search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "invite"

    • 2019ம் ஆண்டில் அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு.
    • கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு.

    உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோவிலை வரும் 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

    கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு, திரைப் பிரபலங்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 2019ம் ஆண்டில் அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், போப்டே, தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • வருகிற 1-ந் தேதி கடைசி நாள் என அறிவிப்பு

    புதுக்கோட்டை, நவ.20-

    புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவரும், மண்டல இணைப்பதிவாளருமான ராஜேந்திர பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்த்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்–கங்–கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், கூட்டுறவு அச்சகம் மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் http://www.drbpdk.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே வருகிற 1-ந்தேதி அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கான எழுத்துத்தேர்வு 24.12.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது.

    இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும். வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை விண்ணப்பிக்கலாம்.

    பட்டப்படிப்பு படித்தவர்களும் இதற்கு மேலும், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்–ப–வர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24ம் ஆண்டு நேரடி பயிற்சி, அஞ்சல்வழி, பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்–டணம் செலுத்தியதற்கான ரசீதினை புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்–ணப்–பிக்கலாம்.

    மேலும் இது தொடர்பான விரிவான விவரங்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் http://www.drbpdk.in வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் (துணைப்பயிற்சி நிலையம்) 2023-24-ம் ஆண்டு 23-வது அஞ்சல் வழி மற்றும் பகுதி நேர (மாற்றத்திற்குட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி (புதிய பாட்திட்டத்தின்படி) விரைவில் தொடங்கப்பட உள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.100-ஐ இணையவழியில் செலுத்த வேண்டும்.10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ப்ளஸ்-2 தேர்ச்சி பெற்ற வர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தினை அணுகி விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பத்தினை வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

    • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் வருகிற 7-ந் தேதி அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
    • உர நிர்வாகம், அங்கக சான்றிதழ், இடுபொருள் தயாரிப்பு, விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை வல்லுநர்களால் கற்பிக்கப்படும்

    திருப்பூர்:

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் வருகிற 7-ந் தேதி அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இப்பயிற்சியில் அங்கக வேளாண்மை அடிப்படை, களை மேலாண்மை, அங்கக பூச்சிநோய் மேலாண்மை, உர நிர்வாகம், அங்கக சான்றிதழ், இடுபொருள் தயாரிப்பு, விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை வல்லுநர்களால் கற்பிக்கப்படும். இதற்கு, பயிற்சி கட்டணமாக ஜி.எஸ்.டி., சேர்த்து 750 ரூபாய் செலுத்தவேண்டும். ஆர்வமுள்ள விவசாயிகள் 94867-34404 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரியலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் விருது பெற கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
    • விண்ணப்பிக்க நவம்பர் 10-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிப்பு

    அரியலூர்,

    தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள், ஆகியோர்களில் சிறந்தோருக்கு "அண்ணல் அம்பேத்கார்விருது" வழங்கப்படவுள்ளது. எனவே இவ்விருதினை பெறவிரும்பு வோர்அன்யலூர் மாவட்ட ஆதிதிராவிடர்மற்றும் பழங் குடியினர்நல அலுவலர் அல்லது தனிவட்டாட்சியர்(ஆதிந), அரியலூர், உடையார்பாளையம் அலுவலர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தரலாம். அதற்கான ஆதார ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பங்கள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர்நல அலுவலகத்திற்கு 10.11.2023 மாலை 5.00 மணிக்குள் கிடைத்திடும்படி அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    • அண்ணாமலையின் யாத்திரையில் பங்கேற்க பா.ஜ.கவினர் வெற்றிலை, பாக்கு வைத்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்
    • மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்று அசத்தல்

