என் மலர்
நீங்கள் தேடியது "Corona infection"
- இரத்த நாளங்களை முன்கூட்டியே 5 வருடங்கள் வயதாக செய்து பலவீனப்படுத்துகிறது
- இந்த ஆய்வின் முடிவுகள் யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டன.
கொரோனா தொற்றுநோய் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றின் நீண்டகால விளைவுகள் குறித்த கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்திய ஆய்வில், கோவிட் தொற்று, அது லேசானதாக இருந்தாலும், நமது இரத்த நாளங்களை முன்கூட்டியே 5 வருடங்கள் வயதாக செய்து பலவீனப்படுத்துகிறது என்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.
ஆண்களை விட பெண்களில் இந்த விளைவு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
பிரான்சில் உள்ள பாரிஸ் நகர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரோசா மரியா புருனோ தலைமையிலான ஆராய்ச்சிக் குழு இந்த ஆய்வை நடத்தியது.
செப்டம்பர் 2020 முதல் பிப்ரவரி 2022 வரை 16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,390 பேரிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டன.
"கோவிட் வைரஸ் நேரடியாக இரத்த நாளங்களைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது இரத்த நாளங்களை இயல்பை விட 5 வருடங்கள் வேகமாக வயதாக்குகிறது. இதன் விளைவாக, இதய நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது" என்று பேராசிரியர் ரோசா மரியா புருனோ தெரிவித்தார்.
கோவிட் தொற்று ஏற்படாதவர்களுடன் ஒப்பிடும்போது, கோவிடால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறிப்பாக பெண்கள், மற்றும் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு போன்ற நீண்டகால கோவிட் அறிகுறிகள் கொண்டவர்களுக்கு இரத்த நாளங்கள், தமனிகள் (Arteries) இறுக்கமாக இருந்தன என்பதை ஆய்வு காட்டுகிறது.
இருப்பினும், கோவிட் தடுப்பூசி போட்டவர்களுக்கு தமனிகள் அவ்வளவு விறைப்பாக இல்லை என்றும், அவர்களின் நிலை சற்று சிறப்பாக இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
பெண்களில் இந்த அதிக விளைவுக்குக் காரணம் அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதே என்று பேராசிரியர் புருனோ நம்புகிறார்.
"பெண்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் வேகமாகவும் வலுவாகவும் செயல்படுகின்றன. இது அவர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் அதே வலுவான பதில் தொற்றுக்குப் பிறகு இரத்த நாளங்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும்" என்று அவர் கூறினார்.
இந்த சூழலில், கோவிட் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயம் தொடர்பான ஆபத்தை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- பருவகால காய்ச்சல் என்று ஆரம்பத்தில் அறிகுறிகளை அலட்சியம் செய்தனர்.
- அவர்கள் அனைவருக்கும் கோவிட்-நெகட்டிவ் ரிசல்ட் வந்தது.
நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்திலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. காசியாபாத்தில் 14 கொரோனா வைரஸ் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மெஹ்ராலியைச் சேர்ந்த நான்கு மாத குழந்தைக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சுகாதாரத் துறை வட்டாரங்களின்படி, குழந்தை தொடர்ந்து இரண்டு நாட்களாக லேசான சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தது.
மாறிவரும் வானிலை காரணமாக பருவகால காய்ச்சல் என்று ஆரம்பத்தில் அறிகுறிகளை அலட்சியம் குழந்தையின் குடும்பத்தினர், இறுதியில் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ உதவியை நாடினர்.
அங்கு, குழந்தை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில், குழந்தைக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது, அதில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
மருத்துவக் குழுக்கள் உடனடியாக குழந்தையின் குடும்ப உறுப்பினர்களைப் பரிசோதித்தன. அவர்கள் அனைவருக்கும் கோவிட்-நெகட்டிவ் அதாவது தொற்று பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது. வீட்டிற்குள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு குடும்பமும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.
யாரும் பாதிக்காதபோதும் வைரஸ் எவ்வாறு குழந்தையை அடைந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக என்று காசியாபாத்தின் கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.கே. குப்தா தெரிவித்தார்.
- அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
- கேரள மாநிலத்தில் 95 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
கொரோனா தொற்று கடந்த 2020-ம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் நமது நாட்டில் கேரள மாநிலத்தில் தான் முதன்முதலாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல மாநிலங்களில் கொரோனா தொற்று பரவியது.
இந்தநிலையில் தற்போது சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதையடுத்து அனைத்து நாடுகளிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. நமழ நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
இருந்தபோதிலும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று அறிகுறியுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் 95 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்களில் 27 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மற்ற 68 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களின் எண்ணிக்கையில் மராட்டிய மாநிலத்தை விட கேரளா மாநிலம் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உடல்நலம் குன்றி காணப்படுகிறதே தவிர உயிரிழப்புகள் மிகக்குறைவாக ஏற்படுகிறது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- தமிழ்நாட்டில் ஜேஎன்1 உருமாறிய புதியவகை கொரோனா பரவாமல் கட்டுக்குள் வைத்திட வேண்டும்.
சென்னை:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜேஎன்1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா தொற்று உலகமெங்கும் வேகமாக பரவி வரும் சூழலில், தமிழ்நாட்டில் நேற்று 4 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப் பட்டதாகவும், கர்நாடக மாநிலத்தில் 34 பேர் பாதிக்கப்பட்டதில் 3 பேர் உயிரிழந்ததாகவும் வெளிவரும் செய்திகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பரவலின் மொத்த பாதிப்பு 4000-ஐ கடந்து அதிகரித்தாலும், ஜேஎன்1 வைரஸ் வீரியம் குறைவு தான் என்றும், பாதிக கப்பட்டவர்களுக்கு உடல்நலம் குன்றி காணப்படுகிறதே தவிர உயிரிழப்புகள் மிகக்குறைவாக ஏற்படுகிறது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"வருமுன் காப்போம்" என்ற அடிப்படையில் தமிழக அரசு உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, தமிழ்நாட்டில் ஜேஎன்1 உருமாறிய புதியவகை கொரோனா பரவாமல் கட்டுக்குள் வைத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கொரோனா மீண்டும் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கி உள்ளது.
- கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலகையே தனது கட்டுக்குள் வைத்திருந்த கொரோனா மீண்டும் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நம் முன்னோர்கள் உபயோகித்த ஆயுர்வேத பொருட்களை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து கொரோனா வைரசை விரட்டி அடிக்கலாம்.

