என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nipah virus"
- கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவ என்ன காரணம் என்பதை கண்டறியும் பணியில் மத்திய குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
- மொத்தம் 12 வவ்வால்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியபோது, அங்கு டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பரவியது. காய்ச்சல் பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கானோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவியது.நிபா வைரஸ் பாதித்து 2 பேர் அடுத்தடுத்து பலியாகினர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் சிலருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. நிபா தொற்று பரவலை கட்டுப்படுத்த கோழிக்கோடு மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டனர்.
அவர்கள் தொற்று பாதித்த பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்தனர். அந்த பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.
புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே, அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக தளர்த்தப்பட்டன. கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவ என்ன காரணம் என்பதை கண்டறியும் பணியில் மத்திய குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் தொற்று பாதித்த பகுதிகளில் இருந்த தோட்டங்களில் தங்கியிருக்கும் வவ்வால்களின் மாதிரிகளை சேகரித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிசோதனைக்கு அனுப்பி இருந்தனர். மொத்தம் 12 வவ்வால்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
அவற்றில் சில வவ்வால்களுக்கு நிபா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் வவ்வால்கள் மூலமாகவே கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இது குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, "கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவியதற்கு வவ்வால்கள் தான் காரணம் என்பது உறுதியாகி உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதனை உறுதிப்படுத்தி மின்னஞ்சல் அனுப்பி உள்ளது" என்று தெரிவித்தார்.
- கட்டுப்பாட்டு மண்டலங்களை சேர்ந்தவர்கள் மறுஉத்தரவு வரும் வரை முகக்கவசம் அணியவும், சானிடைசரை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.
- பொதுக்கூட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அக்டோபர் 26-ந்தேதி வரை நீடிக்கும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதித்து 2 பேர் பலியாகினர். இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயார் செய்து, அவர்களில் நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு நிபா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதித்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கண்டறியப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலையை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனர்.
அவர்களில் நோய் அறிகுறிகள் இருந்த பலருக்கு நிபா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தொடர் விடுமுறை விடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், அவ்வாறே வந்து செல்கின்றனர்.
மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வசித்த பகுதியாக கண்டறியப்பட்ட 9 பஞ்சாயத்துகளில் குறிப்பிட்ட வார்டுகளில் மட்டும் கட்டுப்பாடுகளில் தளர்வு எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் 2 வாரங்களுக்கு மேலாக புதிதாக நிபா வைரஸ் தொற்று பாதிப்பு எதுவும் இல்லாததால் அந்த பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் கட்டுப்பாட்டு மண்டலங்களை சேர்ந்தவர்கள் மறுஉத்தரவு வரும் வரை முகக்கவசம் அணியவும், சானிடைசரை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.
அதேபோன்று பொதுக்கூட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அக்டோபர் 26-ந்தேதி வரை நீடிக்கும் என்றும், பொது நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் அனுமதி பெற வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
- கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே தேனி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
- கேரள எல்லையான குமுளி, தேக்கடியில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது.
கூடலூர்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 2பேர் உயிரிந்தனர். 4பேருக்கு மேல் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழக எல்லைப்பகுதியான குமுளி, கம்பம் மெட்டு, போடி, மெட்டு பகுதிகளிலும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே தேனி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கேரளா சுற்றுலா பயணத்தை பலரும் ரத்து செய்துள்ளனர். இதனால் கேரள எல்லையான குமுளி, தேக்கடியில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. இதேபோல் வாகமன், ராமக்கல் மெட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் இதேநிலை உள்ளது.
இதனால் ஓட்டல், தங்கும் விடுதி, ஜீப் சவாரி உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
- கோழிக்கோட்டில் நிபா தொற்று பாதிப்பு இல்லாமல் இயல்புநிலை திரும்பியிருக்கிறது.
- மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதித்து 2 பேர் பலியாகினர். இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் காதாரத்துறை உடனடியாக களத்தில் இறங்கியது.
தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயார் செய்து, அவர்களில் நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு நிபா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதித்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கண்டறியப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலையை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனர்.
அவர்களில் நோய் அறிகுறிகள் இருந்த பலருக்கு நிபா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதனால் சுகாதாரத்துறையினர் நிம்மதியடைந்தனர். தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
அதிலும் தொற்று பாதித்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வசித்த பகுதிகளாக கண்டறியப்பட்ட 9 பஞ்சாயத்துகள் மற்றும் மாநகராட்சி பகுதியில் 100 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
இந்நிலையில் புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால் கோழிக்கோடு மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
கோழிக்கோட்டில் நிபா தொற்று பாதிப்பு இல்லாமல் இயல்புநிலை திரும்பியிருக்கிறது. இதனால் கல்வி நிலையங்கள் இன்று மீண்டும் திறக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார். அதன்படி பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்டன.
கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.
தொற்று பாதிப்புக்கு உள்ளான கட்டுப்பாட்டு மண்டலங்களில் செயல்படும் பள்ளி-கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் மட்டும் இன்று திறக்கப்படவில்லை. அந்த கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடந்தன.
- புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால் கோழிக்கோடு மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன.
