறது.

    நாகர்கோவில் பெருவிளையில் காலை 9 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதைத் தொடர்ந்து வடசேரி பஸ் நிலையத்தில் ஆய்வு பணியை மேற்கொள்கிறார் .

    பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடத்தை அமைச்சர் கே. என். நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதை தொடர்ந்து மாலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொள்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கே.என்.நேரு நாளை 1-ந் தேதி தேதி சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வருகிறார்.

    பின்னர் மாலை கன்னியாகுமரி வருகை தரும் அவருக்கு கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் அனைவரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் சாலை சீரமைப்புக்குரூ.30 கோடி நிதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு மிகவும் பழுதான சாலைகள் முதல் கட்டமாக சீரமைக்கப்படும் என்று மேயர் மகேஷ் தெரிவித்தார்.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், அமைச்சர் கே.என்.நேருவிடம் நேரில் சென்று மனு கொடுத்தார்.
    • தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மனுவில் கூறபட்டிருந்தது.

    சாம்பவர் வடகரை:

    சாம்பவர்வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து சார்பாக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் நேரில் சென்று மனு கொடுத்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சியில் 14 -வது வார்டு பெரியகுளம் சாலை- விந்தன் கோட்டை அழகிய மணவள பெருமாள் கோவில் இணைப்பு சாலை முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது. சிதிலமடைந்த தார் சாலையையும் மீதமுள்ள மண் சாலையையும் தார்சாலையாக அமைத்து, சாலை இருபுறமும் வெள்ளை பாதுகாப்பு சுவர்கள் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும், சாம்பவர் வடகரை பேரூராட்சி 12- வது வார்டு வேலாயுதபுரம் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அப்துல் கலாம் நகரில் வீடுகள் கட்டி அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் நலன் கருதி சுமார் 550 மீட்டர் தொலைவுக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து குடிநீர் பைப் லைன் அமைத்திடவும் மற்றும் ஃபேவர் பிளாக் சாலை அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கேளிக்கைகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் அதிகாரமளிக்கவும் வரைமுறை இல்லை.
    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி திருத்த சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி சட்டமானது அதில் குறிப்பிட்டுள்ள கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மீது வரி விதிப்பதற்கும், வசூலிப்பதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குகிறது.

    ஆனால் கல்வி நிறுவனம் உள்ளடங்களாக எந்த ஒரு நிறுவனத்தாலும் அனுமதிக்கான கட்டணத்தின் பேரில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது ஏதேனும் பிற நிகழ்ச்சிகள் மீது கேளிக்கைகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் அதிகாரமளிக்கவும் எந்த ஒரு வரைமுறையும் இல்லை.

    எனவே மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கும் அனுமதிக்கான கட்டணம் ஒவ்வொன்றின் மீதும் 10 விழுக்காடு வீதத்தில் கேளிக்கைகள் வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் தகுந்தவாறு சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளது.

    இதன்படி எந்த ஒரு கல்வி நிறுவனம் அல்லது நிறுவனம் சங்கம், குழுமம் எந்த பெயரிலும் அழைக்கப்படும் நபர்களின் பிற கழகம் ஆகியவை இதில் அடங்கும்.

    இதன் வளாகத்தில் அல்லது நுழைவு சீட்டு, பங்களிப்பு, சந்தா எந்த வகையிலும் வசூலிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் அனுமதிக்கான கட்டணம் வாங்கப்படும் கல்வி நிறுவன இடங்களில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீத கேளிக்கை வரி உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

    • 7-வது மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடாது.
    • ராயபுரம் தொகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

    ராயபுரம் தொகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சட்டசபையில் உறுப்பினர் மூர்த்தி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூறியதாவது:-

    சென்னைக்கு தற்போது தேவையான குடிநீர் கொள்ளளவு 13.22 டி.எம்.சி. ஆனால் தற்போது 15.560 டி.எம்.சி. குடிநீர் கொள்ளவு உள்ளது. எனவே போதுமான அளவுநீர் இருப்பு உள்ளதால் சென்னையில் இந்த ஆண்டின் 7-வது மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடாது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது சென்னையில் குடிநீர் 900 எம்.எல்.டி வழங்கப்பட்டது. தற்போது 1040 எம்.எல்.டி அளவு குடிநீர் சென்னைக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மீண்டும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமையும்.
    • பறவைகள் பூங்கா கட்டண குறைப்பு குறித்து மாவட்ட கலெக்டர் முடிவெடுப்பார்.

    திருச்சி:

    தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அடிப்படை வசதிகள் அனைத்தையும் தரமாக அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளோம்.

