தனியாக வாக்கிங் சென்ற மனைவி.. கடுப்பாகி மாமனாரிடம் 'முத்தலாக்' சொன்ன கணவன்

மும்ராவில் 25 வயது மனைவி வசித்து வரும் நிலையில் அவரது 31 வயது கணவர் குர்லா பகுதியில் வேலை செய்கிறார்கணவனின் திடீர் முடிவால் அதிர்ச்சியடைந்த மனைவி உடனடியாக மும்ப்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தனியாக வாக்கிங் சென்ற மனைவி.. கடுப்பாகி மாமனாரிடம் 'முத்தலாக்' சொன்ன கணவன்
Published on

மனைவி தனியாக வாக்கிங் செல்வதால் ஆத்திரமடைந்த கணவன் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் மும்ரா பகுதியில் 25 வயது மனைவி வசித்து வரும் நிலையில் அவரது 31 வயது கணவர் குர்லா நகரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். மனைவி அதிகாலையில் தனியான நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டவர் என்று தெரிகிறது.

எனவே அவரது கணவன் கடந்த செவ்வாய்கிழமை இரவு, தனது மாமனாரை அழைத்து தனியாக வாக்கிங் செல்வதை காரணம் காட்டி தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கூறியுள்ளார். அவர் தொலைபேசியில் மூன்று முறை "தலாக்" என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இது இப்போது இந்தியச் சட்டத்தின் கீழ் குற்றம் ஆகும்.

எனவே கணவனின் திடீர் முடிவால் அதிர்ச்சியடைந்த மனைவி உடனடியாக மும்ப்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த புதன்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பம்பாய் திருமணங்கள் சட்டம் மற்றும் முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முத்தலாக் சொன்ன கணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com