- கடைகள் திறப்பு நேரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதித்து 2 பேர் அடுத்தடுத்து பலியாகினர். இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயார்செய்து, அவர்களில் நோய் அறிகுளிகள் உள்ளவர்களுக்கு நிபா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் முதலில் இறந்த நபரின் 9 வயது மகன், மைத்துனர், சுகாதார பணியாளர் உள்பட மேலும் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதித்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்ததாக 1,200பேர் கண்டறியப்பட்டனர். அவர்களில் நோய் அறிகுறிகள் இருந்த பலருக்கு நிபா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
அதிலும் தொற்று பாதித்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வசித்த பகுதிகளாக கண்டறியப்பட்ட 9 பஞ்சாயத்துகள் மற்றும் மாநகராட்சி பகுதியில் 100 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
இந்நிலையில் புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால் கோழிக்கோடு மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. கடைகள் திறப்பு நேரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் கடந்த 10 நாட்களாக கல்வி நிலையங்கள் அனைத்ததும் அடைக்கப்பட்டிருந்தன.
மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் புதிதாக தொற்று பாதிப்பு இல்லாத காரணத்தால் பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களையும் நாளை மீண்டும் திறக்க கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் கீதா உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் கல்வி நிலையங்களுக்கு முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் பயன்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் வகுப்பறை நுழைவு வாயில்களில் சானிடைசரை வைக்கவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் செயல்படும் பள்ளி-கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும் வரை ஆன்லைனில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் உடல்நல பாதிப்பு ஏற்படுவோருக்கு நிபா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது.
- நேற்று 7-வது நாளாக யாருக்கும் புதிதாக தொற்று பாதிப்பு இல்லை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதித்து 2 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதையடுத்து உஷாரான சுகாதாரத்துறை அதிகாரிகள், கோழிக்கோட்டில் முகாமிட்டு தொற்று பாதித்து பலியானவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்தனர். அவர்களில் பலருக்கு நிபா சோதனை நடத்தப்பட்டதில், மேலும் 4 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் உடல்நல பாதிப்பு ஏற்படுவோருக்கு நிபா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் புதியதாக யாருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. நேற்று 7-வது நாளாக யாருக்கும் புதிதாக தொற்று பாதிப்பு இல்லை.
இருந்தபோதிலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- வாலிபருக்கு நிபா வைரஸ் தொற்று என வதந்தி உலா வருகிறது.
- வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். புதுவையில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை.
புதுச்சேரி:
கேரள மாநிலம் கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 150-க்கும் மேற்பட்டோர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிபா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கேரளா அரசு விதித்துள்ளது.
மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (24-ந் தேதி) வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கேரளா மாநிலத்தையொட்டி உள்ள புதுச்சேரி மாநிலம் மாகி பிராந்தியத்திலும் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒரு வாலிபர் கடந்த வாரம் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வந்துள்ளார்.
அதன்பிறகு, அவருக்கு அதிக காய்ச்சல், சளி, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதால், தற்போது அந்த வாலிபர் உடல்நிலை தேறி வருகிறார்.
இருப்பினும், அவர் கேரளாவுக்கு சென்று வந்ததால் நிபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய அந்த நபருக்கு உமிழ்நீர், சிறுநீர், பிளாஸ்மா மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-
ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபருக்கு நிபா வைரஸ் தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
எனவே, சமூக வலைதளங்களில் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வாலிபருக்கு நிபா வைரஸ் தொற்று என வதந்தி உலா வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். புதுவையில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தொற்று பாதித்த பகுதிகளாக கண்டறியப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.
- தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த பலருக்கு நிபா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கு அடுத்தடுத்து 2 பேர் இறந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறையினர் சேகரித்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
அதில் நிபா வைரஸ் பாதித்து முதலில் பலியான மருதோன்கரை பகுதியை சேர்ந்த நபரின் 9 வயது மகன் மற்றும் மைத்துனருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 24 வயது மதிக்கத்தக்க சுகாதார பணியாளர், 39 வயது மதிக்கத்தக்க நபர் என மேலும் இருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனால் கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்புக்குள்ளான 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்த கோழிக்கோடு மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
பொது மக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. பள்ளி-கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. டியூசன் மற்றும் பயிற்சி மையங்களும் மூடப்பட்டன. தொற்று பாதித்த பகுதிகளாக கண்டறியப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.
நிபா வைரஸ் தொற்றுடன் காணப்பட்ட 23பேர் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த பலருக்கு நிபா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை.
இதனால் கோழிக்கோடு மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 9 பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.
மேலும் அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் சந்தைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வங்கிகள் மற்றும் கருவூலங்கள் மதியம் 2 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதே நேரத்தில் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் முக கவசம் அணிவது, சானிடைசரை பயன்படுத்துவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
நிபா வைரஸ் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலில் நேற்றைய நிலவரப்படி 981 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்ததாக சுமார் 1,200 பேர் கண்டறியப்பட்டனர்.
- கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பரவியதற்கான காரணத்தை கண்டறிய 36 வவ்வால்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கு அடுத்தடுத்து 2 பேர் பலியானார்கள். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்ததாக சுமார் 1,200 பேர் கண்டறியப்பட்டனர்.
அவர்களின் உடல்நிலையை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுவரை 323 பேருக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 317 பேரின் பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்திருப்பது மாநில சுகாதாரத்துறையினர் மட்டுமின்றி, மக்களுக்கும் நிம்மதியை தந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பரவியதற்கான காரணத்தை கண்டறிய 36 வவ்வால்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அதில் வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிய வந்துள்ளது.