search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்க அழைப்பு
    X

    அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்க அழைப்பு

    • விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயத்திற்கான அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • 100 பேர் வரை குழுவாக இணைய முடியும் என விளக்கம்

    வேலாயுதம்பாளையம்,

    இயற்கை வேளாண் முறையில் விவசாயிகள் அங்ககச் சான்று பெறுவதற்கு தற்சமயம் கட்டணமின்றி தேசிய பங்கேற்பு உத்திரவாத திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இயற்கை விவசாயம் செய்யும் ஒரு கிராமம் அல்லது அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தாங்களாகவே 7முதல் 25 பேர் வரை கொண்ட ஒரு குழுவாக இணைய வேண்டும். இதில் அதிகபட்சம் 100 பேர் வரை குழுவாக இணைய முடியும். இவ்வாறு இணையும் குழுவினர் அங்கக முறைப்படி விவசாயம் செய்வோம் என்ற உறுதிமொழி ஏற்று இத்திட்டத்தில் இணையலாம். இவ்வாறு ஏற்படுத்தப்படும் குழுக்களுக்கு தலைவர், செயலாளர் ஆகியோரை தேர்வு செய்வதுடன் குழுவுக்கு தனியாக பெயர் வைக்க வேண்டும். பின்னர் குழு உறுப்பினர்களின் பெயர், கிராமம், பட்டா, ஆதார் எண், போட்டோ மற்றும் நிலவுடமை ஆவணங்களுடன் பங்கேற்பாளர் உறுதியளிப்பு திட்டத்தில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அந்த விண்ணப்பத்தினை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×