என் மலர்
நீங்கள் தேடியது "பேருந்துநிலையம்"
- ஒரே நேரத்தில் 22 பஸ்களை நிறுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் அமைய உள்ளது.
- கடந்த 9-ந்தேதி அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் இந்த பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
ஆவடி பேருந்து நிலையம் சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கக்கூடிய முக்கிய நிலையமாக உள்ளது. தற்போது இந்த பஸ்நிலையம் 1.93 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கிருந்து கோயம்பேடு, திருவான்மியூர், தாம்பரம், பூந்தமல்லி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புறநகர் பகுதிகளுக்கு மட்டுமின்றி தொலைதூரப் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.
ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ள நிலையில் இங்குள்ள பஸ்நிலையம் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இட நெருக்கடியில் செயல்பட்டு வந்தது. இதையடுத்து ஆவடி பஸ்நிலை யத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து ஆவடி பஸ் நிலையத்தை 3 தளங்களுடன் ரூ.36.06 கோடி செலவில் நவீன வசதியுடன் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 9-ந்தேதி அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் இந்த பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
65 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட உள்ள இந்த புதிய பஸ் நிலையத்தில் உணவுத் திடல், ஷாப்பிங் பகுதி, நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிப்பறைகள் மற்றும் பஸ்களை நிறுத்து வதற்காக பிரத்யேகமாக வடிவ மைக்கப்பட்ட தரைத்தளம், ஒரே நேரத்தில் 22 பஸ்களை நிறுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் அமைய உள்ளது.
ஆவடி பஸ் நிலையம் சென்னை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில், ஆவடி ரெயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. ஏற்கனவே ஆவடி ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இதனை இந்த ஆண்டு ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது ஆவடி பஸ்நிலைய பணிகளும் நடந்து வரும் நிலையில் பஸ் நிலையத்தில் இருந்து எதிரே உள்ள ரெயில் நிலையத்திற்கு பயணிகள் சாலையை கடக்காமல் எளிதாக செல்லும் வகையில் பஸ்நிலையம்- ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் உயர் மட்ட பாதை அமைக்க வேண்டும் என்று பொது மக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கே.என்.நேரு பலமுறை நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார்.
- ரூ.900 கோடியில் நவீன வசதிகளுடன் பிரமாண்டமான ஒருங்கிணைந்த பேருந்து முனையம்.
திருச்சி:
திருச்சி பஞ்சப்பூரில் ரூ.900 கோடியில் 40 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமாக ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து முனையத்தோடு, கனரக சரக்கு வாகன முனையம், ஆம்னி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி அடிக்கல் நாட்டி னார். இதை தொடர்ந்து பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. அமைச்சர் கே.என்.நேரு பலமுறை நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளது.
இதை தொடர்ந்து இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை அடுத்த மாதம் (மே) 9-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந்தேதி மாலை திருச்சி வருகிறார். மாலையில் அவர் திருச்சியில் தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
9-ந்தேதி காலை 9.30 மணிக்கு புதிய பேருந்து முனைய திறப்பு விழா நடக்கிறது. விழாவில் புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
தொடர்ந்து அங்கு நடைபெறும் அரசு விழாவில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 55 ஆயிரம் பேருக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
மேல் தளத்தில் நகர பஸ்கள், கீழ் தளத்தில் விரைவு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஒரு மணி, 2 மணி நேரம் நிற்கக் கூடிய பஸ்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பஸ்களுக்கும் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பேருந்து நிறுத்தும் தளம், பயணிகளுக்கான காத்திருப்பு அறை, கழிவறை வசதிகள் மேலும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பேருந்து முனையத்தின் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் கூடுதலாக கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் எல்.ஈ.டி திரை அமைக்கும் பணிகள், கூரைப் பகுதியில் எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தல் நடந்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் பிரத்யேக தடங்கள் புல்வெளி பரப்புகள் அமைத்தல் மற்றும் ஒளிரும் போக்குவரத்து எச்சரிக்கை பலகைகள் அமைக்கும் பணிகள் மற்றும் ஆம்னி தனியார் பேருந்து நிலையம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டின் மத்திய பகுதியாக திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமைய உள்ளதால் தேவைப்படும் இடங்களில் கூடுதலாக கழிப்பிட வசதிகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் தற்காலிக பேருந்து நிலையத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
- சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது
அரியலூர்,
அரியலூர் நகராட்சியில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. மழையின் காரணமாக இந்த பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி பேருந்துக்குள் செல்கின்றனர். எனவே தற்காலிக பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






