search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pets"

    • 7 மடங்கு அதிகமான சத்தத்தை விலங்குகள் உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    • குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

    ஒளிரும் பட்டாககளும், அவை எழுப்பும் சத்தங்களும் பண்டிகையை உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் கொண்டாட வழிவகுக்கும். அதேநேரம் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பட்டாசுகளின் திடீர் வெளிச்சமும், அதிர வைக்கும் சத்தமும் அச்சுறுத்தலாகவே அமையும்.

    பட்டாசுகள் வெடிக்கும்போது நாம் கேட்பதை விட, 7 மடங்கு அதிகமான சத்தத்தை செல்லப் பிராணிகள் உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய திடீர் சத்தங்கள் அவற்றின் உயிருக்கே ஆபத்தாகவும் மாற வாய்ப்பு உள்ளது. தீபாவளியின் போது பட்டாசு சத்தத்தில் இருந்து உங்கள் செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக வைத்திருக்க சில குறிப்புகள்.

    தீபாவளி பண்டிகை அன்று அனைவரும் பட்டாசு வெடிக்கத் தொடங்கும் நேரத்துக்கு முன்பாகவே, உங்கள் செல்லப்பிராணிகளை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லுங்கள். இதனால் வெடிகளின் பயத்தில் இருந்து அவை தப்பிக்க முடியும். அதேபோல பட்டாசு சத்தத்துக்கு உங்கள் செல்லப்பிராணி அதிகமாக பயப்படும் என்று நீங்கள் எண்ணினால், முன்னதாகவே கால்நடை மருத்துவரை அணுகி அதன் பதற்றத்தை குறைப்பதற்கான மருத்துகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

    தீபாவளி அன்று ஏற்றிவைக்கும் தீபங்கள் மற்றும் அலங்கார மெழுகுவர்த்திகளை, செல்லப்பிராணிகள் இருக்கும் இடங்களுக்கு அருகில் வைப்பதை தவிர்க்கவும். பட்டாசு சத்தத்துக்கு பயந்து உங்கள் செல்லப்பிராணி சோபா, கட்டில் போன்றவற்றுக்கு அடியில் ஒளிந்துகொள்ள நேரிடலாம். அத்தகைய சமயங்களில் அவற்றை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியே இழுத்து வருவதைத் தவிர்க்கவும். அவை அந்த சூழ்நிலையை இயல்பாக கையாள்வதற்கு உதவி செய்யவும்.

    பலரும் மொட்டை மாடிகளில் கூண்டு அமைத்து முயல்களை வளர்க்கிறார்கள். தீபாவளி பண்டிகை சமயத்தில் மட்டும் வீட்டுக்குள்ளேயே அவற்றுக்கு பாதுகாப்பான முறையில் கூண்டுகள் அமைத்து பராமரிக்கலாம்.

    பட்டாசு சத்தத்தால் விலங்குகளும், பறவைகளும் பாதிக்கப்படுவதை உங்களது குழந்தைகளுக்கு தெரிவித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இது வருங்காலத்தில் விலங்குகளின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.

    • செல்லப்பிராணி ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 பணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும்.
    • செல்லப்பிராணிகள் சாலையில் திரிவது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் வளர்க்கும் பொதுமக்கள் அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்க உரிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரிமம் பெற்று செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஈடுபட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    தமிழ்நாடு அர்பன் லோக்கல் பாடி ரூல்ஸ் 2023-ன் படி செல்லப்பிராணி ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வீதம் பணம் செலுத்தி உரிய உரிமம் பெற்று, அதில் கூறப்பட்டுள்ள சட்டதிட்டங்க ளுக்கு உட்பட்டு செல்லப்பி ராணிகள் வளர்ப்பில் ஈடுபட அறிவுறுத்த ப்படுகிறார்கள்.

    உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்ப்பதும், அவைகள் சாலையில் திரிவதும் கண்டறிய ப்பட்டால் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் வளர்ப்பு பிராணிகள் பறிமுதல் செய்யப்ப டுவதுடன், சட்டவிதி களின்படி வளர்ப்பு பிராணிகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மனிதர்களைப் போன்று செல்லப்பிராணிகளையும் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்துவிட்டு படையல் செய்தும் வழிபட்டு வருகிறார்கள்.
    • புளூ கிராஸ் அமைப்பின் சார்பிலும் செல்ல பிராணிகளை தகனம் செய்து கொடுத்து வருகிறார்கள். இதற்காக இணையதள முகவரியில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

    சென்னையில் செல்லப் பிராணிகள் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சென்னை மாநகரில் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை தங்களது வீட்டில் ஒருவராகவே எண்ணி வளர்ப்பவர்கள் அதிகம்.

    குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் தொடங்கி அடுக்குமாடிகளில் வசதியாக வாழ்பவர்கள் வரை அத்தனை பேருமே செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறார்கள். தங்களது வசதிகளுக்கு ஏற்ப ரோட்டோர தெரு நாய்கள் முதல் விலை உயர்ந்த ஜாதி நாய்கள் வரை வளர்க்கப்பட்டு வருகிறது.

    இப்படி வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் உயிரிழக்க நேரிடும் போது தங்களது வீட்டில் ரத்த சொந்தத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டது போலவே உணர்கிறார்கள் சென்னை வாசிகள். இதன் காரணமாக மனிதர்களைப் போன்று செல்லப்பிராணிகளையும் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்துவிட்டு படையல் செய்தும் வழிபட்டு வருகிறார்கள்.

    சென்னையில் செல்ல பிராணிகளை அடக்கம் செய்வதற்காகவே கண்ணம்மா பேட்டை சுடுகாடு தனியாக செயல்பட்டு வருகிறது. மயிலாப்பூர் இடுகாட்டிலும் அதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் திரை நட்சத்திரங்கள் முதல் சாதாரண பொது மக்கள் வரை அனைத்து தரப்பினருமே தங்களது செல்ல பிராணிகளை நல்லடக்கம் செய்து வருகிறார்கள்.

    இது போன்ற நேரங்களில் தங்களது வீட்டில் ஒருவர் உயிரிழந்துவிட்டதைப் போன்று அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுவதும் இடுகாட்டை விட்டு பிரிய மனமின்றி திரும்பி திரும்பி பார்த்த வண்ணம் செல்வதும் பரிதாபத்தையே ஏற்படுத்துகிறது.

    இந்த இடுகாட்டில் ஒவ்வொரு மாதமும் 25லிருந்து 30 செல்ல பிராணிகள் வரை அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இந்த இடுகாட்டில் ஸ்ரீவித்யா, சொல்லின் செல்வன் என்கிற இரண்டு கால்நடை உதவி மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்கள் செல்லப்பிராணிகளை இழந்தவர்கள் அதனை கண்ணம்மாபேட்டை இடுகாட்டுக்கு கொண்டு வந்து அடக்கம் செய்வதற்கு முன்பு விண்ணப்ப படிவம் ஒன்று வழங்கப்படுகிறது.

    அதனை பூர்த்தி செய்து ஆதார் கார்டு, செல்ல பிராணிகள் இறந்ததற்கான காரணம் உள்ளிட்ட சான்றிதழுடன் அவைகளை அடக்கம் செய்துவிட்டு கண்ணீருடன் திரும்பிச் செல்கிறார்கள்.

    அடக்கம் செய்த இடம் அருகே சிறிய கல்வெட்டு ஒன்றையும் பொறித்து அதன் புகைப்படங்களையும் பதிவிட்டு எப்போதும் பலர் வணங்கி வருகிறார்கள். சென்னை மாநகராட்சி தலைமை கால்நடை மருத்துவர் கமார்உசேன் மேற்பார்வையில் இந்த இடுகாடு செயல்பட்டு வருகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு முதல் செல்லப் பிராணிகளுக்காக தனியாக கண்ணம்மாபேட்டையில் இடுகாடு உருவாக்கப்பட்டு இப்போது அங்கு ஏராளமான செல்ல பிராணிகள் புதைக்கப்பட்டுள்ளன. தாங்கள் ஆசை ஆசையாய் வளர்த்த செல்லப்பிராணிகளுக்காக அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் வாரா வாரமோ, மாதத்துக்கு ஒரு முறையோ, 15 நாட்களுக்கு ஒரு முறையோ என தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்லப் பிராணிகளை வளர்த்து இழந்தவர்கள் படையல் செய்து வழிபடவும் மறப்பதில்லை.

    செல்ல பிராணிகள் விரும்பி சாப்பிடும் உணவுகளை எடுத்துக் கொண்டு அடக்கம் செய்யப்பட்ட சமாதி அருகில் வைத்து கண்ணீர் மல்க வழிபட்டு விட்டு அங்கிருக்கும் ஊழியர்களிடம் செல்ல பிராணிகளை வீட்டில் ஒருவனாக நினைத்து வளர்த்து வந்தோம். அவன் இல்லாமல் எங்களால் இருக்கவே முடியவில்லை என்று கண்ணீர் மல்க கூறிச் செல்பவர்களும் உண்டு.

    சென்னை மாநகரில் கண்ணம்மாபேட்டை இடுகாடு செல்ல பிராணிகளுக்காக தனியாகவே செயல்பட்டு வரும் நிலையில் மயிலாப்பூர் இடுகாட்டில் ஒரு பகுதியும் செயல்பட்டு வருகிறது. அங்கும் செல்ல பிராணிகள் புதைக்கப்பட்டு வருகின்றன.

