search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடமாடும் கட்டுப்பாட்டு வாகனத்தில் ஆய்வு
    X

    நடமாடும் கட்டுப்பாட்டு வாகனத்தில் மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார் ஆய்வு செய்தனர்.

    நடமாடும் கட்டுப்பாட்டு வாகனத்தில் ஆய்வு

    • கேமராக்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
    • நடமாடும் கட்டுப்பாட்டு வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம் காட்சிகள் பார்க்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாநகராட்சி பகுதியில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் மாநகராட்சி முடிவு செய்தது.

    அதன்படி தஞ்சை மாநகரம் முழுவதும் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

    இதில் பஸ் நிலையங்கள், ரெயிலடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நவீன வசதியுடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.

    மற்ற இடங்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    இந்த கேமராக்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

    இதில் பதிவாகும் காட்சிகளை பார்க்க தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அறை மற்றும் போலீசார் கண்காணிக்க தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஏற்கனவே 2 இடங்களில் பதிவாகும் காட்சிகள் பார்க்கபட்டன.

    தற்போது நடமாடும் வாகனம் மூலமும் காட்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று நடமாடும் கட்டுப்பாட்டு வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம் காட்சிகள் பார்க்கப்பட்டன.

    இந்த வாகனத்தை மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் இந்த நடமாடும் வாகனத்தில் தெரிந்ததை பார்வையிட்டனர்.

    இந்நிகழ்வில் பொறியாளர் ஜெகதீசன், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர், உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், ரமேஷ், மாநகர் நல அலுவலர் (பொ) அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×