தானேயில் 212 சட்டவிரோத குடிநீர் இணைப்பு துண்டிப்பு

குடிசைப்பகுதிகளில் அதிகளவில் சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.தானேயில் மேலும் பல இடங்களில் சோதனை நடத்தப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.
தானேயில் 212 சட்டவிரோத குடிநீர் இணைப்பு துண்டிப்பு
Published on

தானே:

தானே மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் சட்டவிரோதமாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக மும்ரா, திவா குடிசைப்பகுதிகளில் அதிகளவில் சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தநிலையில் தானே மாநகராட்சியினர் மும்ரா, திவா பகுதியில் 4 நாட்கள் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு இருந்த 212 குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு துண்டிக்கப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுபோல தானேயில் மேலும் பல இடங்களில் சோதனை நடத்தப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com