என் மலர்

  நீங்கள் தேடியது "thane"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  மும்பை:

  மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள தோகாலி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை கழிவுநீர்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

  அப்போது திடீரென விஷவாயு தாக்கியதால் சம்பவ இடத்திலேயே 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மயக்கம் அடைந்த 5 தொழிலாளர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில்சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
   
  அதிகாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாராஷ்டிர மாநிலத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான பாலம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. #100YearOldBridge #BridgeDemolition
  தானே:

  மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின்போது கலு நதியின் குறுக்கே இரண்டு சிறிய மலைகளை இணைந்து பாலம் கட்டப்பட்டது. ஷகாபூர்- முராத் தாலுகாக்களை இணைக்கும் இந்த பாலம் 100 ஆண்டுகள் பழமையானது. இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக சிதிலமடைந்து, கடந்த ஆண்டு மிகவும் மோசமானது. இதனால் இந்த பாலம் அபாயகரமான பாலம் என அறிவிக்கப்பட்டு, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.  இந்நிலையில், இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட பொதுப்பணித்துறை முடிவு செய்தது. அதன்படி வெடிவைத்து பாலம் தகர்க்கப்பட்டது. பாலத்தின் அனைத்து பகுதிகளிலும் சக்திவாய்ந்த வெடிகள் பொருத்தப்பட்டு ஒரே சமயத்தில் வெடிக்கச் செய்யப்பட்டது. அதிகாலையில் பாலத்தை வெடிவைத்து தகர்த்த காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் பார்த்தனர். நொடிப்பொழுதில் பாலம் இடிந்து விழும் காட்சியை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

  அந்த பாலம் இருந்த இடத்தில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை பொதுப்பணித்துறை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #100YearOldBridge #BridgeDemolition  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாராஷ்டிர மாநிலத்தில் மின்சாரம் திருடிய தொழிலதிபருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #PowerTheftCase
  தானே:

  மகாராஷ்டிர மாநிலத்தில் மின்திருட்டை தடுக்கும் வகையில் மின்வாரிய பறக்கும் படையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த 2004ம் ஆண்டு பிவண்டி தாலுகா காரிவலி பகுதியில் உள்ள விசைத்தறி தொழிற்சாலையில் சோதனை நடத்தப்பட்டதில் மின்திருட்டு கண்டறியப்பட்டது.

  மின் மீட்டரை சேதப்படுத்தி, அதன்மூலம் 64802 யூனிட் மின்சாரத்தை முறைகேடாக விசைத்தறி தொழிற்சாலைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. திருடப்பட்ட மின்சாரத்தின் மதிப்பு ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 700 ஆகும்.  இதுதொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் காண்டிலால் அம்ருத்லால் ஹரியா மீது மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 14 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கின், வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மின்திருட்டில் ஈடுபட்ட தொழிலதிபர் காண்டிலாலுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார். மேலும் 9 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். #PowerTheftCase
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு லேசான நில அதிர்வு உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். #Thane #MildTremors
  மும்பை:

  மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டது. டோம்பிவிலி, கல்யாண், உல்லாஸ்நகர் மற்றும் பிவண்டி உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.  

  இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.சிறிது நேரம் கழித்து நிலைமை சீரானதும் அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர்.

  இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள் கூறுகையில், மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டது.  இது சுமார் 2.4 ரிக்டர் அளவில் பதிவானது. இதனால் சேதம் ஏற்படவில்லை எனதெரிவித்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் செக்யூரிட்டி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  மும்பை:

  மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் கடந்த 15-ம் தேதி மருந்து வாங்க 15 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் பணியாற்றும் பாதுகாவலர் அவரது 2 நண்பர்களின் உதவியுடன் அந்த சிறுமியை கடத்தியுள்ளார். அதைத்தொடர்ந்து வாகனம் மூலம் டோம்பிவிலி பகுதிக்கு பின்னால் உள்ள குடிசைப் பகுதிக்குள் கொண்டு சென்றுள்ளனர்.

  பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து நேற்று காலை வீடு வந்து சேர்ந்த சிறுமி அவரது பெற்றோருடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  அந்த புகாரின் அடிப்படையில், போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் அந்த மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #pocso
  ×