9 வயது மகனின் வாயில் பேப்பரை திணித்துக் கொன்ற தந்தை.. அதிர்ச்சிக் காரணம்

கணவன் குடிபோதைக்கு அடிமையானதால் அவரைப் பிரிந்து தனது பிறந்த வீட்டில் 9 வயது மகனுடன் மனைவி வாழ்ந்து வந்துள்ளார்.சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வந்து உயிரிழந்துள்ளான்
9 வயது மகனின் வாயில் பேப்பரை திணித்துக் கொன்ற தந்தை.. அதிர்ச்சிக் காரணம்
Published on

மகாராஷ்டிராவில் 9 வயது மகனின் வாயில் பேப்பரை திணித்து தந்தை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் கணவன் குடிபோதைக்கு அடிமையானதால் அவரைப் பிரிந்து தனது பிறந்த வீட்டில் 9 வயது மகனுடன் மனைவி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை சிறுவன் காணாமல் போகவே அவனை உறவினர்கள் ஊர் முழுவதும் தேடி வந்துள்ளனர்.

நேற்று காலை 8 மணியளவில் வாயில் பேப்பர் அடைக்கப்பட்டபடி சிறுவனின் உடல் அவனது தந்தையின் வீட்டில் அருகில் கிடந்துள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். கடந்த திங்கள்கிழமை இரவு மகனை வீட்டுக்கு அழைத்துவந்து நோட்டுப் புத்தகத்தில் இந்த பேப்பர்களை கிழித்து அதை ஒன்று சேர்த்து பந்தாக செய்து மகனின் வாயில் திணித்துள்ளார்.

இதனால் சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வந்து உயிரிழந்துள்ளான்என போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த கொலைக்கு காரணம் இன்னும் தெரியவராத நிலையில் சம்பவத்தின்போது சிறுவனின் தந்தை குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரைக் கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com