search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farewell"

    • அரசு பஸ்சை தொட்டு கும்பிட்டு கண்ணீர் மல்க டிரைவர் விடைபெற்றார்.
    • டிரைவர் வேலையால் சமூகத்தில் மதிப்பு கிடைத்தது

    மதுரை

    மதுரை பைக்காரா பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. அரசு பஸ் டிரைவரான இவர், திருப்பரங்குன்றம் போக்கு வரத்து பணிமனையில் 30 வருடங்களாக பணியாற்றிய முத்துப்பாண்டி நேற்று ஓய்வு பெற்றார்.

    முன்னதாக பயணிகளை ஏற்றிக் கொண்டு இறுதியாக பயணம் மேற்கொண்ட முத்துப்பாண்டி பின்னர் பணிமனையில் தான் ஓட்டிவந்த அரசு பஸ்சை நிறுத்தினார்.

    பணியில் இருந்து ஓய்வு பெறுவதால் நெகிழ்ச்சி யுடன் காணப்பட்ட முத்துப்பாண்டி நீண்ட நாட்களாக தான் இயக்கி வந்த அரசு பஸ்சை வாஞ்சையுடன் பார்த்து கண் கலங்கினார். தொடர்ந்து பஸ் என்ஜின், படிக்கட்டுகளை தொட்டு கும்பிட்டார்.

    பின்னர் பஸ்சின் முன்புறம் வந்த முத்துப்பாண்டி இரு கரங்களால் கும்பிட்டு பஸ்சை வணங்கி கண்ணீர் மல்க விடை பெற்றார். அப்போது அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவரை தேற்றி வழியனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து முத்துப் பாண்டி கூறுகையில், எனது பெற்றோருக்கு அடுத்தபடி யாக டிரைவர் தொழிலை நேசித்து 30 வருடங்களாக பயணிகளை பாது காப்பாக ஏற்றிக் கொண்டு உரிய இடங்க ளுக்கு அழைத்துச் சென்றேன். டிரைவர் வேலையால் சமூகத்தில் மதிப்பு கிடைத்தது என கூறினார்.

    • சத்தியமங்கலத்தில் இன்று விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டதில் பழைய ஓய்வூதியத் திட்டம், ஆசிரியரின் பணி பாதுகாப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் தனியார் பள்ளியில் அனைத்து முதுகலை ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டதில் பழைய ஓய்வூதியத் திட்டம், ஆசிரியரின் பணி பாதுகாப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பட்டது.

    இதில் நேரடி நியமன முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அன்பரசு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பிரச்சார செயலாளர் பிரபாகரன் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    சேலத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
    சேலம்:

    தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. 

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி அதன்படி சேலம் மாவட்டத்தில் 4 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில் சேலம் ராஜாஜி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் விடைத்தாள் திருத்துவதற்காக சிறப்பு மையம் அமைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது பணிக்கு வந்த ஆசிரியர்கள் திடீரென விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வழக்கமாக பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் விருப்பத்தின் பேரில் தன் மையங்கள் நியமனம் செய்யப்பட்டு வந்தது. 

    தற்போது வழக்கமான நடைமுறை மாற்றப்பட்டு மையங்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான ஆசிரியர்கள் தொலைவிலுள்ள மையங்களுக்கு செல்ல வெகுதூரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.

    தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு அதிகாரிகளுடன் சமரசம் பேசியதில் உடன்பாடு ஏற்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
    11-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்குகிறது.
    சேலம்:

    1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

     
    சேலம், நாமக்கல் மாவட்டங்களில்  10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மாணவ- மாணவிகள் உற்சாகமாக எழுதி வருகின்றனர். இதில் 12-ம் வகுப்பு மாணவர்களில் சில பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. மற்றவர்களுக்கு வருகிற 28-ந் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது.

    இதேபோல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 30-ந் தேதியும் தேர்வு நிறைவடைய இருக்கிறது.

    இதில் 12-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி தொடங்க உள்ளது.

    இந்த நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரையிலும் நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
    ஜூன் 22-ந் தேதி பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ள ஓய்வு பெறும் நீதிபதி செல்லமேஸ்வரரை பார் அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்து அழைப்பு விடுத்தபோது அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். #Justice #Chelameswar
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி ஜே.செல்லமேஸ்வர், ஜூன் 22-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அதனால், கோடை விடுமுறைக்கு முந்தைய கடைசி வேலைநாளான மே 18-ந் தேதி, அவருக்கு பிரிவு உபசார விழா நடத்த சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் முன்வந்துள்ளது.

    இதுதொடர்பாக, கடந்த வாரம், நீதிபதி செல்லமேஸ்வரை பார் அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்து அழைப்பு விடுத்தபோது, அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். பார் அசோசியேஷன் செயற்குழு உறுப்பினர்கள், நேற்று நீதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்து அவரது மனதை மாற்ற முயன்றனர். ஆயினும், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வர இயலாது என்று கூறி விட்டார்.

    இத்தகவல்களை சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் தலைவர் விகாஸ் சிங் கூறினார். நீதிபதி செல்லமேஸ்வர், தொடர்ந்து 3-வது புதன்கிழமையாக நேற்று சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லவில்லை. வழக்குகள் ஒதுக்கீடு தொடர்பாக, தலைமை நீதிபதிக்கு எதிராக பேட்டி அளித்தவர் நீதிபதி செல்லமேஸ்வர் என்பது குறிப்பிடத்தக்கது.  #Justice #Chelameswar 
    ×