    புதுக்கோட்டை,

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண்-என் மக்கள் என்ற பாதயாத்திரை நடத்தி வருகிறார். வருகிற 6-ந்தேதி அவர் புதுக்கோட்டையில் நடைபயணம் மேற்கொள்கிறார். இதில் திரளானோரை பங்கேற்க செய்வதற்கு ப.ஜ.க.வினர் விரிவான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.இதன் ஒரு கட்டமாக பா.ஜ.க.வினர் நூதன முறையில் அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர். புதுக்கோட்டை கீழ 3-ம்வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் மகளிர் குழு உறுப்பினர்களுக்குவழங்கும் நிகழ்ச்சி பா.ஜ.க. மாவட்ட பொதுசெயலாளரும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி யாத்திரை பொறுப்பாளருமான ஏ.வி.சி.சி. கணேசன் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர்கள் லெட்சுமணன், சக்திவேல் முன்னிலை வகித்தார்.இதில் உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் ரவிக்குமார், அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாவட்ட தலைவர் மனோகர்,ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், சக்திகேந்திர கூடுதல் பொறுப்பாளர் கைலாஷ், நகர நிர்வாகிகள் ஆனந்த்,செந்தில்குமார், ரங்கநாதன்,இளங்கோ, சுப்பிரமணியன்,கண்ணன், ராஜேந்திரன்,ரஜினி,ரவி, சாய்லெட்சுமி,கிளைத் தலைவர்கள் மற்றும் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.அப்போது அண்ணாமலை அழைக்கிறார் என்ற பதாதையுடன் புதுக்கோட்டை நகர வீதிகளில் மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று,வீடு தோறும் மங்களகரமான பொருட்களை வழங்கி அழைப்பு விடுத்தனர்.நாதஸ்வரம் ஒலிக்க, வெற்றிலை-பாக்கு பூ,சந்தனம், குங்குமம், மஞ்சள் கயிறு, ஜாக்கெட் துணி ஆகியவற்றை தட்டில் வைத்து, சொந்த குடும்ப விசேஷத்திற்கு அழைப்பது போன்று நூதன முறையில் அழைப்பு கொடுத்தார்கள். இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட கல்வி தொடர்பு மையத்துக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது
    • 21-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)-2 திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் பொருட்டு, மாவட்ட அளவில் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, தகவல் மற்றும் கல்வி தொடர்பு மையம் அமைத்திட பணியிடங்களுக்கு வெளி முகமையின் நடைமுறைகளின் அடிப்படையில் தகுதியானோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நிபுணர் பணியிடங்கள் 2, திரவக்கழிவு மேலாண்மை நிபுணர் பணியிடம் ஒன்று, கண்காணிப்பு அலுவலர் (திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல்) பணியிடம் ஒன்று, தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் பணியிடங்கள் 2 நிரப்பட உள்ளன.

    திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நிபுணர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது கட்டிட பொறியியலில் பட்டப்படிப்பு பெற்றிருத்தல் வேண்டும் அல்லது இதற்கு நிகரான பட்டப்படிப்பு பெற்றிருத்தல் வேண்டும். சுற்றுச்சூழல் கட்டுமானம் டபிள்யூ.ஏ.எஸ்.எச்., , எம்.அண்டு இ. துறையில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் குறைந்த பட்சம் 1 அல்லது 2 வருட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பதவிக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்.

    திரவக்கழிவு மேலாண்மை நிபுணர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது கட்டிட பொறியியலில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது இதற்கு நிகரான பட்டப்படிப்பு பெற்றிருத்தல் வேண்டும். சுற்றுச்சூழல் கட்டுமானம் டபிள்யூ.ஏ.எஸ்.எச்., எம்.அண்டு இ.துறையில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் குறைந்த பட்சம் 1 அல்லது 2 வருட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பதவிக்கு மாதாந்திர தொகுப்பூதியம்: ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்.கண்காணிப்பு அலுவலர் (திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல்) பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் பி.டெக், எம்.பி.ஏ., எம்.எஸ்.சி. அல்லது இதற்கு நிகரான

    பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இப்பதவிக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்.தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் மாஸ் கம்யூனிகேசன், மாஸ் மீடியாவில் முது நிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறை சமூக ஊடகப் பிரிவில் பணிபுரிந்த அனுபவம். கணினித்திறன் பெற்றிருத்தல் வீடியோ தயாரித்தல், மீம்ஸ் தயாரித்தல், சுவரொட்டி துண்டு பிரசுரங்கள் உருவாக்குதல் போன்ற அனுபவம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் திறன் தொடர்பு கொள்ளும் திறன், விளக்கக் காட்சி திறன், தமிழ் கிராமிய கலாச்சாரம் பற்றிய புரிதல் ஆகியவற்றில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இப்பதவிக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, புதுக்கோட்டை என்ற முகவரிக்கு வருகிற 21-ந்தேதி மாலை 5 மணிக்குள் அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும் என்று கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்து உள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட உள்ளது
    • மாவட்ட கலெக்டர் கலெக்டர் கற்பகம் அழைப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு அரசு பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோருக்கென பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் விரிவாக்கம் செய்ய விரும்பும் தொழில் முனைவோர் நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.மொத்த திட்டத்தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். அதிகபட்சம் 1.50 கோடிக்கு மிகாமல் முதலீட்டு மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • அரியலூரில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அழைப்ப விடுத்துள்ளார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு ராபி மற்றும் சிறப்பு பருவங்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் "யுனிவர்சல் சோம்ப்போ ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்" என்ற முகமையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் சிறப்பு பருவத்தில், நெல், பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையார்பாளையம், தா.பழூர், சுத்தமல்லி, அரியலூர், நாகமங்கலம், ஏலாக்குறிச்சி,  கீழப்பழூர், மாத்தூர், செந்துறை, நாகமங்கலம், பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், திருமானூர், ஆர்.எஸ்.மாத்தூர் ஆகிய பிர்காக்களிலும் பயிர் காப்பீடு செய்ய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் ராபி பருவத்தில் உளுந்து பயிருக்கும் பயிர் காப்பீடு செய்துகொள்ளவும் அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே பருத்தி பயிருக்கு அக்.31 ஆம் தேதி வரையிலும், நெல் மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு நவ.15 ஆம் தேதி வரையிலும், உளுந்து பயிருக்கு நவ.30 ஆம் தேதி  வரையிலும், நிலக்கடலை பயிருக்கு பிப்.15 ஆம் தேதி வரையிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். 