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தை அகற்றி அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. அதற்கு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை ஒருபோதும் அகற்ற மாட்டோம். எப்போதும் போல் வழக்கமாக மக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் செயல்படும் என தெரிவித்தார்.

    திருச்சி பறவைகள் பூங்கா கட்டண குறைப்பு குறித்து மாவட்ட கலெக்டர் முடிவெடுப்பார்.

    மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை. பட்ஜெட்டில் கூட தமிழ்நாடு என்ற பெயர் இல்லை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்து விட்டோம்.

    ஆகையால் தான் மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியது எதுவும் நடக்கப் போவதில்லை. மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது.
    • அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குரூப் 1 தேர்வில் டி.எஸ்.பி. பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முசிறி எஸ். காயத்ரி, சி.சிந்து, கபிலன்,வேளாண்துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அருண் ஜூலியஸ் உள்ளிட்ட மாணவ மாணவியரை பாராட்டி பரிசு வழங்கி பேசுகிறார்

    திருச்சி,

    திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இங்கு மத்திய மாநில அரசு பதவிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தில் பயின்ற 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்.தேர்வுகளில் வெற்றி பெற்று பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில்சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்விலும் என்.ஆர்.ஐ.ஏ. எஸ். அகாடமி மாணவர்கள் சாதித்தனர். இதை தொடர்ந்து அந்த மாணவர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

    என்.ஆர்.ஐ. ஏ.எஸ்அ காடமி தலைவர் ஆர். விஜயாலயன் வரவேற்று பேசுகிறார். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குரூப் 1 தேர்வில் டி.எஸ்.பி. பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முசிறி எஸ். காயத்ரி, சி.சிந்து, கபிலன்,வேளாண்துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அருண் ஜூலியஸ் உள்ளிட்ட மாணவ மாணவியரை பாராட்டி பரிசு வழங்கி பேசுகிறார்.

    மேலும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவில் கல்வியாளர்கள்,என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி மாணவ- மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் என்.ஆர். பப்ளிக் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    முடிவில் மாணவர் எம்.மணிவண்ணன் நன்றி கூறுகிறார்.

    • திருச்சி ஒருங்கிணைந்த பஸ் முனைய பணியின் இரண்டாவது டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பைப்புகளை பதிப்பதற்கு சாலைகளை தோண்டி தான் ஆக வேண்டி இருக்கிறது.

    திருச்சி :

    திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு உறுதி மொழியை வாசிக்க மாணவிகள் அந்த உறுதியை ஏற்றுக்கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் அந்த மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளை வைத்து இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வினை நடத்தி இருக்கிறார். இதில் வழங்கி உள்ள அறிவுரைகளை இங்கு இருக்கக்கூடிய ஐ.ஜி., டி.ஐ.ஜி., கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பின்பற்றுவார்கள்.

    சட்டமன்ற உறுப்பினர்களிடமும் போதைப்பொருளை தடுக்க காவல்துறைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டிருக்கிறோம். இங்கே பேசிய சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது ஒவ்வொரு பள்ளிகளிலும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். போலி லாட்டரி சீட்டு விற்பனையை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருச்சி ஒருங்கிணைந்த பஸ் முனைய பணியின் இரண்டாவது டெண்டர் விடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பைப்புகளை பதிப்பதற்கு சாலைகளை தோண்டி தான் ஆக வேண்டி இருக்கிறது. அந்த பணிகள் முடிவடைந்த இடங்களில் சாலைகள் போடும் பணி வேகமாக நடக்கிறது. மழைக்காலங்களில் சாலை போட்டால் தார் ஒட்டாது. பத்து ஆண்டுகளாக சாலையே போடாதவர்களிடம் எதையும் நீங்கள் கேட்கவில்லை. சாலை போடும் எங்களிடம் மட்டும் கேள்வியாக கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருச்சி நிகழ்ச்சியில் மேயர் மு.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் சௌந்தரபாண்டியன், இனிகோ இருதயராஜ், கதிரவன், பழனியாண்டி, அப்துல் சமது, மத்திய மண்ட ஐ.ஜி. சந்தோஷ் குமார், டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மண்டல தலைவர்கள் துர்காதேவி, ஜெய நிர்மலா மற்றும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

    இந்த உறுதி ஏற்பு நிகழ்வில் பங்கேற்ற ஐந்து மாணவிகள் லேசான மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு விளையாட்டு மைதானத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மயக்கம் தெளிந்தனர். நீண்ட நேரம் வெயிலில் நீண்ட காரணத்தினால் அவர்களுக்கு சோர்வு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் ஆசிரியை ஒருவரும் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×