என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
- தொற்று பரவாமல் இருக்க அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராம ஊராட்சி மேலத்தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த வீராச்சாமி (வயது 53), தெய்வானை (46), பூமிநாதன் (39)ஆகியோருக்கு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதுகுறித்து, தகவலறிந்த ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
மேலும், தொற்று பரவாமல் இருக்க அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு, நலக்கல்வியும் பயிற்றுவிக்கப்பட்டது.
Next Story






