என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய விவகாரம்- த.வெ.க. செயலாளர் ஜாமீனில் விடுவிப்பு
    X

    ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய விவகாரம்- த.வெ.க. செயலாளர் ஜாமீனில் விடுவிப்பு

    • நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
    • சிறை வாசலில்த.வெ.க. நிர்வாகிகள் வரவேற்று அழைத்து சென்றனர்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்து மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர்.

    இதனிடையே ஆம்புலன்ஸ்க்கு இடையூறு ஏற்படுத்தி தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    அவர் ஜாமீன் கோரி கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இதைதொடர்ந்து, நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவர் இன்று காலை திருச்சி சிரையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறை வாசலில்த.வெ.க. நிர்வாகிகள் வரவேற்று அழைத்து சென்றனர்.

    Next Story
    ×