    இப்படி சென்னை மாநகர் முழுமைக்குமே செல்லப் பிராணிகள் அடக்கம் செய்யும் இந்த இரண்டு இடங்கள் மட்டுமே உள்ளது. இதனை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே செல்லப் பிராணிகளை வளர்ப்போர் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "விரைவில் அது தொடர்பாக ஆலோசித்து அனைத்து பகுதிகளிலும் அது சாத்தியமா? என்பதை கண்டறிந்து செல்ல பிராணிகளுக்கான இடுகாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

    இது தொடர்பாக பெருங்குடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது எனது வீட்டில் செல்லமாக வளர்த்த நாய் இறந்ததையடுத்து அதை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள இடுகாட்டுக்கு சென்றோம். ஆனால் அங்கு புதைப்பதற்கு இடம் தரவில்லை. இதையடுத்து பெருங்குடி குப்பை கிடங்கு பகுதிக்கு சென்று நான் புதைத்தேன் என்று வேதனையோடு குறிப்பிட்டார்.

    சென்னையில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் தனி வீடுகளை வைத்திருந்தால் தங்களது வீடு வளாகத்திலேயே அதனை புதைத்து வருகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வசிப்பவர்களுக்கு அது சாத்தியமில்லை.

    அதுபோன்ற நபர்களே ஆசை ஆசையாக வளர்த்த செல்லப்பிராணிகளை தெருவில் தூக்கி வீசுவதற்கு மனமின்றி முறைப்படி அடக்கம் செய்து வழிபட்டு வருகிறார்கள்.

    புளூ கிராஸ் அமைப்பின் சார்பிலும் செல்ல பிராணிகளை தகனம் செய்து கொடுத்து வருகிறார்கள். இதற்காக இணையதள முகவரியில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும். அவர்கள் செல்லப்பிராணிகளின் உடலை எரித்து சாம்பலை அதன் உரிமையாளர்களிடம் கொடுத்து விடுவார்கள்.

    கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து புளூ கிராஸ் அமைப்பினர் இந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் செயல்பட்டு வரும் இடுகாடுகளில் செல்லப்பிராணிகளுக்காக தனி இடத்தை ஒதுக்கி கொடுத்து அவர்களுக்கும் உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்பதே விலங்குகள் நல ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கருத்து கேட்டபோது விரைவில் கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் விலங்குகளை தகனம் செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்படுகிறது விலங்கு கள் நல ஆர்வலர்கள் குறிப்பிடுவது போல அனைத்து பகுதிகளிலும் செல்ல பிராணிகளை அடக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

    வாயில்லா ஜீவன்களான செல்லப் பிராணிகள் பல சாலையோரம் இறந்த பிறகு தூக்கி வீசப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். வரும் காலங்களில் அது போன்று இல்லாமல் செல்ல பிராணிகளுக்கும் இறந்த பிறகு உரிய மரியாதையை தர வேண்டும் என்கிற விலங்குகள் நல ஆர்வலர்களின் கோரிக்கை நியாயமானதாகவே உள்ளது. அவர்களும் நம் செல்ல சொந்தங்கள் தானே....

      ஏற்காடு:

      சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46-வது கோடைவிழா, மர் கண்காட்சி கடந்த 21-ந் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. நாளையுடன் கோடை விழா நிறைவடையும் நிலையில், பல்வேறு விதமான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்து மலர் கண்காட்சியை ரசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருதால், அலங்கார வளைவுகள் மற்றும் பல்வேறு உருவங்களில் இருந்த மலர்கள் வாடின. இதைய டுத்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நேற்று வாடிய பூக்கள் அனைத்தையும் அகற்றினர்.

      அதற்கு பதிலாக புதிய மலர்கள் கொண்டுவரப்பட்டு, மீண்டும் அலங்கரிக் கப்பட்டது. இதனிடையே, நேற்று மாலை ஏற்காட்டில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

      செல்லப்பிராணிகள்

      கண்காட்சி

      கோடைவிழாவின் 7-ம் நாளான இன்று, மலர்கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டுள்ளதால் ஏற்காடு களை கட்டியுள்ளது. ஏற்காடு அண்ணா பூங்காவில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள மலர்களை அவர்கள் கண்டு ரசித்தனர். மலர்களால் வடிவ மைக்கப்பட்ட பல்வேறு உருவங்கள் முன்பும், வண்ணமயமான மலர்களுக்கு முன்பும் நின்று குடும்பத்துடன் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஏற்காடு படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏற்காட்டில் இன்று சைக்கிள் போட்டி, இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாய் மற்றும் வீட்டு வளர்ப்பு விலங்குகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் காவல்துறையை சேர்ந்த நாய்களுக்கான கீழ்படிதல், சாகச காட்சிகள் ஆகியவைகளும் இடம் பெற்றன. தொடர்ந்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, நாட்டிய நிகழ்ச்சி, நகைச்சுவை பட்டிமன்றம் மற்றும் இன்னிசை கச்சேரியும் நடத்தப்பட்டது.

