search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tools"

    • மொத்தம் 21 பெட்டிகளில் பேப்பர் ரோல் வந்தது.
    • ஒவ்வொரு பெட்டியிலும் 20 ரோல்கள் என 4320 பேப்பர் ரோல்கள் இருந்தது.

    தஞ்சாவூர்:

    நாட்டில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மின்னனு வாக்கு பதிவு எந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து இறங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று வி.வி.பேட் கருவியில் பொருத்தப்படும் பேப்பர் ரோல் பெட்டிகள் பெங்களூரில் இருந்து லாரியில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இறங்கியது.

    இந்த பேப்பர் ரோலானது வி.வி.பேட் எந்திரத்தில் பொருத்தப்பட்டு யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை காண்பிக்கும் ஒப்புகை சீட்டாகும்.

    மொத்தம் 21 பெட்டிகளில் பேப்பர் ரோல் வந்தது.

    ஒவ்வொரு பெட்டியிலும் 20 ரோல்கள் என 4320 பேப்பர் ரோல்கள் இருந்தது.

    இவைகள் லாரியில் இருந்து இறக்கி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    • குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமையான இன்று மனுக்கள் அளிப்பதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி ஏராளமான மாற்றுத்திறனாளிகள் குவிந்து இருந்தனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக 3-வது தளத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் பொருட்கள் பாதுகாப்பு அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்தை பார்த்தவுடன் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு முழுவதும் துண்டிக்கப்பட்டு, அலுவலக தரைத்தளம் உள்ளிட்ட மூன்று தளங்களில் இருந்த அனைவரும் பாதுகாப்பு கருதி அலுவலகத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

    விரைந்து வந்து நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.

    தீ விபத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் அலுவலக சேமிப்பு கிடங்கு அறையில் வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த சுமார் 5000 செட்டாப் பாக்ஸ் கருவிகள் பெரும்பாலானவை எரிந்து நாசமானது.

    நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அலுவலகத்தை பூட்டிவிட்டு ஓடிய அதிகாரிகளும், மனு அளிக்கவந்த பொதுமக்களும் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தீ விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. இது குறித்து ேபாலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • விவசாயிகளுக்கு மானிய வாடகையில் வேளாண் எந்திரங்கள்-கருவிகள் வழங்கப்படும் என சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய வாடகையில் சிறு, குறு விவ சாயிகள் பெற்று பயன் பெறலாம். உழவுப்பணி கள் மற்றும் அறுவடைப் பணிக ளுக்கு டிராக்டருடன் இயக்கக்கூடிய கருவிகளான சுழற்கலப்பை, நிலக்கடலை தோண்டும் கருவி, சோளம் அறுவடை எந்திரம், வைக்கோல் ரவுண்டு பேலர் போன்ற கருவிகளுடன் 50 சதவீத மானிய வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது.

    புன்செய் நிலத்தில் சிறு, குறு விவசாயிகளின் உழவுப்பணிக்கு தேவைப் படும் டிராக்டர் மற்றும் உபகரணங்களுடன் 1 ஏக்கர் நிலத்துக்கு ரூ.250-ம், அதிக பட்சமாக 5 ஏக்கர் நிலத்திற்கு 5 மணி நேரத்துக்கு மொத்த வாடகையில் ரூ.1,250-ம், பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

    நன்செய் நிலம் வைத்து உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நிலத்திற்கு மொத்த வாடகையில் ரூ.625 பின்னேற்பு மானியமாக பெற்று பயன்பெறலாம்.

    மேற்கண்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவி கள் வாடகைக்கு தேவைப் படும் விவசாயிகள் சிறு, குறு விவசாய சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றை உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன்பெறலாம். தாங்கள் செலுத்திய தொகையை பின்னேற்பு மானியமாக தங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு இளை யான்குடி, காளையார் கோவில், சிவகங்கை, மானாமதுரை மற்றும் திருப்புவனம் வட்டார சிறு, குறு விவசாயிகள் உதவி செயற் பொறியாளரையும், தேவகோட்டை, கல்லல், கண்ணங்குடி, எஸ்.புதூர், சாக்கோட்டை, சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் வட்டார சிறு, குறு விவசாயிகள் காரைக்குடி உதவி செயற் பொறி யாளரையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் விவசாயிக–ளுக்கான கருத்தரங்கு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒட்டு ஆமணக்கு விதை உற்பத்தி பயிற்சி மற்றும் பல்வேறு கருத்துக்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிக–ளுக்கான கருத்தரங்கு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு மையத்தின் தலைவர் மாணிக்கம் வரவேற்றார்.