துளசி:
ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, சளி, காய்ச்சலை கட்டுப்படுத்தும் சிறந்த மூலிகையாக துளசி விளங்குகிறது. அதன் சாறை பருகி வருவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். சுவாசம் சார்ந்த நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடவும், சுவாசக் கோளாறுகளை போக்கவும் துணை புரியும். மேலும் மனஅழுத்தம், பதற்றம் சோர்வு போன்றவற்றில் இருந்து நிவாரணம் தரும்.

இஞ்சி:
இஞ்சியில் நுண்ணுயிர் மற்றும் தொற்று எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தொண்டை புண்ணுக்கு தீர்வு காண உதவும். நோய் எதிர்ப்பு அமைப்பையும் அதிகரிக்கச் செய்யும். புற்றுநோய் தடுப்பு பண்புகளையும் கொண்டது. இஞ்சி, தேன், துளசி இவை மூன்றையும் சேர்த்து கசாயம் தயாரித்தும் சாப்பிடலாம்.

நெல்லிக்காய்
இதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத பொருட்களுள் ஒன்றாக விளங்குகிறது. வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்தும் சேர்மங்களும் நெல்லிக்காயில் உள்ளன. தினமும் வெறும் வயிற்றில் நெல்லிச்சாறு பருகி வருவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

ஜிலோய்:
ஆங்கிலத்தில் `ஜிலோய்', தமிழில் `அமிர்தவல்லி' என்று அழைக்கப்படும் இது பல்வேறு ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றவும், ரத்தத்தை சுத்தப்படுத்தவும், நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர் கிருமிகளை எதிர்த்து போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும் இது உதவும். சளி மற்றும் இருமலுக்கும் நிவாரணம் தரும். ஜிலோய் தண்டுகளை தண்ணீரில் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை பருகி வரலாம்.

மஞ்சள்:
இதில் உள்ள குர்குமின் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமின்றி உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க செய்யும். இரவில் தூங்குவதற்கு முன்பு மஞ்சள் பால் பருகலாம். அது ஆழ்ந்த தூக்கத்திற்கும் வழிவகை செய்யும். குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கவும் உதவும்.