      • 8 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நாளை (சனிக்கி ழமை) செல்லப்பிராணிகள்‌ நிகழ்ச்சி மற்றும்‌ கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
      • இக்கண்காட்சியில்‌ தேர்ந்தெடுக்கப்படும்‌ சிறந்த செல்லப்‌ பிராணிகளுக்கு பரிசுகள்‌ வழங்கப்படும்‌.

      சேலம்:

      சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46-வது கோடைவிழா நடைபெற்று வருகிறது. 8 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நாளை (சனிக்கி ழமை) செல்லப்பிராணிகள் நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

      இதில் கிளி, பறவைகள், பூனைகள் மற்றும் அல்சேசன், பொமரேனியன், ஜெர்மன் செப்பார்டு, டாபர்மேன், லேபர்டார், பக், புல்டாக், பாக்சர், காக்கர் ஸ்பேனில் டேசன்ட் போன்ற வெளிநாட்டு இன நாய்களும், ராஜபாளையம், கோம்பை, சிப்பிபாறை போன்ற நாட்டின வகை நாய்களும் கலந்து கொள்ள உள்ளன. இதில் காவல்துறையைச் சார்ந்த நாய்களுக்கான கீழ்படிதல், சாகச காட்சிகள் ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.

      இக்கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த செல்லப் பிராணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே, இக்கண்காட்சியில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் உரிமையா ளர்கள் தங்க ளுடைய செல்லப்பிரா ணிகளை பெருமளவில் கொண்டு வந்து பங்கேற்குமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

      • செல்லப்பிராணிகள் உடன் ஒரு ஐந்து நிமிடம் நேரம் செலவழிக்கும்போது மனஅழுத்தம் நீங்கிவிடும்.
      • அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் குடற்புழு நீக்கம், வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.

      தரங்கம்பாடி:

      மயிலாடுதுறையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் "ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி"தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.

      விழாவின் 5-ம் நாளில் மாவட்டத்தில் முதன்முறையாக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது.

      இதில் டாபர்மென், லேப்ரடார், கோல்டன் ரெட்ரைவர், ஸ்பிட்ஸ், போமரேனியன் உள்பட பல வெளிநாட்டு நாய்களும், சிற்பி பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் உள்ளிட்ட உள்நாட்டு நாய்களும் கலந்து கொண்டன.

      நிகழ்ச்சிக்கு சிறப்பு பார்வையாளராக கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

      பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

      வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் ஆகும். நமக்கு அதிகமான மனஅழுத்தம் இருக்கும்போது செல்லப்பிராணிகள் உடன் ஒரு ஐந்து நிமிடம் நேரம் செலவழிக்கும்போது மனஅழுத்தம் நீங்கிவிடும்.

      இக்கண்காட்சி மயிலாடுதுறையில் முதன்முதலாக மிக குறுகிய காலத்தில் நாய்கள் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது என்றார்.

      கண்காட்சியில் கலந்து கொண்ட அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் குடற்புழு நீக்கம், வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.

      மேலும், சிறந்த 10 செல்லப்பிராணிகள் தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் சிறப்பு செய்தனர்

      இதில், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ஈஸ்வரன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      • நாளை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது.
      • 3 மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தங்கள் செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

      தஞ்சாவூர்:

      தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளி–யிட்டுள்ள செய்திக்–குறிப்பில் கூறியிருப்பதாவது:-

      வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தஞ்சை மாவட்ட எஸ்.பி.சி.ஏ. சங்கத்திற்கு சொந்தமான மாதாக்கோட்டையில் உள்ள செல்லப்பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த தடுப்பூசி போடப்படுகிறது. இதனை நான் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறேன்.

      எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி 3 மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தங்கள் செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தி, கொடிய நோயில் இருந்து தங்கள் செல்லப்பிராணிகளை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • முகாமை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தொடங்கி வைக்கிறார்.
      • முகாமில் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

      முத்துப்பேட்டை:

      முத்துப்பேட்டை வட்டார கால்நடைதுறை மருத்துவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

      முத்துப்பேட்டை கால்நடை மருந்தக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி ராஷ்டிரிய கிருஷிவிகாஸ் யோஜனா 2022-23-ம் ஆண்டு திட்டம் சார்பில் வெறிநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நாளை (29-ந்தேதி) நடைபெறுகிறது.

      முகாமை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தொடங்கி வைக்கிறார். இதில் திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணைத்தலைவர் ஆறுமுக சிவக்குமார், ஒன்றியக்குழு தலைவர் கனியமுதா, துணைத்தலைவர் கஸ்தூரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

      இதில் பொதுமக்கள், விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      ×