    • 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் டைடல் பார்க் வடிவமைப்பு தயாரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு
    • 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் டைடல் பார்க் வடிவமைப்பு தயாரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு

    திருச்சி,

    தமிழகத்தின் மையப்பகு தியான திருச்சியில் எளிதாக தொடர்பு மற்றும் இணைப்பு போக்குவரத்து வசதிகள் குறைந்த செலவு ஆகியவறறின் அடிப்படையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை வளர்ந்துள்ளன. திருச்சியை பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய செய்யும் வகையில் ரூ.600 ேகாடி மதிப்பீட்டில், எல்காட் மற்றும் டிட்கோ நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென் பொருள் நிறுவனங்கள் மையமான டைடல் பார்க் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்ப ட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி யில் டைடல் ப ார்க் அமைக்க வாய்ப்புள்ள இடங்களை சென்னை டைடல் பார்க் நிறுவன அதிகாரிகள் குழுவி னர் பார்வையிட்டனர். அதன்பிறகு திருச்சி- மதுரை சாலையில் 14 ஏக்கர் நிலம் கேட்டு டைடல் பார்க் சார்பில், மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பேரில் தற்போது பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் பஞ்சப்பூரிலேயே மாநகராட்சி க்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை வழங்க மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க ப்பட்டது. இதைத் தொடர்ந்து, இப்ப ணியின் அடுத்த கட்டமாக 10 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்ட வடிவமை ப்புக்கான நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை டைடல் பார்க் நிறுவனம் தொடங்கியுள்ளது. இது குறித்து அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கை யில், திருச்சியில் பஞ்சப்பூர் பகுதியில் 10 ஆயிரம் இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் முதற்க ட்டமாக 5.5 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொட ங்கி நடந்து வருகிறது.

    • தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் பதிவு செய்து விற்பனை செய்தால் அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
    • நாட்டின் எந்த பகுதிகளில் இருந்தும் விளைபொருட்களை விற்பனை மற்றும் கொள்முதல் செய்து கொள்ளலாம்.

    திருப்பூர்,செப்.26-

    மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கு பொங்கலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    இது குறித்து பொங்கலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் அழகிரி சாந்தலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகள் தங்களது விளைபொருட்களான மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, சோளம், கொப்பரை உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களையும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் பதிவு செய்து விற்பனை செய்தால் அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.ஏனெனில் இத்திட்டத்தின் மூலம் நாட்டின் எந்த பகுதிகளில் இருந்தும் விளைபொருட்களை விற்பனை மற்றும் கொள்முதல் செய்து கொள்ளலாம்.இதனால் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

    இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 0421-2316076 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

    • அரியலூரில் ஒருங்கிணைப்பாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் மீட்கப்பட்ட கொத்தடிமைக்களுக்கான மறுவாழ்வு திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டுக்கு பணிபுரிந்திட 1 மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும். களப்பணியில் 3 முதல் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். மக்கள் தொடர்பியல் மற்றும் பேச்சு ஆற்றல் உள்ளவராக இருத்தல் வேண்டும். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

    ஓட்டுநர் உரிமம் பெற்று இரு சக்கர வாகனம் வைத்திருத்தல் வேண்டும். மாத மதிப்பூதியமாக ரூ.15,000 மற்றும் பயணப்படி ரூ.5,000 வழங்கப்படும்.

    வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மீட்கப்பட்ட கொத்தடிமையினராகவோ, பழங்குடியினரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.மாத மதிப்பூதியமாக ரூ.3,000 மற்றும் பயணப்படி ரூ.1,000 வழங்கப்படும். விண்ணப்பங்கள் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ இணை இயக்குநர் , திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், அரியலூர்- 621704, என்ற முகவரிக்கு 22ந்தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    ×