search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "paper"

    • மொத்தம் 21 பெட்டிகளில் பேப்பர் ரோல் வந்தது.
    • ஒவ்வொரு பெட்டியிலும் 20 ரோல்கள் என 4320 பேப்பர் ரோல்கள் இருந்தது.

    தஞ்சாவூர்:

    நாட்டில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மின்னனு வாக்கு பதிவு எந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து இறங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று வி.வி.பேட் கருவியில் பொருத்தப்படும் பேப்பர் ரோல் பெட்டிகள் பெங்களூரில் இருந்து லாரியில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இறங்கியது.

    இந்த பேப்பர் ரோலானது வி.வி.பேட் எந்திரத்தில் பொருத்தப்பட்டு யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை காண்பிக்கும் ஒப்புகை சீட்டாகும்.

    மொத்தம் 21 பெட்டிகளில் பேப்பர் ரோல் வந்தது.

    ஒவ்வொரு பெட்டியிலும் 20 ரோல்கள் என 4320 பேப்பர் ரோல்கள் இருந்தது.

    இவைகள் லாரியில் இருந்து இறக்கி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    • பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது.
    • அதிர்ச்சி அடைந்த அவர்கள் பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி-கடலூர் எல்லை பகுதியான முள்ளோடையில் தனியார் மதுபான பார் உள்ளது.

    இங்கு மதுபிரியர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் 2 பீர் வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையறிந்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் 2 பேர் பீர் குடிக்க சென்றனர்.

    அவர்கள் பணம் கொடுத்து 2 பீர் பாட்டில்கள் வாங்கினர். அவர்களுக்கு சலுகையாக மேலும் ஒரு பீர் பாட்டில் வழங்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் 2 பீர் பாட்டில்களை திறந்து குடித்தனர். அதன் பின் சலுகையில் வாங்கிய 3-வது பீரை குடிப்பதற்காக பாட்டிலை கையில் எடுத்தனர். அப்போது பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர். ஆனால் அவர்கள் சரியான பதில் தெரிவிக்காமல் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசாரிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர். பீர் பாட்டி லில் காகிதம் கிடந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • சத்தியமங்கலத்தில் இன்று விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டதில் பழைய ஓய்வூதியத் திட்டம், ஆசிரியரின் பணி பாதுகாப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் தனியார் பள்ளியில் அனைத்து முதுகலை ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டதில் பழைய ஓய்வூதியத் திட்டம், ஆசிரியரின் பணி பாதுகாப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பட்டது.

    இதில் நேரடி நியமன முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அன்பரசு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பிரச்சார செயலாளர் பிரபாகரன் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    ×