    சேலம் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நீர் நுட்பவியல் இயக்குனர் பழனிவேலன், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விதை மைய இயக்குனர் உமாராணி ஆகியோர் விவசாயிகளுக்கான கருத்துரை வழங்கினர்.

    தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்ப–டுத்துதல் திட்டத்தின் கீழ் வேளாண்மை எந்திரங்களை பயனாளிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வழங்கினார். மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒட்டு ஆமணக்கு விதை உற்பத்தி பயிற்சி மற்றும் பல்வேறு கருத்துக்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

    இறுதியில் ஏத்தாப்பூர் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய மரவியல் மற்றும் பயிர் பெருக்கத் துறை பேராசிரியர் வெங்கடாஜலம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இறுதி ஆண்டு மாணவர்கள் முசிறி எம்.ஐ.டி வேளாண்மை கல்லூரி மாணவர்கள் தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளுக்கு தென்னங்கன்று, இடுபொருள்கள், அரிவாள், மம்பட்டி வழங்கல்.
    • வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் வரவேற்றார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருவெண்காட்டில் ரூ.38 லட்சம் செலவில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மதியரசன் தலைமை வகித்தார். சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் உஷாநந்தினிபிரபாகரன், தி.மு.க ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார், அவைத் தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் வரவேற்று பேசினார்.

    எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் புதிய வேளாண்மை விரி வாக்க மைய கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்து விவசாயி களுக்கு தென்னங்கன்று, இடுபொருள்கள், அரிவாள், மம்பட்டி, பாறை வழங்கி பேசினர்.

    விழாவில் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ஜிஎன்.ரவி மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தேசப்பன், முன்னாள் கவுன்சிலர் பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர், துணை வேளாண்மை அலுவலர்கள் ரவிச்சந்திரன், வேதை ராஜன், அலெக்சாண்டர், விஜய்அமிர்தராஜ், விதை அலுவலர் அசோக், கிடங்கு மேலாளர்கள் சரவணன், ரம்யா, வெங்கடேசன் மன்சூர் கலந்து கொண்டனர். ஒப்பந்தக்காரர் பழனிவேல் நன்றி கூறினார்.

    இதேபோல் காரை மேடு பகுதியில் ரூ.38 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட வேளாண்மை கட்டிடத்தையும், கொள்ளிடம் வடகால் பகுதியில் ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வேளாண் மையக் கட்டிடங்களை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அளித்தார். இதில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கேமராக்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
    • நடமாடும் கட்டுப்பாட்டு வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம் காட்சிகள் பார்க்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாநகராட்சி பகுதியில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் மாநகராட்சி முடிவு செய்தது.

    அதன்படி தஞ்சை மாநகரம் முழுவதும் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

    இதில் பஸ் நிலையங்கள், ரெயிலடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நவீன வசதியுடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.

    மற்ற இடங்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    இந்த கேமராக்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

    இதில் பதிவாகும் காட்சிகளை பார்க்க தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அறை மற்றும் போலீசார் கண்காணிக்க தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஏற்கனவே 2 இடங்களில் பதிவாகும் காட்சிகள் பார்க்கபட்டன.

    தற்போது நடமாடும் வாகனம் மூலமும் காட்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று நடமாடும் கட்டுப்பாட்டு வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம் காட்சிகள் பார்க்கப்பட்டன.

    இந்த வாகனத்தை மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் இந்த நடமாடும் வாகனத்தில் தெரிந்ததை பார்வையிட்டனர்.

    இந்நிகழ்வில் பொறியாளர் ஜெகதீசன், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர், உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், ரமேஷ், மாநகர் நல அலுவலர் (பொ) அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×