அஸ்வகந்தா:
தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு காணவும், மன அழுத்தத்தை போக்கவும் இது உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன் மூட்டு சார்ந்த நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவும். அஸ்வகந்தா மாத்திரைகள், பொடியை வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீருடன் கலந்து பருகலாம். அதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது.
- 71 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்
- 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட் டத்தில் நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதில் ஏற்கனவே தொற்று பாதித்த 71 பேர் வீட்டு தனிமை சிகிச்சையில் உள்ளனர்.
2 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு மருத்துவமனை யிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 பேர் டெஸ்ட் ரிசல்ட்டுக்காக காத்திருக்கின்றனர்.
- குறைவதும் என மாறி, மாறி நிலவுகிறது
- அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதும், பின்னர் குறைவதும் என மாறி, மாறி நிலவுகிறது. சேலத்தில் நேற்று முன்தினம் 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சேலம் மாநகராட்சி பகுதியில் 9 பேர், தலைவாசலில் 2 பேர், சேலம் ஒன்றியம், ஓமலூர், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்துக்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து வந்த 3 பேர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 40 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர்.
- இந்த நிலையில், நேற்று மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 25-ந் தேதி 39 பேரும், நேற்று முன்தினம் 40 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் 15 பேர், வீரபாண்டி, காடை யாம்பட்டியில் தலா 5 பேர், ஓமலூர், மேச்சேரி, பனமரத்துப்பட்டி பகுதியில் தலா 3 பேர், எடப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி பகுதியில் தலா 2 பேர், ஆத்தூர், கொங்கணாபுரம், நங்கவள்ளி, சங்ககிரி பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிேசாதனையில் உறுதி செய்யப்பட்டது.
- இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சேலம், ஆக.26-
சேலம் மாவட்டத்தில் நேற்று 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிேசாதனையில் உறுதி செய்யப்பட்டது. இதில் மாநகராட்சியில் 17 பேருக்கும், சேலம் சுகாதார மாவட்டத்தில் எடப்பாடி, காடையாம்பட்டி, ெகாங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், சேலம், சங்ககிரி பகுதிகளில் 17 பேருக்கும் ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, தலைவாசல் பகுதியில் 3 பேருக்கும், நகராட்சியில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்
- சமூக இடை வெளி உட்பட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் படிப்படி யாக கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் அனை வரும் முக கவசம் அணிய வேண்டும் சமூக இடை வெளி உட்பட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஒரேநாளில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது.
புதுவையில் ஆயிரத்து 938 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 207, காரைக்காலில் 7, ஏனாமில் 7 பேர் என புதிதாக 221 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 7, ஏனாமில் ஒருவர் என 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 882, காரைக்காலில் 101, ஏனாமில் 24 பேர், மாகியில் ஒருவர் என ஆயிரத்து 8 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 86, காரைக்காலில் 25, ஏனாமில் 8, மாகியில் ஒருவர் என 120 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது.
புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 58 ஆயிரத்து 999 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. புதுவையில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவது பொது மக்களி டையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
- கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
- கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.
கடலூர்:
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தாக்கம் மீண்டும் தலைதூக்கி உள்ளது. இதனால் சென்னை மாநாகராட்சி சார்பில் முககவசம் அணிய வேண்டும் என்று பொது மக்களுக்கு உத்தர–விடப் பட்டுள்ளது. முக–கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது.
அதன்படி மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றுபற்றி விழிப்புணர்வு ஏற்படுபத்தப்பட்டு வருகிறது. என்றாலும் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 1-ந் தேதி 13 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்தபடி உள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை 112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவுவதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் சுகாதார பணியினை முடுக்கிவிட்டுள்ளனர்.
மேலும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள உத்தரவில் பொது இடங்களில் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளி விட்டு, முககவசம் அணிந்து செல்லவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரோட்டில் 4 நாட்களில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
- பொதுமக்கள் பொது இடங்களுக்கு வரும்போது சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து வரவேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக 3-வது அலை ஏற்பட்டு தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.
கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்தது. இருப்பினும், அவ்வப்போது ஓரிருவருக்கு தொற்று ஏற்பட்டு, அவர்கள் குணமடைந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவரும் மே மாதம் 4-ந் தேதி குணமடைந்தார். அதன்பின் தொற்று இல்லாத மாவட்ட மானது ஈரோடு.
பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி முதல் அடுத்தடுத்த நாளில் தொற்று ஏற்பட்டு 5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்கள் அடுத்தடுத்த நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த ஒருவரும் 30-ந் தேதியுடன் குணமடைந்து வீடு திரும்பினார்.
இதையடுத்து மீண்டும் ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட 6 நாட்களுக்கு பிறகு கடந்த 5-ந் தேதி 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து 6-ந் தேதி மேலும் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த 4 நாட்களில் மட்டும் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 685 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் மீண்டும் மெல்ல மெல்ல கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.
இதனால் பொது மக்கள் மீண்டும் பொது இடங்களுக்கு வரும்போது சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து வரவேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.






