என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vijayaprabhakaran"

    • தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன.
    • அனைத்து வகை போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கென்னல் கிளப், மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், டாபர்மேன், லேப்ராடர், சிப்பிபாறை, ராஜபாளையம், கோம்பை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 365 நாய்கள் இதில் பங்கேற்றன.

    தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன. இந்த நாய்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக நாய்களின் மோப்பதிறன், பராமரிப்பு முறை, உரிமையாளர்களின் கட்டளைக்கு கட்டுப்படுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. அனைத்து வகை போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த போட்டியில் நாய்களின் சாகச திறமைகளை சுற்றுலா பயணிகள் கண்டு வியப்படைந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வளர்த்த இங்கிலீஸ் ஷட்டர் வகை நாய் தட்டிச்சென்றது. அந்த நாயுடன் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • தே.மு.தி.க. பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கட்சியின் தலைமை நிலைய செயலாளராக பார்த்தசாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாதம்பட்டி கே.வி.மஹாலில் இன்று தே.மு.தி.க. தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதை பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த், அவைத் தலைவராக டாக்டர் இளங்கோவன், பொருளாளராக எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளராக அழகாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.மோகன்ராஜ், துணை செயலாளர்களாக எம்.ஆர்.பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில்குமார், சுபா ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    மேலும் இக்கூட்டத்தில் தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக விஜயபிரபாகரன் நியமிக்கப்பட்டார்.

    இதில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர், தருமபுரி நகர செயலாளர் சுரேஷ், மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.கே.கணேசன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பி.கே.குமார், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், அணி துணை செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அவைத் தலைவர்கள், மாவட்ட பொருளாளர்கள், மாவட்ட துணை செயலாகள், ஒன்றிய, நகர செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் மற்றும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாநில செயலாளர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

    • என்னை நடிக்க வைக்க ஆசைப்பட்டவர் என் தந்தை என விஜயபிரபாகரன் உருக்கம்.
    • காலமும் நேரமும் எப்படி கை கொடுக்கிறது என பார்ப்போம்.

    ஜெட்லியின் சீனப்படமான 'மை பாதர் இஸ் ஏ ஹீரோ' என்கிற படத்தை விஜயகாந்தின் மகன் மூத்த மகன் விஜயபிரபாகன் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், " ஜெட்லியின் சீனப்படமான 'மை பாதர் இஸ் ஏ ஹீரோ' என்ற படம் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும்.

    நானும் அவரும் நடிக்க வேண்டும் என்று அப்பா மிகவும் விரும்பினார்.

    ஆனால் அது நடக்காமலேயே போய்விட்டது. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அந்த படத்தை எடுக்க முடிவு செய்துள்ளேன். காலமும் நேரமும் எப்படி கை கொடுக்கிறது என பார்ப்போம்" என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • எனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டேன்.
    • கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய் விடும் என்று எண்ணினர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூரில் தே.மு.தி.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. விழாவில் விஜயகாந்தின் மகனும், கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில் மறைந்த தனது தந்தையை நினைத்து மேடையிலேயே கண்ணீர் வடித்தார். அதை பார்த்து அங்கு திரண்டு இருந்த தொண்டர்களும், பெண்களும் கண் கலங்கினர்.

    மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் விஜயகாந்த் தொடங்கினார். கட்சிக்கு பெயர் வைக்கும் பொழுது எங்களிடம் பெயர் குறித்து விவாதித்தார். முடிவில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று பெயர் தேர்வு செய்யப்பட்டு இன்று 20 வருடத்தை கடந்து நிற்கிறது.

    இந்த மக்கள் தொண்டு என்றும் தொடரும். தே.மு.தி.க.வை நீங்கள் தூக்கி எறிந்தாலும் சுற்றில் அடித்த பந்துபோல திரும்பி வந்து மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்போம். தே.மு.தி.க. மத, இன, மொழி, பாகுபாடு பார்க்காத கட்சி.

    அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. நான் அரசியலுக்கு வந்திருப்பதால் வாரிசு அரசியல் என்று கூறுவதை ஏற்க முடியாது.

    என்னை மற்ற பெற்றோர்களை போல எனது பெற்றோர்களும் நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும். திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கட்சி தொண்டர்கள் என்னை கட்சி பணிக்கு அழைத்தார்கள்.

    நான் எனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டேன். எனது தாயார், விஜயகாந்த் உயிர் பிரியும் வரை அவரது கையை தனது கைக்குள் வைத்துக் கொண்டார்.

    கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய் விடும் என்று எண்ணினர். மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்த முயன்றனர். ஆனால் தொண்டர்கள் வியர்வை சிந்தி கட்சியை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    எனது தாயார் பிரேமலதா விஜயகாந்த், ஒரு தோளில் கட்சியையும், மறு தோளில் கேப்டனையும், எங்களையும் சுமந்துட்டு தொண்டர்களுக்காக இந்த கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

    நல்லவர்கள் லட்சியம், வெல்வது நிச்சயம். அது என்றுமே தோற்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தே.மு.தி.க. மாநகர், மாவட்ட செயலாளர் சிங்கை சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    மக்களவை தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் நேரடியாக பிரசாரம் மேற்கொள்வார் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். #LSPolls #DMDK #VijayaPrabhakaran #Vijayakanth
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சி கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. குன்னம் அருகே உள்ள செங்குணம், சிறுகுடல், கீழப்புலியூர், பீல் வாடி, எழுமூர், சித்தளி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் துரைகாமராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மலர்மன்னன் முன்னிலை வகித்தார். அதனைத்தொடர்ந்து சித்தளியில் நடைபெற்ற கட்சி உறுப்பினரின் இல்ல விழாவில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தே.மு.தி.க.வை அழிக்க நினைப்பவர்கள் இந்த தேர்தலுடன் அழிந்து விடுவார்கள். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தே.மு.தி.க. குறித்து பேசியதால், தே.மு.தி.க.வின் திருஷ்டி அழிக்கப்பட்டுவிட்டது. தற்போது தே.மு.தி.க. பாசிட்டிவ் எனர்ஜியாக வளர்ந்து வருகிறது.


    மக்களவை தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் நேரடியாக பிரசாரம் மேற்கொள்வார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக எழுமூரில் கட்சி கொடியினை ஏற்றிய விஜயபிரபாகரன், இந்த தேர்தலில் நாம் யார்? என்பதை விஜயகாந்த் வழியில் செயல்பட்டு நிரூபிக்க வேண்டும். தேர்தலில் நம்முடைய நோக்கம் வெற்றியடைய நாம் உறுதியேற்க வேண்டும் என்றார். #LSPolls #DMDK #VijayaPrabhakaran #Vijayakanth
    ×